Devi Geethai 2.37-2.40
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
सहस्र-शीर्ष-नयनं, सहस्र-चरणं तथा ।
कोटि-सूर्य-प्रतीकाशं, विद्युत्-कोटि-समप्रभम् ॥ ३७॥
ஸஹஸ்ர-ஶீர்ஷ-நயனம்ʼ,
ஸஹஸ்ர-சரணம்ʼ ததா² .
கோடி-ஸூர்ய-ப்ரதீகாஶம்ʼ,
வித்³யுத்-கோடி-ஸமப்ரப⁴ம் .. 37
ஆயிரம் சிரங்களோடும், ஆயிரம் கண்களோடும், ஆயிரம் கால்களோடும், கோடி சூரியர்கள் உதித்தாற் போல், கோடி மின்னல்கள் மின்னியதைப் போல் காட்சியளித்தது.
_________
भयङ्करं महाघोरं, हृदक्ष्णोस्-त्रास-कारकम् ।
ददृशुस्ते सुराः सर्वे, हाहाकारं च चक्रिरे ॥ ३८॥
ப⁴யங்கரம்ʼ மஹாகோ⁴ரம்ʼ,
ஹ்ருʼத³க்ஷ்ணோஸ்-த்ராஸ-காரகம் .
த³த்³ருʼஶுஸ்தே ஸுரா꞉ ஸர்வே,
ஹாஹாகாரம்ʼ ச சக்ரிரே .. 38..
பயங்கரமாகவும், மகா கோரமாகவும், ஹ்ருதயத்திற்கும், பார்ப்பதற்கும் பயத்தை ஏற்படுத்துவதாகவும், காட்சியளித்த அந்த உருவத்தைக் கண்டு நடுங்கியவர்களாய், தேவர்கள் அனைவரும் ஹாஹா என்று கூக்குரலிட்டனர்.
__________
विकम्पमान-हृदया, मूर्च्छाम्-आपुर्दुरत्ययाम् ।
स्मरणं च गतं तेषां, जगदम्बेयम्-इत्यपि ॥ ३९॥
விகம்பமான-ஹ்ருʼத³யா,
மூர்ச்சா²ம்-ஆபுர்து³ரத்யயாம் .
ஸ்மரணம்ʼ ச க³தம்ʼ தேஷாம்ʼ,
ஜக³த³ம்பே³யம்-இத்யபி .. 39..
நடுங்கிய மனம் உடையவர்களாய் மூர்ச்சித்து, நினைத்தும் பார்க்க முடியாத பயத்துடன்,
'ஜகதாம்பாளே இவள்' என்கிற நினைவும் இல்லாதவர்கள் ஆயினர்.
_________
अथ ते ये स्थिता वेदाः, चतुर्-दिक्षु महाविभोः ।
बोधयामासुर्-अत्युग्रं, मूर्च्छातो मूर्च्छितान्-सुरान् ॥ ४०॥
அத² தே யே ஸ்தி²தா வேதா³:,
சதுர்தி³க்ஷு மஹாவிபோ⁴꞉ .
போ³த⁴யாமாஸுர்-அத்யுக்³ரம்ʼ,
மூர்ச்சா²தோ மூர்ச்சி²தான்-ஸுரான் .. 40..
அப்போது அந்த மகா விராட் ரூபத்தின் நான்கு திக்குகளிலும் நின்று கொண்டிருந்த வேதங்கள், அதி-உக்கிரகமாக கோஷித்து, மூர்ச்சை அடைந்திருந்த தேவர்களை எழுப்பி விட்டன.
___________
Comments
Post a Comment