Posts

Showing posts from August, 2024

Devi Geethai 4.26-4.30

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ______ इदानीं कथये तेऽहं, मन्त्र-योगम्-अनुत्तमम् ॥ २६॥ विश्वं शरीरमित्युक्तं, पञ्च-भूतात्मकं नग । चन्द्र-सूर्याग्नि-तेजोभि:, जीव-ब्रह्मैक्य-रूपकम् ॥ २७॥ இதா³னீம்ʼ கத²யே தே(அ)ஹம்ʼ,   மந்த்ரயோக³ம்-அனுத்தமம் .. 26.. விஶ்வம்ʼ ஶரீரமித்யுக்தம்ʼ,  பஞ்ச-பூ⁴தாத்மகம்ʼ நக³ . சந்த்³ர-ஸூர்யாக்³னி-தேஜோபி⁴ர், ஜீவ-ப்³ரஹ்மைக்ய-ரூபகம் ..27.. ______ ஹே பர்வதராஜனே! இப்போது நான் உனக்கு உத்தமமான மந்திரயோகத்தை விளக்குகிறேன். 'விஸ்வம்' எனப்படுகின்ற இந்த ப்ரபஞ்சத்தின் ஸமஷ்டி சரீரம்,  பஞ்ச பூதாத்மகமானது.  சந்திர-சூர்ய-அக்னியின் தேஜஸுடன் கூடி, ஜீவ-ப்ரம்ம-ஐக்ய ரூபமாக திகழ்கிறது. ______ तिस्रः कोट्यस्तदर्धेन, शरीरे नाडयो मताः । तासु मुख्या दश प्रोक्ता:, ताभ्यस्तिस्रो व्यवस्थिताः ॥ २८॥ திஸ்ர꞉ கோட்யஸ்-தத³ர்தே⁴ன,  ஶரீரே நாட³யோ மதா꞉ . தாஸு முக்²யா த³ஶ ப்ரோக்தா:, தாப்⁴யஸ்-திஸ்ரோ வ்யவஸ்தி²தா꞉ .. 28. இச்சரீரத்தில் மூன்றரை கோடி நாடிகள் உள்ளன. இவற்றுள் முக்கியமானவை பத்து நாடிகள். அவற்றுள்ளும் மூன்று நாடிகள் மிக முக்கியமானவை. ______ प्रधाना मेरु-दण्डेऽत्र, चन्...

Devi Geethai 4.19-4.25

  श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ______ जपध्यानादिभिः सार्थं, सगर्भं तं विदुर्बुधाः । तदपेतं विगर्भं च, प्राणायामं परे विदुः ॥ १९॥ ஜபத்⁴யாநாதி³பி⁴꞉ ஸார்த²ம்ʼ , ஸக³ர்ப⁴ம்ʼ தம்ʼ விது³ர்-பு³தா⁴꞉ . தத³பேதம்ʼ விக³ர்ப⁴ம்ʼ ச, ப்ராணாயாமம்ʼ பரே விது³꞉ .. 19.. உள்ளிழுத்த மூச்சை ஜபத்-தியானதிகளுடன் பூரகத்தில் நிறுத்துவது ஸகர்ப்பம் எனப்படும். ஜபத்-தியானாதிகள் இன்றி செய்யும் ப்ராணாயாமம் விகர்ப்பம் எனப்படும். ______ क्रमादभ्यस्यतः पुंसो, देहे स्वेदोद्गमोऽधमः । मध्यमः कंप-संयुक्तो, भूमि-त्यागः परो मतः ॥ २०॥ उत्तमस्य गुणावाप्तिः, यावच्छीलनमिष्यते ।  க்ரமாத³ப்⁴யஸ்யத꞉ பும்ʼஸோ,  தே³ஹே ஸ்வேதோ³த்³க³மோ-(அ)த⁴ம꞉ . மத்⁴யம꞉ கம்ப-ஸம்ʼயுக்தோ,  பூ⁴மி-த்யாக³꞉ பரோ மத꞉ .. 20.. உத்தமஸ்ய கு³ணாவாப்தி:,  யாவச்-சீ²லனமிஷ்யதே । முறையாக ப்ராணாயாம அப்யாஸம் செய்யும் போது, உடல் வியர்த்தால் அதம அதிகாரி என்றும், உடல் நடுங்குமானால் மத்யமாதிகாரி என்றும்,  உயர்நிலையில் உடல் பூமியிலிருந்து மேலெழும்புமானால், உத்தமாதிகாரி என்றும் கூறப்படுவர். இவ்வாறு ப்ராணாயாமத்தை உயர்நிலை அடையும் வரையில் முறையாக...

