Posts

Showing posts from May, 2023

Devi Geethai 3.30-3.34

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ उपाधि-विलये जाते, केवलात्मा-अवशिष्यते । देह-त्रये पञ्च-कोशाः, अन्तस्थाः सन्ति सर्वदा ॥ ३०॥ உபாதி⁴-விலயே ஜாதே,  கேவலாத்மா-(அ)வஶிஷ்யதே . தே³ஹத்ரயே பஞ்சகோஶா:,  அந்தஸ்தா²꞉ ஸந்தி ஸர்வதா³ .. 30.. உபாதிகள் நீங்கும்போது, ஆத்மா மாத்திரமே மீதமிருக்கிறது. பஞ்சகோஶங்கள் ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேஹங்களுக்குள்ளேயே எப்போதும் இருக்கின்றன.  _________ पञ्च-कोश-परित्यागे, ब्रह्म-पुच्छं हि लभ्यते । नेति नेतीत्यादि-वाक्यै:, मम रूपं यदुच्यते ॥ ३१॥ பஞ்ச-கோஶ-பரித்யாகே³,  ப்³ரஹ்ம-புச்ச²ம்ʼ ஹி லப்⁴யதே . நேதி நேதீத்யாதி³-வாக்யை:,  மம ரூபம்ʼ யது³ச்யதே .. 31.. பஞ்சகோஶங்களை நீக்கினால், ப்ரம்மனுடைய நுனியை அடையலாம். 'நேதி நேதி' என்ற 'இதுவல்ல இதுவல்ல' போன்ற வாக்கியங்களால் விளக்கப்படுவது, என்னுடைய ப்ரம்ம சித்ரூபமே. _________ न जायते म्रियते वा कदाचित्,      नायं भूत्वा न बभूव कश्चित् । अजो नित्यः शाश्वतोऽयं पुराणः,      न हन्यते हन्यमाने शरीरे ॥ ३२॥ ந ஜாயதே ம்ரியதே வா கதா³சித், நாயம்ʼ பூ⁴த்வா ந ப³பூ⁴வ கஶ்சித் . அஜோ நித்ய꞉ ஶாஶ்வதோ(...

Devi Geethai 3.24-3.29

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ देवदत्तः स एवायम्, इतिवल्लक्षणा स्मृता । स्थूलादि-देह-रहितो, ब्रह्म-सम्पद्यते नरः ॥ २४ ॥ தே³வத³த்த꞉ ஸ ஏவாயம், இதி-வல்லக்ஷணா ஸ்ம்ருʼதா . ஸ்தூ²லாதி³-தே³ஹ-ரஹிதோ, ப்³ரஹ்ம-ஸம்பத்³யதே நர꞉ .. 24 .. 'இவன் தேவதத்தன்' எனும்போது, அவனுடைய லஷணங்களைக் கொண்டு, ஒரு கூட்டத்தினிடையே அவனை அடையாளம் கண்டு கொள்வது போல, ஸ்தூல சரீராதிகளோடும், தத்வங்களோடும் கூடிய ஜீவனை, சின்மாத்ரை லஷணத்தைக் கொண்டு,' இதுதான் ஆன்மா' என்று, அடையாளம் கண்டு, ஸ்தூலாதி தேகங்களை நீக்கி, தன் இனமாகிய ப்ரம்மத்தோடு கூடி, ப்ரம்ம சம்பத்தை அடைகிறான், மனிதன். ________ पञ्चीकृत-महाभूत, संभूतः स्थूल-देहकः । भोगालयो जरा-व्याधि, संयुतः सर्व-कर्मणाम् ॥ २५॥ பஞ்சீக்ருʼத-மஹாபூ⁴த- ஸம்பூ⁴த꞉ ஸ்தூ²ல-தே³ஹக꞉ . போ⁴கா³லயோ ஜரா-வ்யாதி⁴- ஸம்ʼயுத꞉ ஸர்வ-கர்மணாம் .. 25.. மஹா பூதங்களாகிய ப்ருத்வி முதலிய பஞ்சபூதங்களிலிருந்து பஞ்சீக்ருதமாகிய சரீரமே ஸ்தூல தேஹம். இந்த ஸ்தூல தேஹம், ஸர்வ கர்மங்களின் பலனை அனுபவிக்கும் இடமாக இருக்கின்றது. மேலும் அது நரை, மூப்பு, வ்யாதிகளோடு கூடியதாய் உள்ளது. ________ मिथ्या-भूतोऽयम्...

Devi Geethai 3.18-3.23

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ वेदान्त-श्रवणं कुर्यात्, नित्यमेवम्-अतन्द्रितः । तत्त्वमसि-आदि-वाक्यस्य, नित्यमर्थं विचारयेत् ॥ १८॥ வேதா³ந்த-ஶ்ரவணம்ʼ குர்யாத், நித்யமேவம்-அதந்த்³ரித꞉ . தத்த்வமஸி-ஆதி³-வாக்யஸ்ய,  நித்யமர்த²ம்ʼ விசாரயேத் .. 18.. வேதாந்தத்தை தினமும் கவனமாக ஸ்ரவணம் செய்ய வேண்டும். 'தத்வமஸி' என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை தினமும் விசாரம் செய்ய வேண்டும். _________ तत्त्वमस्यादि-वाक्यं तु, जीव-ब्रह्मैक्य-बोधकम् । ऐक्ये ज्ञाते निर्भयस्तु, मद्रूपो हि प्रजायते ॥ १९॥ தத்த்வமஸ்யாதி³-வாக்யம்ʼ து,  ஜீவ-ப்³ரஹ்மைக்யபோ³த⁴கம் . ஐக்யே ஜ்ஞாதே நிர்ப⁴யஸ்து,  மத்³ரூபோ ஹி ப்ரஜாயதே .. 19. தத்வமஸி என்ற மஹா வாக்யம், ஜீவ-ப்ரஹ்ம ஐக்கியத்தை போதிக்கிறது. இந்த ஐக்கியத்தை உணர்ந்தவன், ஜனன-மரண பயமற்று, எனது சொரூப ஸித்தியை அடைகிறான். _________ पदार्थावगतिः पूर्वं, वाक्यार्थावगतिस्-ततः । तत्-पदस्य च वाच्यार्थो, गिरेऽहं परिकीर्तितः ॥ २०॥ பதா³ர்தா²வக³தி꞉ பூர்வம்ʼ வாக்யார்தா²வக³திஸ்தத꞉ . தத்பத³ஸ்ய ச வாச்யார்தோ² கி³ரே(அ)ஹம்ʼ பரிகீர்தித꞉ .. 20.. ஹிமவானே! முதலில் 'தத்வமஸி' என்ற மகா-வாக்ய...

