Devi Geethai 1.45-1.50

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

सर्वज्ञः सर्वकर्ता च, सर्वानुग्रह-कारकः ।
अविद्यायां तु यत्-किञ्चित्, प्रतिबिंबं नगाधिप ॥ ४५॥

ஸர்வஜ்ஞ꞉ ஸர்வகர்தா ச, 
ஸர்வானுக்³ரஹ-காரக꞉ .
அவித்³யாயாம்ʼ து யத்-கிஞ்சித்,
ப்ரதிபி³ம்ப³ம்ʼ நகா³தி⁴ப .. 45..

அந்த ஈஸ்வரன் எல்லாமறிந்தவன், எல்லாம் வல்லவன், எல்லா அனுக்ரகமும் செய்பவன். ராஜா! அவித்தையில் சைதன்யத்தின் ப்ரதிபிம்பம் சிறிதளவே இருக்கிறது.

_________

तदेव जीव-संज्ञं स्यात्, सर्व-दुःखाश्रयं पुनः ।
द्वयोरपीह सम्प्रोक्तं, देह-त्रयम्-अविद्यया ॥ ४६॥

ததே³வ ஜீவ-ஸஞ்ஜ்ஞம்ʼ ஸ்யாத்,
ஸர்வ-து³꞉கா²ஶ்ரயம்ʼ புன꞉ .
த்³வயோரபீஹ ஸம்ப்ரோக்தம்ʼ, 
தே³ஹ-த்ரயம்-அவித்³யயா .. 46..

அவித்தையில் சிறிதளவே சைதன்யத்தின் ப்ரதிபலிப்பு கொண்டது ஜீவன் ஆகும்.
இந்த ஜீவன், எல்லா துக்கங்களுக்கும் இருப்பிடமாக இருக்கிறான்.
ஜீவ-ஈஸ்வரனுக்கு அவித்தையாலேயே ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேகங்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது.

__________

देह-त्रयाभिमानात्-च, अप्यभूत्-नामत्रयं पुनः ।
प्राज्ञस्तु कारणात्मा स्यात्, सूक्ष्मधी तु तैजसः ॥ ४७॥

தே³ஹ-த்ரயாபி⁴மானாத்-ச,
அப்யபூ⁴த்-நாமத்ரயம்ʼ புன꞉ .
ப்ராஜ்ஞஸ்து காரணாத்மா ஸ்யாத்,
ஸூக்ஷ்மதீ⁴ து தைஜஸ꞉ .. 47..

மூன்றுவித தேஹங்களின் அபிமானத்தால் ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் மூன்று நாமங்கள் உள்ளன. காரண சரீர அபிமானியான ஜீவன் ப்ராஜ்ஞன் எனப்படுகிறான்.
ஸுக்ஷ்ம சரீர அபிமானி தைஜஸன் எனப்படுகிறான்.

__________

स्थूल-देही तु विश्वाख्य:, त्रिविधः परिकीर्तितः ।
एवम्-ईशोऽपि सम्प्रोक्त, ईश-सूत्र-विराट्-पदैः ॥ ४८॥

ஸ்தூ²ல-தே³ஹீ து விஶ்வாக்²ய:,
த்ரிவித⁴꞉ பரிகீர்தித꞉ .
ஏவம்-ஈஶோ(அ)பி ஸம்ப்ரோக்த, 
ஈஶ-ஸூத்ர-விராட்-பதை³꞉ .. 48..

ஸ்தூல சரீர அபிமானியாகிய ஜீவன், விஸ்வன் எனப்படுகிறான். இவ்வாறே ஈஸ்வரனும் கூட ஈஶன், ஸுத்ரன்,
விராட் என்ற மூன்று நாமங்களால் அழைக்கப் படுகிறான்.

_________

प्रथमो व्यष्टि-रूपस्तु, समष्ट्यात्मा परः स्मृतः ।
स हि सर्वेश्वरः साक्षात्, जीवानुग्रह-काम्यया ॥ ४९॥

ப்ரத²மோ வ்யஷ்டி-ரூபஸ்து, 
ஸமஷ்ட்யாத்மா பர꞉ ஸ்ம்ருʼத꞉ .
ஸ ஹி ஸர்வேஶ்வர꞉ ஸாக்ஷாத்,
ஜீவானுக்³ரஹ-காம்யயா .. 49..

முதலில் கூறப்பட்ட ஜீவன், தனிப்பட்டவன். ஈஸ்வரனோ அனைத்தும் ஒருங்கிணைந்த ஸமஷ்டி ரூபஸ்தனாக அறியப் படுகிறான். ஜீவன்களுக்கு அனுக்ரகம் செய்யும்
இச்சையால் அவனே ஸாக்ஷாத் ஸர்வேஸ்வரன்.

__________

करोति विविधं विश्वं, नाना-भोगाश्रयं पुनः ।
मच्छक्ति-प्रेरितो नित्यं, मयि राजन्-प्रकल्पितः ॥ ५०॥

கரோதி விவித⁴ம்ʼ விஶ்வம்ʼ, 
நாநா-போ⁴கா³ஶ்ரயம்ʼ புன꞉ .
மச்ச²க்தி-ப்ரேரிதோ நித்யம்ʼ,
மயி ராஜன்-ப்ரகல்பித꞉ .. 50..

என் சக்தியால் உருவான ஈஸ்வரன், ஜீவன்களுக்கு அனுக்ரஹம் செய்யும்
இச்சையால், அனைத்துவித போகங்களையும் அனுபவிக்கும் இடமாக இந்த பலவிதமான லோகத்தை உருவாக்கினார்.

__________

इति श्रीदेवीभागवते, 
देवीगीतायां प्रथमोऽध्यायः ॥

இதி ஶ்ரீதே³வீபா⁴க³வதே, 
தே³வீகீ³தாயாம்ʼ ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ .

இதுவே ஶ்ரீதே³வீ-பா⁴க³வதத்தில், 
தே³வீகீ³தையின் முதல் அத்⁴யாயம்.

__________


Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36