Devi Geethai 4.15-4.18

 श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ ईडयाकर्षयेद्वायुं, बाह्यं षोडश-मात्रया धारयेत्पूरितं योगी, चतुःषष्ट्या तु मात्रया ॥ १५॥ ஈட³யாகர்ஷயேத்³-வாயும்ʼ, பா³ஹ்யம்ʼ ஷோட³ஶ-மாத்ரயா தா⁴ரயேத்-பூரிதம்ʼ யோகீ³, சது꞉ஷஷ்ட்யா து மாத்ரயா .. 15.. வெளியிலிருந்து வாயுவை, இடகலை வழியாக, பதினாறு மாத்திரையளவு மூச்சில் உள்ளிழுக்க வேண்டும். உள்ளிழுத்த மூச்சை அறுபத்தி நான்கு மாத்திரையளவு ஸுஷும்னா நாடி மத்தியில் (சுழுமுனை) பூரகத்தில் நன்றாக நிறுத்த வேண்டும். ______ सुषुम्ना-मध्यगं सम्य, द्वात्रिंशन्मात्रया शनैः ॥ १६॥ नाड्या पिङ्गलया चैव, रेचयेद्योग-वित्तमः । ஸுஷும்நாமத்⁴யக³ம்ʼ ஸம்ய, த்³வா-த்ரிம்ʼஶன்-மாத்ரயா ஶனை꞉ .. 16.. நாட்³யா பிங்க³லயா சைவ, ரேசயேத்³-யோக³-வித்தம꞉ . உள்ளிருத்திய மூச்சை, முப்பத்து இரண்டு மாத்திரையளவு மெதுவாக பிங்கள நாடி வழியாக வெளிவிட்டு, ரேசகத்தில் மூச்சையடக்குவர் யோகவித்தகர்கள். ______ प्राणायाममिमं प्राहुः, योग-शास्त्र-विशारदाः ॥ १७॥ ப்ராணாயாமமிமம்ʼ ப்ராஹு:, யோக³-ஶாஸ்த்ர-விஶாரதா³꞉ .. 17.. இதுவே ப்ராணாயாமம், என்று யோகசாஸ்த்திர விஶாரதர்களால் கூறப்பட்டது. ______   भूयो भूय...

Devi Geethai 4.6-4.14

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ अहिंसा सत्यम्-अस्तेयं, ब्रह्मचर्यं दयाऽऽर्जवम् । क्षमा धृतिर्-मिताहारः, शौचं चेति यमा दश ॥ ६॥ அஹிம்ʼஸா ஸத்யம்-அஸ்தேயம்ʼ,  ப்³ரஹ்மசர்யம்ʼ த³யா(ஆ)ர்ஜவம் . க்ஷமா த்⁴ருʼதிர்-மிதாஹார꞉,  ஶௌசம்ʼ சேதி யமா த³ஶ .. 6.. அஹிம்சை, ஸத்யம், களவில்லாம்மை, ப்ரஹ்மசர்யம், தயை, சன்மார்க்கம் , பொறுமை, தைரியம், மிதமான ஆஹாரம், சுத்தம் ஆகிய பத்தும் யமம். ______ तपः सन्तोष आस्तिक्यं, दानं देवस्य पूजनम् । सिद्धान्त-श्रवणं चैव, ह्रीर्मतिश्च जपो हुतम् ॥ ७॥ தப꞉ ஸந்தோஷ ஆஸ்திக்யம்ʼ,  தா³னம்ʼ தே³வஸ்ய பூஜனம் . ஸித்³தா⁴ந்தஶ்ரவணம்ʼ சைவ,  ஹ்ரீர்மதிஶ்ச ஜபோ ஹுதம் .. 7.. தவம், ஸந்தோஷம், வேதவாக்கில் பற்று,  தானம், தேவ பூஜை, ஸித்தாந்த ஸ்ரவணம், நாணம், நல்புத்தி, ஜபம், ஹோமம் ஆகிய பத்தும் நியமம். ______ दशैते नियमाः प्रोक्ता, मया पर्वत-नायक । த³ஶைதே நியமா꞉ ப்ரோக்தா, மயா பர்வத-நாயக . பர்வதநாயக! இவை பத்தும் நியமங்கள் என்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ______ पद्मासनं स्वस्तिकं च, भद्रं वज्रासनं तथा ॥ ८॥ वीरासनम्-इति प्रोक्तं, क्रमाद्-आसन-पञ्चकम् । பத்³மாஸனம்ʼ ஸ்வ...