Devi Geethai 3.12-3.17

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ ज्ञानादेव हि कैवल्यम्, अतः स्यात्-तत्-समुच्चयः । सहायतां व्रजेत्-कर्म, ज्ञानस्य हितकारि च ॥ १२॥ ஜ்ஞாநாதே³வ ஹி கைவல்யம், அத꞉ ஸ்யாத்-தத்-ஸமுச்சய꞉ . ஸஹாயதாம்ʼ வ்ரஜேத்-கர்ம,  ஜ்ஞானஸ்ய ஹிதகாரி ச .. 12.. ஞானத்தால் தான் கைவல்யம் ஸித்திஆகும். அதனால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. கர்மம் ஞானத்திற்கு நன்மை செய்வதாய் இருக்கிறது. வேதம் கூறும் படி செய்யப்படும் கர்மம், ஞானத்திற்கு ஸஹாயமாக உடன் செல்கிறது. _________ इति केचिद्-वदन्त्यत्र, तद्-विरोधान्न संभवेत् । ज्ञानाधृद्-ग्रन्थि-भेदः स्यात्, हृद्-ग्रन्थौ कर्म-संभवः ॥ १३॥ இதி கேசித்³-வத³ந்த்யத்ர, தத்³-விரோதா⁴ன்ன ஸம்ப⁴வேத் . ஜ்ஞானாத்⁴ருʼத்³-க்³ரந்தி²-பே⁴த³꞉ ஸ்யாத், ஹ்ருʼத்³-க்³ரந்தௌ² கர்ம-ஸம்ப⁴வ꞉ .. 13.. ஞானமும் கர்மமும் ஒன்றுக்கொன்று முரண்படுவதால், கர்மா ஞானத்திற்கு ஸஹாயமாகாது என்று சிலர் கூறுகின்றனர். ஞானத்தால் ஹ்ருதய க்ரந்தி தளர்வடையும். ஹ்ருதய க்ரந்தி அஞ்ஞான ராக-த்வேஷத்தால் இறுகியுள்ளபோது கர்மம் சம்பவிக்கிறது. _________ यौगपद्यं न संभाव्यं,  विरोधात्तु ततस्-तयोः । तमःप्रकाशयोर्-यद्वत्, यौगपद्यं...

Devi Geethai 3.7-3.11

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ तस्माद्-अज्ञान-नाशाय, यतेत नियतं नरः । एतद्धि जन्म-साफल्यं, यदज्ञानस्य नाशनम् ॥ ७॥ தஸ்மாத்³-அஜ்ஞானநாஶாய,  யதேத நியதம்ʼ நர꞉ . ஏதத்³தி⁴ ஜன்ம-ஸாப²ல்யம்ʼ,  யத³ஜ்ஞானஸ்ய நாஶனம் .. 7.. ஆகையால், மானிடனாய் பிறந்தவன், (ஜனன மரணத்திற்கு மூல காரணமாகிய) அஞ்ஞானத்தை நாசம் செய்யும் விஷயத்தில் நியமம் உள்ளவனாய் முயற்சி செய்ய வேண்டும்.  அஞ்ஞான நாசமே ஜன்ம சாபல்யம் ஆகும். __________ पुरुषार्थ-समाप्तिश्च, जीवन्-मुक्ति-दशाऽपि च । अज्ञान-नाशने शक्ता, विद्यैव तु पटीयसी ॥ ८॥ புருஷார்த²-ஸமாப்திஶ்ச,  ஜீவன்-முக்தி-த³ஶா(அ)பி ச . அஜ்ஞான-நாஶனே ஶக்தா,  வித்³யைவ து படீயஸீ .. 8. அஞ்ஞானம் அழிந்தால், புருஷார்த்தங்கள் முடிவடையும். அஃது உண்டாயின் ஜீவன் முக்தன் ஆக முடியும். அவனே ஜென்ம சாபல்யம் அடைவான். அஞ்ஞானத்தை அழிக்கும் வல்லமை ஞானத்திற்கு மட்டுமே உள்ளது. நியமத்துடன் முயற்சி                    ↓ அஞ்ஞான நாசம்                   ↓  புருஷார்த்த முடிவு   ...

