Devi Geethai 1.25-1.30

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

प्रोच्यते सर्व-शास्त्रेषु, सर्वकारण-कारणम् ।
तत्त्वानाम्-आदिभूतं च, सच्चिदानन्द-विग्रहम् ॥ २५॥

ப்ரோச்யதே ஸர்வ-ஶாஸ்த்ரேஷு, 
ஸர்வகாரண-காரணம் .
தத்த்வாநாம்-ஆதி³பூ⁴தம்ʼ ச, 
ஸச்சிதா³னந்த³-விக்³ரஹம் .. 25..

என்னுடைய ஸ்வரூபம் ஸகல காரணங்களுக்கும் காரணமாகவும், ஸகல தத்வங்களுக்கும் ஆதியாகவும் ஸச்சிதானந்த ஸ்வரூபமாகவும் உள்ளது என்று அனைத்து ஶாஸ்த்ரங்களிலும் கூறப்படுகிறது.

_________

सर्वकर्म-घनीभूतम्, इच्छा-ज्ञान-क्रियाश्रयम् ।
ह्रीङ्कार-मन्त्र-वाच्यं तत्, आदि-तत्त्वं तद्-उच्यते ॥ २६॥

ஸர்வகர்மக⁴னீபூ⁴தம், 
இச்சா²-ஜ்ஞான-க்ரியாஶ்ரயம் .
ஹ்ரீங்கார-மந்த்ர-வாச்யம்ʼ தத், 
ஆதி³-தத்த்வம்ʼ தத்³-உச்யதே .. 26..

என்னுடைய ஸ்வரூபம், ஸர்வ கர்மங்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருப்பதாகவும், இச்சா-ஞான-க்ரியா சக்திகளுக்கு இடமாயும், ஹ்ரீங்கார மந்த்ரவாக்யமாகவும், ஆதிதத்வமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

_________

तस्माद्-आकाश उत्पन्नः, शब्द-तन्मात्र-रूपकः ।
भवेत्-स्पर्शात्मको वायु:, तेजो रूपात्मकं पुनः ॥ २७॥

தஸ்மாத்³-ஆகாஶ உத்பன்ன꞉, 
ஶப்³த³-தன்மாத்ர-ரூபக꞉ .
ப⁴வேத்-ஸ்பர்ஶாத்மகோ வாயு:,
தேஜோ ரூபாத்மகம்ʼ புன꞉ .. 27..

என்னுடைய ஸ்வரூபமான ஆதி தத்வத்திலிருந்து, ஐந்து சூஷ்ம பூதங்கள் தோன்றின. முதலில் ஶப்த தன்மாத்திரை அம்சமாக ஆகாசம் தோன்றியது. அதிலிருந்து ஸ்பரிஶ தன்மாத்திரை அம்சமாக வாயு தோன்றியது. அதிலிருந்து, ரூப தன்மாத்திரை அம்சமாக அக்னி தோன்றியது.

__________

जलं रसात्मकं पश्चात, ततो गन्धात्मिका धरा ।
शब्दैक-गुण आकाशो, वायुः स्पर्शरवान्वितः ॥ २८॥

ஜலம்ʼ ரஸாத்மகம்ʼ பஶ்சாத்,
ததோ க³ந்தா⁴த்மிகா த⁴ரா .
ஶப்³தை³க-கு³ண ஆகாஶோ, 
வாயு꞉ ஸ்பர்ஶரவான்வித꞉ .. 28..

அதன் பிறகு, ரஸ தன்மாத்திரை அம்சமாக ஜலம் தோன்றியது. அதன் பிறகு, கந்த தன்மாத்திரை அம்சமாக ப்ருத்வி தோன்றியது. இவ்வைந்து ஸுஷ்ம பூதங்களும், பஞ்சீகரணத்தால் ஸ்தூல பஞ்ச பூதங்களாக உருவெடுத்தன. முதலில் தோன்றிய ஆகாசத்திற்கு ஶப்தம் என்ற ஒரே குணம் உள்ளது. வாயுவிற்கு ஸ்பர்ஸமும், ஸப்தமும் ஆக இரு குணங்கள் உள்ளன.

________

शब्द-स्पर्श-रूप-गुणं, तेज इत्युच्यते बुधैः ।
शब्द-स्पर्श-रूप-रसैः, आपो वेदगुणाः स्मृताः ॥ २९॥

ஶப்³த³-ஸ்பர்ஶ-ரூப-கு³ணம்ʼ, 
தேஜ இத்யுச்யதே பு³தை⁴꞉ .
ஶப்³த³-ஸ்பர்ஶ-ரூப-ரஸை:,
ஆபோ வேத³கு³ணா꞉ ஸ்ம்ருʼதா꞉ .. 29..

அக்னியிடம் ஒலி, தொடுதல், உருவம் ஆக முக்குணங்கள் உள்ளன. ஜலத்தில் ஒலி, தொடுதல், உருவம், சுவை ஆக நான்கு குணங்கள் உள்ளன என அறிஞர்களால் கூறப்படுகிறது.

_________

शब्द-स्पर्श-रूप-रस-गन्धैः, पञ्चगुणा धरा ।
तेभ्योऽभवन्-महत्-सूत्रं, यल्लिङ्गं परिचक्षते ॥ ३०॥

ஶப்³த³-ஸ்பர்ஶ-ரூப-ரஸ-க³ந்தை⁴꞉, 
பஞ்சகு³ணா த⁴ரா .
தேப்⁴யோ(அ)ப⁴வன்-மஹத்-ஸூத்ரம்ʼ, 
யல்லிங்க³ம்ʼ பரிசக்ஷதே .. 30..

ஒலி, தொடுதல், உருவம், சுவை, வாசனை ஆகிய பஞ்ச குணங்களால் ஆனது ப்ருத்வி. இந்த பஞ்ச தன்மாத்திரைகளில் இருந்தும் லிங்க ஶரீரம் எனப்படும் ஸூக்ஷ்ம ஶரீரம் தோன்றும். இந்த ஸூக்ஷ்ம ஶரீரம், ஸ்தூல ஶரீரத்திற்கு ஆதாரமாக உள்ளது.

_________

Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36