Devi Geethai 2.32-2.36
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
कौमार-यौवन-जरा, वयोऽस्य गतिरुत्तमा ।
बलाहकास्तु केशाः स्युः, सन्ध्ये ते वाससी विभोः ॥ ३२॥
கௌமார-யௌவன-ஜரா,
வயோ(அ)ஸ்ய க³திருத்தமா .
ப³லாஹகாஸ்து கேஶா꞉ ஸ்யு꞉,
ஸந்த்⁴யே தே வாஸஸீ விபோ⁴꞉ .. 32..
பிள்ளைப் பருவம், இளமை, மூப்பு ஆகிய பருவங்கள் அந்த விராட ரூபத்தின் உத்தம நடையாக காட்சியளித்தன. கார்மேகங்கள் கேஶங்களாகவும், ஸந்தியா காலங்கள், அந்த விராட ரூபத்தின் வஸ்திரங்களாகவும் காட்சியளித்தன.
__________
राजन्-श्रीजगदम्बायाः, चन्द्रमास्तु मनः स्मृतः ।
विज्ञान-शक्तिस्तु हरी, रुद्रोन्तःकरणं स्मृतम् ॥ ३३॥
ராஜன்-ஸ்ரீஜக³த³ம்பா³யா:,
சந்த்³ரமாஸ்து மன꞉ ஸ்ம்ருʼத꞉ .
விஜ்ஞான-ஶக்திஸ்து ஹரீ,
ருத்³ரோந்த꞉கரணம்ʼ ஸ்ம்ருʼதம் .. 33..
ஹே ராஜனே! ஸ்ரீ ஜகதாம்பாளின் மனமாக சந்திரனும், விஞ்ஞான சக்தியாக ஹரியும், மனசாட்சியாக ருத்ரனும் காட்சியளித்தனர்.
___________
अश्वादि-जातयः सर्वाः, श्रोणि-देशे स्थिता विभोः ।
अतलादि-महालोकाः, कट्यधो-भागतां गताः ॥ ३४॥
அஶ்வாதி³-ஜாதய꞉ ஸர்வா꞉
ஶ்ரோணி-தே³ஶே ஸ்தி²தா விபோ⁴꞉ .
அதலாதி³-மஹாலோகா꞉
கட்யதோ⁴-பா⁴க³தாம்ʼ க³தா꞉ .. 34..
குதிரை முதலிய விலங்கினங்கள் அனைத்தும் இடுப்பு பகுதியாகவும், அதலம் முதலிய மஹாலோகங்கள் இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்களாகவும், அந்த விராட ரூபத்திடம் காட்சியளித்தன.
_________
एतादृशं महारूपं, ददृशुः सुर-पुङ्गवाः ।
ज्वाला-माला-सहस्राढ्यं, लेलिहानं च जिह्वया ॥ ३५॥
ஏதாத்³ருʼஶம்ʼ மஹாரூபம்ʼ,
த³த்³ருʼஶு꞉ ஸுரபுங்க³வா꞉ .
ஜ்வாலா-மாலா-ஸஹஸ்ராட்⁴யம்ʼ,
லேலிஹானம்ʼ ச ஜிஹ்வயா .. 35..
மிகச்சிறந்த தேவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட மகா ரூபத்தை தரிசித்தார்கள். ஆயிரக்கணக்கான ஒளிக்கற்றைகள் போல், நாக்கை பலவாறாக சுழற்றிக்கொண்டு காட்சியளித்தது அந்த மஹா ஸ்வரூபம்.
___________
दंष्ट्रा-कटकटारावं, वमन्तं वह्निम्-अक्षिभिः ।
नानायुध-धरं वीरं, ब्रह्म-क्षत्रौदनं च यत् ॥ ३६॥
த³ம்ʼஷ்ட்ராகடகடாராவம்ʼ,
வமந்தம்ʼ வஹ்னிம்-அக்ஷிபி⁴꞉ .
நானாயுத⁴-த⁴ரம்ʼ வீரம்ʼ,
ப்³ரஹ்ம-க்ஷத்ரௌத³னம்ʼ ச யத் .. 36..
கடகடவென்று பற்களைக் கடித்துக் கொண்டும், கண்களிலிருந்து தீப்பொறி சிதற, வீரமாக அநேக வித ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு, ப்ராமண- க்ஷத்தியர்களைப் புசித்துக்கொண்டு காட்சியளித்து அந்த மஹா ஸ்வரூபம்.
_________
Comments
Post a Comment