Devi Geethai 3.1-3.6

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________  ॥ अथ तृतीयोऽध्यायः ॥ मोक्षंप्रति ज्ञानस्य आवश्यकता । .. அத² த்ருʼதீயோ(அ)த்⁴யாய: மோக்ஷம்ப்ரதி ஞானஸ்ய ஆவஸ்யகதா  .. இனி மூன்றாவது அத்தியாயம். மோக்ஷத்திற்கு ஞானத்தின் அவசியம். _________ श्रीदेव्युवाच - क्व यूयं मन्द-भाग्या वै, क्वेदं रूपं महाद्भुतम् । तथापि भक्त-वात्सल्याद्, ईदृशं दर्शितं मया ॥ १॥ ஶ்ரீதே³வ்யுவாச - க்வ யூயம்ʼ மந்த³-பா⁴க்³யா வை,  க்வேத³ம்ʼ ரூபம்ʼ மஹாத்³பு⁴தம் . ததா²பி ப⁴க்த-வாத்ஸல்யாத், ஈத்³ருʼஶம்ʼ த³ர்ஶிதம்ʼ மயா .. 1.. தேவி கூறினாள்:  மந்த புத்தி  உடையவர்களாக நீங்கள் உள்ள போதிலும், மகா அற்புதமான என்னுடைய  ரூபம்,  பக்தர்களிடம் எனக்குள்ள கிருபையால் இவ்வாறு என்னால் உங்களுக்கு காண்பிக்கப்பட்டது. __________ न वेदाध्ययनैर्-र्योगैर्, न दानैस्-तपसेज्यया । रूपं द्रष्टुमिदं शक्यं, केवलं मत्कृपां विना ॥ २॥ ந வேதா³த்⁴யயனைர்-யோகை³ர், ந தா³னைஸ்-தபஸேஜ்யயா . ரூபம்ʼ த்³ரஷ்டுமித³ம்ʼ ஶக்யம்ʼ,  கேவலம்ʼ மத்க்ருʼபாம்ʼ வினா .. 2.. என்னுடைய கிருபையின்றி வெறும் வேத அத்யயானம், யோகம் ,தானம் ,தபஸ் முதலியவைகளால் மட்டும் ...

Devi Geethai 2.53-2.56

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ उपसंहर देवेशि, रूपमेतद्-अलौकिकम् । तदेव दर्शयास्माकं, रूपं सुन्दर-सुन्दरम् ॥ ५३॥ உபஸம்ʼஹர தே³வேஶி,  ரூபமேதத்³-அலௌகிகம் . ததே³வ த³ர்ஶயாஸ்மாகம்ʼ,  ரூபம்ʼ ஸுந்த³ர-ஸுந்த³ரம் .. 53.. தேவேஶி! இந்த பயங்கரமான ரூபத்தை விடுத்து, அழகினும் அழகியதான உன் சுந்தர ரூபத்தை எங்களுக்கு காண்பிப்பாயாக. __________ व्यास उवाच - इति भीतान्-सुरान्-दृष्ट्वा, जगदम्बा कृपार्णवा । संहृत्य रूपं घोरं, तद्-दर्शयामास सुन्दरम् ॥ ५४॥ வ்யாஸ உவாச - இதி பீ⁴தான்-ஸுராந்-த்³ருʼஷ்ட்வா,  ஜக³த³ம்பா³ க்ருʼபார்ணவா . ஸம்ʼஹ்ருʼத்ய ரூபம்ʼ கோ⁴ரம்ʼ,  தத்³-த³ர்ஶயாமாஸ ஸுந்த³ரம் .. 54.. வியாசர் கூறினார்:  இவ்வாறு பயந்த தேவர்களைக் கண்ட ஜகதம்பா, கருணை உள்ளம் கொண்டு, அந்த பயங்கர ரூபத்தை மாற்றி, தன்னுடைய சுந்தர ரூபத்தைக் காண்பித்தாள். ___________ पाशाङ्कुश-वराभीतिधरं, सर्वाङ्ग-कोमलम् । करुणा-पूर्ण-नयनं, मन्दस्मित-मुखाम्बुजम् ॥ ५५॥ பாஶாங்குஶ-வராபீ⁴தித⁴ரம்ʼ,  ஸர்வாங்க³-கோமலம் . கருணா-பூர்ண-நயனம்ʼ,  மந்த³ஸ்மித-முகா²ம்பு³ஜம் .. 55 பாசாங்குசமும் வரத-அபயமும் கைகளில் தரித்த...

Devi Geethai 2.45-2.52

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ नमस्ते भुवनेशानि, नमस्ते प्रणवात्मके । सर्व वेदान्त-संसिद्धे, नमो ह्रीङ्कार-मूर्तये ॥ ४५॥ நமஸ்தே பு⁴வனேஶானி,  நமஸ்தே ப்ரணவாத்மகே . ஸர்வ வேதா³ந்த-ஸம்ʼஸித்³தே⁴,  நமோ ஹ்ரீங்கார-மூர்தயே .. 45. புவனேஸியான உனக்கு நமஸ்காரம். பிரணவஸ்ரூபிணியே நமஸ்காரம். சர்வ வேதாந்த சித்தாந்த சொரூபிணியே, ஹ்ரீங்கார ஸ்வரூபிணியே  உனக்கு நமஸ்காரம். __________ यस्माद्-अग्निः समुत्पन्नो, यस्मात्-सूर्यश्च चन्द्रमाः । यस्माद्-ओषधयः सर्वाः, तस्मै सर्वात्मने नमः ॥ ४६॥ யஸ்மாத்³-அக்³னி꞉ ஸமுத்பன்னோ,  யஸ்மாத்-ஸூர்யஶ்ச சந்த்³ரமா꞉ . யஸ்மாத்³-ஓஷத⁴ய꞉ ஸர்வா:, தஸ்மை ஸர்வாத்மனே நம꞉ .. 46 யாரிடமிருந்து அக்னி உண்டாயிற்றோ, யாரிடமிருந்து சந்திர சூரியர்கள் உண்டானரோ, யாரிடமிருந்த மருந்துகள் எல்லாம் உண்டாகினவோ, அந்த ஸர்வாத்மாவுக்கு நமஸ்காரம். __________ यस्माच्च देवाः संभूताः, साध्याः पक्षिण एव च । पशवश्च मनुष्याश्च, तस्मै सर्वात्मने नमः ॥ ४७॥ யஸ்மாச்ச தே³வா꞉ ஸம்பூ⁴தா꞉,  ஸாத்⁴யா꞉ பக்ஷிண ஏவ ச . பஶவஶ்ச மனுஷ்யாஶ்ச,  தஸ்மை ஸர்வாத்மனே நம꞉ .. 47 யாரிடமிருந்து ஸாத்யர்களாகிய த...

Devi Geethai 2.41-2.44

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ अथ ते धैर्यम्-आलम्ब्य, लब्ध्वा च श्रुतिम्-उत्तमाम् । प्रेमाश्रु-पूर्ण-नयना, रुद्ध-कण्ठास्तु निर्जराः ॥ ४१॥ அத² தே தை⁴ர்யம்-ஆலம்ப்³ய,  லப்³த்⁴வா ச ஶ்ருதிம்-உத்தமாம் . ப்ரேமாஶ்ரு-பூர்ண-நயனா,  ருத்³த⁴-கண்டா²ஸ்து நிர்ஜரா꞉ .. 41. மூர்ச்சையிலிருந்து எழுந்த மூப்பற்ற தேவர்கள், உத்தமமான வேதங்களால் நல்லறிவு பெற்று, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் பெருகும் கண்களோடு, தொண்டை விம்மியவாறு இருந்தனர். __________ बाष्प-गद्-गद-दया वाचा, स्तोतुं समुप-चक्रिरे । देवा ऊचुः - अपराधं क्षमस्वाम्ब, पाहि दीनांस्त्वद्-उद्भवान् ॥ ४२॥ பா³ஷ்ப-க³த்³-க³த³-த³யா வாசா,  ஸ்தோதும்ʼ ஸமுப-சக்ரிரே . தே³வா ஊசு꞉ - அபராத⁴ம்ʼ க்ஷமஸ்வாம்ப³,  பாஹி தீ³னாம்ʼஸ்த்வத்³-உத்³ப⁴வான் .. 42.. பெருகிய கண்ணீரால் தழுதழுக்கும் குரலில், தேவியை துதிக்கத் தொடங்கினர்.  தேவர்கள் கூறினர்:  ஹே அம்பா! எங்களுடைய அபராதங்களை பொறுத்தருள்வாய். உன்னிடமிருந்து உற்பத்தியான தீனர்களான எங்களை இரட்சிப்பாய்! _________ कोपं संहर देवेशि, सभया रूप-दर्शनात् । का ते स्तुतिः प्रकर्तव्या...

Devi Geethai 2.37-2.40

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ सहस्र-शीर्ष-नयनं, सहस्र-चरणं तथा । कोटि-सूर्य-प्रतीकाशं, विद्युत्-कोटि-समप्रभम् ॥ ३७॥ ஸஹஸ்ர-ஶீர்ஷ-நயனம்ʼ,  ஸஹஸ்ர-சரணம்ʼ ததா² . கோடி-ஸூர்ய-ப்ரதீகாஶம்ʼ,  வித்³யுத்-கோடி-ஸமப்ரப⁴ம் .. 37 ஆயிரம் சிரங்களோடும், ஆயிரம் கண்களோடும், ஆயிரம் கால்களோடும், கோடி சூரியர்கள் உதித்தாற் போல், கோடி மின்னல்கள் மின்னியதைப் போல் காட்சியளித்தது. _________ भयङ्करं महाघोरं, हृदक्ष्णोस्-त्रास-कारकम् । ददृशुस्ते सुराः सर्वे, हाहाकारं च चक्रिरे ॥ ३८॥ ப⁴யங்கரம்ʼ மஹாகோ⁴ரம்ʼ,  ஹ்ருʼத³க்ஷ்ணோஸ்-த்ராஸ-காரகம் . த³த்³ருʼஶுஸ்தே ஸுரா꞉ ஸர்வே,  ஹாஹாகாரம்ʼ ச சக்ரிரே .. 38.. பயங்கரமாகவும், மகா கோரமாகவும், ஹ்ருதயத்திற்கும், பார்ப்பதற்கும் பயத்தை ஏற்படுத்துவதாகவும், காட்சியளித்த அந்த உருவத்தைக் கண்டு நடுங்கியவர்களாய், தேவர்கள் அனைவரும் ஹாஹா என்று கூக்குரலிட்டனர். __________ विकम्पमान-हृदया, मूर्च्छाम्-आपुर्दुरत्ययाम् । स्मरणं च गतं तेषां, जगदम्बेयम्-इत्यपि ॥ ३९॥ விகம்பமான-ஹ்ருʼத³யா,  மூர்ச்சா²ம்-ஆபுர்து³ரத்யயாம் . ஸ்மரணம்ʼ ச க³தம்ʼ தேஷாம்ʼ,  ஜக³த³ம்பே³யம்-இத்...

Devi Geethai 2.32-2.36

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ कौमार-यौवन-जरा, वयोऽस्य गतिरुत्तमा । बलाहकास्तु केशाः स्युः, सन्ध्ये ते वाससी विभोः ॥ ३२॥ கௌமார-யௌவன-ஜரா, வயோ(அ)ஸ்ய க³திருத்தமா . ப³லாஹகாஸ்து கேஶா꞉ ஸ்யு꞉,  ஸந்த்⁴யே தே வாஸஸீ விபோ⁴꞉ .. 32.. பிள்ளைப் பருவம், இளமை, மூப்பு ஆகிய பருவங்கள் அந்த விராட ரூபத்தின் உத்தம நடையாக காட்சியளித்தன. கார்மேகங்கள் கேஶங்களாகவும், ஸந்தியா காலங்கள், அந்த விராட ரூபத்தின் வஸ்திரங்களாகவும் காட்சியளித்தன. __________ राजन्-श्रीजगदम्बायाः, चन्द्रमास्तु मनः स्मृतः । विज्ञान-शक्तिस्तु हरी, रुद्रोन्तःकरणं स्मृतम् ॥ ३३॥ ராஜன்-ஸ்ரீஜக³த³ம்பா³யா:, சந்த்³ரமாஸ்து மன꞉ ஸ்ம்ருʼத꞉ . விஜ்ஞான-ஶக்திஸ்து ஹரீ,  ருத்³ரோந்த꞉கரணம்ʼ ஸ்ம்ருʼதம் .. 33.. ஹே ராஜனே! ஸ்ரீ ஜகதாம்பாளின் மனமாக சந்திரனும், விஞ்ஞான சக்தியாக ஹரியும், மனசாட்சியாக ருத்ரனும் காட்சியளித்தனர். ___________ अश्वादि-जातयः सर्वाः, श्रोणि-देशे स्थिता विभोः । अतलादि-महालोकाः, कट्यधो-भागतां गताः ॥ ३४॥ அஶ்வாதி³-ஜாதய꞉ ஸர்வா꞉  ஶ்ரோணி-தே³ஶே ஸ்தி²தா விபோ⁴꞉ . அதலாதி³-மஹாலோகா꞉  கட்யதோ⁴-பா⁴க³தாம்ʼ க³தா꞉ .. 34.. குதிரை முதல...

Devi Geethai 2.27-2.31

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ नासत्यदस्रौ नासे स्तौ, गन्धो घ्राणं स्मृतो बुधैः । मुखम्-अग्निः समाख्यातो, दिवा-रात्री च पक्ष्मणी ॥ २७॥ நாஸத்யத³ஸ்ரௌ நாஸே ஸ்தௌ,  க³ந்தோ⁴ க்⁴ராணம்ʼ ஸ்ம்ருʼதோ பு³தை⁴꞉ . முக²ம்-அக்³னி꞉ ஸமாக்²யாதோ,  தி³வா-ராத்ரீ ச பக்ஷ்மணீ .. 27.. அஸ்வினி குமாரர்கள் நாசிகளாயும், வாசனையே நுகரும் சக்தியாகவும், அக்னி வாயாகவும், இரவுபகல் இரு கண் இமைகளாகவும் காட்சியளித்தன. __________ ब्रह्म-स्थानं भ्रू-विजृंभोऽपि, आपस्-तालुः प्रकीर्तिताः । रसो जिह्वा समाख्याता, यमो दंष्ट्राः प्रकीर्तिताः ॥ २८॥ ப்³ரஹ்மஸ்தா²னம்ʼ ப்⁴ரூ-விஜ்ருʼம்போ⁴-(அ)பி, ஆபஸ்-தாலு꞉ ப்ரகீர்திதா꞉ . ரஸோ ஜிஹ்வா ஸமாக்²யாதா,  யமோ த³ம்ʼஷ்ட்ரா꞉ ப்ரகீர்திதா꞉ .. 28.. பிரம்மஸ்தானம் புருவ வளைவாகவும், தண்ணீர் மேலண்ணமாகவும், ருசி நாக்காகவும், எமன் கோரப் பற்களாகவும் காட்சியளித்தன. _________ दन्ताः स्नेहकला यस्य, हासो माया प्रकीर्तिता । सर्गस्त्वपाङ्ग-मोक्षः स्याद्, व्रीडोर्ध्वोष्ठो महेशितुः ॥ २९॥ த³ந்தா꞉ ஸ்னேஹகலா யஸ்ய,  ஹாஸோ மாயா ப்ரகீர்திதா . ஸர்க³ஸ்த்வபாங்க³-மோக்ஷ꞉ ஸ்யாத்³, வ்ரீடோ³ர்த்⁴வோஷ்டோ² மஹேஶ...

Devi Geethai 2.20-2.26

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ हिमालय उवाच - यथा वदसि देवेशि, समष्ट्याऽऽत्म-वपुस्त्विदम् । तथैव द्रष्टुमिच्छामि, यदि देवि कृपा मयि ॥ २०॥ ஹிமாலய உவாச - யதா² வத³ஸி தே³வேஶி,  ஸமஷ்ட்யா(ஆ)த்ம-வபுஸ்த்வித³ம் . ததை²வ த்³ரஷ்டுமிச்சா²மி,  யதி³ தே³வி க்ருʼபா மயி .. 20.. "ஹே தேவேஶி! உன்னுடைய ஸமஷ்டி ஆத்ம ரூபமாக இந்த ப்ரபஞ்சம் இருக்கிறது என்று எதை கூறுகிறாயோ, நான் அந்த உன்னுடைய ரூபத்தைப் பார்க்க விரும்புகிறேன், தேவியின் கிருபை எனக்கு கிடைக்குமானால்!" என்று விண்ணப்பித்தார் ஹிமவான். __________ व्यास उवाच - इति तस्य वचः श्रुत्वा, सर्वे देवाः सविष्णवः । ननन्दुर्-मुदितात्मानः, पूजयन्तश्च तद्-वचः ॥ २१॥ வ்யாஸ உவாச - இதி தஸ்ய வச꞉ ஶ்ருத்வா,  ஸர்வே தே³வா꞉ ஸவிஷ்ணவ꞉ . நனந்து³ர்-முதி³தாத்மான꞉,  பூஜயந்தஶ்ச தத்³-வச꞉ .. 21.. வியாசர் கூறினார்- இந்த ஹிமவானின் விண்ணப்பத்தைக் கேட்டு, விஷ்ணு முதலிய தேவர்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தவர்களாய் அவ்விண்ணப்பத்தை புகழ்ந்தனர். __________ अथ देवमतं ज्ञात्वा, भक्त-काम-दुघा शिवा । अदर्शयन्-निजं रूपं, भक्त-काम-प्रपूरिणी ॥ २२॥ அத² தே³வமதம்ʼ ஜ்ஞாத்வா,...

Devi Geethai 2.13-2.19

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ ईश्वरोऽहं च सूत्रात्मा, विराडात्मा-अहमस्मि च । ब्रह्माऽहं विष्णुरुद्रौ च, गौरी ब्राह्मी च वैष्णवी ॥ १३ ஈஶ்வரோ(அ)ஹம்ʼ ச ஸூத்ராத்மா,  விராடா³த்மா-அஹமஸ்மி ச . ப்³ரஹ்மா(அ)ஹம்ʼ விஷ்ணு-ருத்³ரௌ ச,  கௌ³ரீ ப்³ராஹ்மீ ச வைஷ்ணவீ .. 13.. இந்த ப்ரபஞ்சமெல்லாமும் நானே. அனைத்தையும் ஆட்டுவிக்கும்  ஸுத்ராத்மாவாக இருக்கின்ற ஈஸ்வரனும் நானே. ஸ்தூல ஶரீர ஸமஷ்டியான விராட் சொரூபமும் நானே. ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரரும் நானே. ப்ராஹ்மீ, வைஷ்ணவீ, கௌரீயும் நானே. ________ सूर्योऽहं तारकाश्चाहं, तारकेशस्-तथास्म्यहम् । पशुपक्षि-स्वरूपाऽहं, चाण्डालोऽहं च तस्करः ॥ १४॥ ஸூர்யோ(அ)ஹம்ʼ தாரகாஶ்சாஹம்ʼ,  தாரகேஶஸ்-ததா²ஸ்ம்யஹம் . பஶுபக்ஷி-ஸ்வரூபா(அ)ஹம்ʼ,  சாண்டா³லோ(அ)ஹம்ʼ ச தஸ்கர꞉ .. 14.. சூர்யனும் நானே, நட்சத்திரங்களும் நானே. மிருக-பறவை ஸ்வரூபங்களும் நானே. சண்டாளனும் நானே. திருடனும் நானே. __________ व्याधोऽहं क्रूर-कर्माऽहं, सत्कर्मोऽहं महाजनः । स्त्री-पुं-नपुंसकाकारोऽपि,अहमेव न संशयः ॥ १५॥ வ்யாதோ⁴(அ)ஹம்ʼ க்ரூரகர்மா(அ)ஹம்ʼ,  ஸத்கர்மோ(அ)ஹம்ʼ மஹாஜன꞉ . ஸ்த்ரீ-புந்-...

Devi Geethai 2.7-2.12

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ वदन्ति चात्मा कर्तेति, विमूढा न सुबुद्धयः । अज्ञान-भेदतस्-तद्वन्, मायाया भेदतस्-तथा ॥ ७॥ வத³ந்தி சாத்மா கர்தேதி,  விமூடா⁴ ந ஸுபு³த்³த⁴ய꞉ . அஜ்ஞான-பே⁴த³தஸ்-தத்³வன், மாயாயா பே⁴த³தஸ்-ததா² .. 7.. ஆன்மாவை கர்த்தா என்று மூடர்கள் கூறுவார்கள், அறிஞர்கள் கூறார். புத்தி தான் செயல்காரகன், ஆன்மாவுக்கு இருப்பு மட்டுமே உள்ளது, செயல் இல்லை. __________ जीवेश्वर-विभागश्च, कल्पितो माययैव तु । घटाकाश-महाकाश, विभागः कल्पितो यथा ॥ ८॥ ஜீவேஶ்வர-விபா⁴க³ஶ்ச,  கல்பிதோ மாயயைவ து . க⁴டாகாஶ-மஹாகாஶ, விபா⁴க³꞉ கல்பிதோ யதா² .. 8.. அஞ்ஞான பேதத்தாலும், மாயையின் பேதத்தாலும், ஜீவன்-ஈஸ்வரன் என்று  பிரிக்கப்படுகிறது. ஆகாசமானது எவ்வாறு, குடத்துள் இருக்கும் ஆகாசம், குடத்துக்கு வெளியே இருக்கும் ஆகாசம் என பேதப்படுகிறதோ, அவ்வாறே, மாயையாலேயே ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பேதம் ஏற்படுகிறது. உண்மையில் ஆகாசம் ஒன்றே. அது போல, ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உண்மையில் பேதமில்லை. _________ तथैव कल्पितो भेदो, जीवात्म-परमात्मनोः । यथा जीव-बहुत्वं च, माययैव न च स्वतः ॥ ९॥ ததை²வ கல்பிதோ பே⁴தோ³,...

Devi Geethai 2.1-2.6

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ ॥ अथ द्वितीयोऽध्यायः ॥ அத² த்³விதீயோ-(அ)த்⁴யாய꞉ இனி இரண்டாம் அத்தியாயம். தேவி விஸ்வரூப தரிசனம். ______________________________ देव्युवाच - मन्-माया-शक्ति-संक्लृप्तं, जगत्-सर्वं चराचरम् । सापि मत्तः पृथङ् माया, नास्त्येव परमार्थतः ॥ १॥ தே³வ்யுவாச - மன்-மாயா-ஶக்தி-ஸங்க்ல்ருʼப்தஞ், ஜக³த்ஸர்வம்ʼ சராசரம் . ஸாபி மத்த꞉ ப்ருʼத²ங் மாயா,  நாஸ்த்யேவ பரமார்த²த꞉ .. 1.. என்னுடைய மாயா சக்தியினால் அசையும் மற்றும் அசையாததாய் உள்ள அனைத்தும் உண்டாக்கப்பட்டன. அந்த மாயையும் கூட, உண்மையில் என்னைவிட்டு வேறாக இல்லவே இல்லை. _________ व्यवहार-दृशा सेयं, मायाऽविद्येति विश्रुता । तत्त्व-दृष्ट्या तु नास्त्येव, तत्त्वम्-एवास्ति केवलम् ॥ २॥ வ்யவஹார-த்³ருʼஶா ஸேயம்ʼ,  மாயா(அ)வித்³யேதி விஶ்ருதா . தத்த்வ-த்³ருʼஷ்ட்யா து நாஸ்த்யேவ,  தத்த்வம்-ஏவாஸ்தி கேவலம் .. 2.. அந்த மாயா ஶக்தி , விவகாரமாய் பார்க்கும்போது, அவித்யை என்று சொல்லப்படும். அதையே தத்வமாய் பார்க்கும்போது, அது தனித்து தெரிவதில்லை. வெறும் தத்துவம் மட்டுமே உள்ளது என்பது புரியும். __________ साहं सर्वं जगत्-सृ...

Devi Geethai 1.45-1.50

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ सर्वज्ञः सर्वकर्ता च, सर्वानुग्रह-कारकः । अविद्यायां तु यत्-किञ्चित्, प्रतिबिंबं नगाधिप ॥ ४५॥ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வகர்தா ச,  ஸர்வானுக்³ரஹ-காரக꞉ . அவித்³யாயாம்ʼ து யத்-கிஞ்சித், ப்ரதிபி³ம்ப³ம்ʼ நகா³தி⁴ப .. 45.. அந்த ஈஸ்வரன் எல்லாமறிந்தவன், எல்லாம் வல்லவன், எல்லா அனுக்ரகமும் செய்பவன். ராஜா! அவித்தையில் சைதன்யத்தின் ப்ரதிபிம்பம் சிறிதளவே இருக்கிறது. _________ तदेव जीव-संज्ञं स्यात्, सर्व-दुःखाश्रयं पुनः । द्वयोरपीह सम्प्रोक्तं, देह-त्रयम्-अविद्यया ॥ ४६॥ ததே³வ ஜீவ-ஸஞ்ஜ்ஞம்ʼ ஸ்யாத், ஸர்வ-து³꞉கா²ஶ்ரயம்ʼ புன꞉ . த்³வயோரபீஹ ஸம்ப்ரோக்தம்ʼ,  தே³ஹ-த்ரயம்-அவித்³யயா .. 46.. அவித்தையில் சிறிதளவே சைதன்யத்தின் ப்ரதிபலிப்பு கொண்டது ஜீவன் ஆகும். இந்த ஜீவன், எல்லா துக்கங்களுக்கும் இருப்பிடமாக இருக்கிறான். ஜீவ-ஈஸ்வரனுக்கு அவித்தையாலேயே ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேகங்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. __________ देह-त्रयाभिमानात्-च, अप्यभूत्-नामत्रयं पुनः । प्राज्ञस्तु कारणात्मा स्यात्, सूक्ष्मधी तु तैजसः ॥ ४७॥ தே³ஹ-த்ரயாபி⁴மானாத்-ச, அப்யபூ⁴த்-நாமத்ரயம்ʼ புன꞉ . ப்ராஜ்ஞஸ்து...

Devi Geethai 1.41-1.44

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ ज्ञानेन्द्रियाणि पञ्चैव, पञ्च कर्मेन्द्रियाणि च । प्राणादि पञ्चकं चैव, धिया च सहितं मनः ॥ ४१॥ ஜ்ஞானேந்த்³ரியாணி பஞ்சைவ,  பஞ்ச கர்மேந்த்³ரியாணி ச . ப்ராணாதி³ பஞ்சகம்ʼ சைவ,  தி⁴யா ச ஸஹிதம்ʼ மன꞉ .. 41.. இவ்வாறு, ஞானேந்த்ரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, ப்ராணாதி வாயுக்கள் ஐந்து, இவற்றுடன் மனம், புத்தி சேர்ந்து, இந்த பதினேழும் கூடியதே ஜீவனின் சூக்ஷ்ம சரீரம். _________ एतत्-सूक्ष्म-शरीरं स्यात्, मम लिङ्गं यदुच्यते । तत्र या प्रकृतिः प्रोक्ता, सा राजन्-विविधा स्मृता ॥ ४२॥ ஏதத்-ஸூக்ஷ்ம-ஶரீரம்ʼ ஸ்யாத், மம லிங்க³ம்ʼ யது³ச்யதே . தத்ர யா ப்ரக்ருʼதி꞉ ப்ரோக்தா,  ஸா ராஜன்-விவிதா⁴ ஸ்ம்ருʼதா .. 42.. இச்சூக்ஷ்ம ஶரீர சமஷ்டியே எனது சூக்ஷ்ம சரீரமென்று சொல்லப்படும். முக்குணங்களும் பூதங்களோடு கலக்காமல் இருக்கும் நிலையே ப்ரக்ருதி எனப்படும். ராஜனே! இந்த ப்ரக்ருதி பலவிதமாய் அறியப்படுகிறது. _________ सत्त्वात्मिका तु माया स्याद्, अविद्या गुण-मिश्रिता । स्वाश्रयं या तु संरक्षेत्, सा मायेति निगद्यते ॥ ४३॥ ஸத்த்வாத்மிகா து மாயா ஸ்யாத்³, அவித்³யா கு³ண-ம...

Devi Geethai 1.35-1.40

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ तत्कार्यं च विराड् देहः, स्थूल-देहोऽयम्-आत्मनः । पञ्चभूतस्थ-सत्त्वांशैः, श्रोत्रादीनां समुद्भवः ॥ ३५॥ தத்கார்யம்ʼ ச விராட்³ தே³ஹ꞉,  ஸ்தூ²ல-தே³ஹோ(அ)யம்-ஆத்மன꞉ . பஞ்சபூ⁴தஸ்த²-ஸத்த்வாம்ʼஶை꞉,  ஶ்ரோத்ராதீ³னாம்ʼ ஸமுத்³ப⁴வ꞉ .. 35.. பஞ்சீகரணப்பட்ட பஞ்சபூதங்களின் காரியமே ஆத்மாக்களுடைய ஸ்தூல ஶரீரம். ஶரீர சமூகமாகிய சமஷ்டியே விராட் சொரூபமாம்.  பஞ்சபூதங்களின் ஸத்வ அம்சத்திலிருந்து கேட்கும்-சக்தி முதலிய பஞ்ச ஞானேந்த்ரியங்கள் உண்டாகின்றன. _________ ज्ञानेन्द्रियाणां राजेन्द्र, प्रत्येकं मीलितैस्तु तैः । अन्तःकरणम्-एकं स्याद्, वृत्तिभेदात्-चतुर्विधम् ॥ ३६॥ ஜ்ஞானேந்த்³ரியாணாம்ʼ ராஜேந்த்³ர,  ப்ரத்யேகம்ʼ மீலிதைஸ்து தை꞉ . அந்த꞉கரணம்-ஏகம்ʼ ஸ்யாத்³, வ்ருʼத்திபே⁴தா³த்-சதுர்வித⁴ம் .. 36.. ஹே ராஜேந்திரா! பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஞானேந்த்ரியங்கள் உண்டாகின. அப்போது உண்டாகிய அந்த:கரணம் ஒன்றே எனினும், அது விருத்தி அடைந்து மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என நான்காயிற்று. _________ यदा तु सङ्कल्प-विकल्प-कृत्यं,      तदा भवेत्-तन्मन इत्य...

Devi Geethai 1.31-1.34

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ सर्वात्मकं तत्-सम्प्रोक्तं, सूक्ष्म-देहोऽयम्-आत्मनः । अव्यक्तं कारणो देहः, स चोक्तः पूर्वमेव हि ॥ ३१॥ ஸர்வாத்மகம்ʼ தத்-ஸம்ப்ரோக்தம்ʼ,  ஸூக்ஷ்ம-தே³ஹோ(அ)யம்-ஆத்மன꞉ . அவ்யக்தம்ʼ காரணோ தே³ஹ꞉,  ஸ சோக்த꞉ பூர்வமேவ ஹி .. 31.. தன்னுள் ஸர்வ- ப்ராணன்களை உள்ளடக்கிய இந்த ஸூத்ர ஆத்மாவான லிங்கதேகம் பரமாத்வாவின் ஸூக்ஷ்ம தேஹம் ஆகும். முன் சொல்லப்பட்ட அவ்யக்தமானதும் புலப்படாததுமே காரண தேஹம் ஆகும். ________ यस्मिन्-जगद्-बीजरूपं, स्थितं लिङ्गोद्भवो यतः । ततः स्थूलानि भूतानि पञ्चीकरण-मार्गतः ॥ ३२॥ யஸ்மின்-ஜக³த்³-பீ³ஜரூபம்ʼ,  ஸ்தி²தம்ʼ லிங்கோ³த்³ப⁴வோ யத꞉ . தத꞉ ஸ்தூ²லானி பூ⁴தானி,  பஞ்சீகரண-மார்க³த꞉ .. 32.. இந்த காரண ஶரீரத்தினுள் ஜகத்தின் பீஜ ரூபம் இருக்கின்றது. அதிலிருந்தே லிங்கஶரீரம் உண்டாகியது. அதன்பின் பஞ்சீகரண முறையில் உருவாவதே ஸ்தூல பூதங்கள். पञ्च सङ्ख्यानि जायन्ते, तत्-प्रकारस्त्वथोच्यते । पूर्वोक्तानि च भूतानि, प्रत्येकं विभजेद्-द्विधा ॥ ३३॥ பஞ்ச ஸங்க்²யானி ஜாயந்தே,  தத்-ப்ரகாரஸ்த்வதோ²ச்யதே . பூர்வோக்தானி ச பூ⁴தானி,  ப்ரத்யேகம்ʼ வி...

Devi Geethai 1.25-1.30

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ प्रोच्यते सर्व-शास्त्रेषु, सर्वकारण-कारणम् । तत्त्वानाम्-आदिभूतं च, सच्चिदानन्द-विग्रहम् ॥ २५॥ ப்ரோச்யதே ஸர்வ-ஶாஸ்த்ரேஷு,  ஸர்வகாரண-காரணம் . தத்த்வாநாம்-ஆதி³பூ⁴தம்ʼ ச,  ஸச்சிதா³னந்த³-விக்³ரஹம் .. 25.. என்னுடைய ஸ்வரூபம் ஸகல காரணங்களுக்கும் காரணமாகவும், ஸகல தத்வங்களுக்கும் ஆதியாகவும் ஸச்சிதானந்த ஸ்வரூபமாகவும் உள்ளது என்று அனைத்து ஶாஸ்த்ரங்களிலும் கூறப்படுகிறது. _________ सर्वकर्म-घनीभूतम्, इच्छा-ज्ञान-क्रियाश्रयम् । ह्रीङ्कार-मन्त्र-वाच्यं तत्, आदि-तत्त्वं तद्-उच्यते ॥ २६॥ ஸர்வகர்மக⁴னீபூ⁴தம்,  இச்சா²-ஜ்ஞான-க்ரியாஶ்ரயம் . ஹ்ரீங்கார-மந்த்ர-வாச்யம்ʼ தத்,  ஆதி³-தத்த்வம்ʼ தத்³-உச்யதே .. 26.. என்னுடைய ஸ்வரூபம், ஸர்வ கர்மங்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருப்பதாகவும், இச்சா-ஞான-க்ரியா சக்திகளுக்கு இடமாயும், ஹ்ரீங்கார மந்த்ரவாக்யமாகவும், ஆதிதத்வமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. _________ तस्माद्-आकाश उत्पन्नः, शब्द-तन्मात्र-रूपकः । भवेत्-स्पर्शात्मको वायु:, तेजो रूपात्मकं पुनः ॥ २७॥ தஸ்மாத்³-ஆகாஶ உத்பன்ன꞉,  ஶப்³த³-தன்மாத்ர-ரூபக꞉ ...