Devi Geethai 3.24-3.29

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

देवदत्तः स एवायम्, इतिवल्लक्षणा स्मृता ।
स्थूलादि-देह-रहितो, ब्रह्म-सम्पद्यते नरः ॥ २४ ॥

தே³வத³த்த꞉ ஸ ஏவாயம்,
இதி-வல்லக்ஷணா ஸ்ம்ருʼதா .
ஸ்தூ²லாதி³-தே³ஹ-ரஹிதோ,
ப்³ரஹ்ம-ஸம்பத்³யதே நர꞉ .. 24 ..

'இவன் தேவதத்தன்' எனும்போது, அவனுடைய லஷணங்களைக் கொண்டு, ஒரு கூட்டத்தினிடையே அவனை அடையாளம் கண்டு கொள்வது போல, ஸ்தூல சரீராதிகளோடும், தத்வங்களோடும் கூடிய ஜீவனை, சின்மாத்ரை
லஷணத்தைக் கொண்டு,' இதுதான் ஆன்மா' என்று, அடையாளம் கண்டு,
ஸ்தூலாதி தேகங்களை நீக்கி, தன் இனமாகிய ப்ரம்மத்தோடு கூடி,
ப்ரம்ம சம்பத்தை அடைகிறான், மனிதன்.

________

पञ्चीकृत-महाभूत, संभूतः स्थूल-देहकः ।
भोगालयो जरा-व्याधि, संयुतः सर्व-कर्मणाम् ॥ २५॥

பஞ்சீக்ருʼத-மஹாபூ⁴த-
ஸம்பூ⁴த꞉ ஸ்தூ²ல-தே³ஹக꞉ .
போ⁴கா³லயோ ஜரா-வ்யாதி⁴-
ஸம்ʼயுத꞉ ஸர்வ-கர்மணாம் .. 25..

மஹா பூதங்களாகிய ப்ருத்வி முதலிய பஞ்சபூதங்களிலிருந்து பஞ்சீக்ருதமாகிய சரீரமே ஸ்தூல தேஹம். இந்த ஸ்தூல தேஹம்,
ஸர்வ கர்மங்களின் பலனை அனுபவிக்கும் இடமாக இருக்கின்றது. மேலும் அது நரை, மூப்பு, வ்யாதிகளோடு கூடியதாய் உள்ளது.

________

मिथ्या-भूतोऽयम्-आभाति, स्फुटं मायामयत्वतः ।
सोऽयं स्थूल उपाधिः स्याद्, आत्मनो मे नगेश्वर ॥ २६॥

மித்²யா-பூ⁴தோ(அ)யம்-ஆபா⁴தி, 
ஸ்பு²டம்ʼ மாயாமயத்வத꞉ .
ஸோ(அ)யம்ʼ ஸ்தூ²ல உபாதி⁴꞉ ஸ்யாத்³,
ஆத்மனோ மே நகே³ஶ்வர .. 26..

இந்த ஸ்தூல தேகம் மித்யையாக இருக்கிறது. ஆனால் இது மாயாமயமானதால் உண்மை போன்று தோற்றம் அளிக்கிறது. ஹே நகேஷ்வர!
இது என் ஆத்மாவின் ஸ்தூல உபாதி ஆகும்.

__________

ज्ञान-कर्मेन्द्रिय-युतं, प्राण-पञ्चक-संयुतम् ।
मनो-बुद्धि-युतं चैतत्, सूक्ष्मं तत्-कवयो विदुः ॥ २७॥

ஜ்ஞான-கர்மேந்த்³ரிய-யுதம்ʼ ,
ப்ராண-பஞ்சக-ஸம்ʼயுதம் .
மனோ-பு³த்³தி⁴-யுதம்ʼ சைதத்,
ஸூக்ஷ்மம்ʼ தத்-கவயோ விது³꞉ .. 27..

ஐந்து ஞானேந்திரியங்களும்,   
ஐந்து கர்மேந்திரியங்களும், 
ப்ராணன் முதலிய ஐந்து வாயுக்களும், 
மனமும், புத்தியும் ஆகிய இவை அனைத்தும் கூடியது இந்த ஸூக்ஷ்ம
ஸரீரம், என்பதே கவிகளின் வாக்கு.

___________

अपञ्चीकृत-भूतोत्थं, सूक्ष्म-देहोऽयम्-आत्मनः ।
द्वितीयोऽयम्-उपाधिः स्यात्, सुखादेरवबोधकः ॥ २८॥

அபஞ்சீக்ருʼத-பூ⁴தோத்த²ம்ʼ,
ஸூக்ஷ்ம-தே³ஹோ(அ)யம்-ஆத்மன꞉ .
த்³விதீயோ(அ)யம்-உபாதி⁴꞉ ஸ்யாத்,
ஸுகா²தே³ரவபோ³த⁴க꞉ .. 28..

பஞ்சபூதங்களின் பஞ்சீகிருதம் ஆகாமல் உருவான இந்த ஸூக்ஷ்ம தேஹம், இரண்டாவது தேஹம்.
ஸ்தூல தேஹ அனுபவமாய் வரும்
சுகதுக்கங்களை அறிவிக்கிறதாயும்,
இவ்வுணர்ச்சி வழியால், ஆத்மாவுக்கு உபாதி செய்வதாயும் உள்ளது ஸூக்ஷ்ம தேஹம்.

__________

अनादि-अनिर्वाच्यमिदम्, अज्ञानं तु तृतीयकः ।
देहोऽयमात्मनो भाति, कारणात्मा नगेश्वर ॥ २९॥

அநாத்³யநிர்வாச்யமித³ம்,
அஜ்ஞானம்ʼ து த்ருʼதீயக꞉ .
தே³ஹோ(அ)யமாத்மனோ பா⁴தி, 
காரணாத்மா நகே³ஶ்வர .. 29.

ஓ! நகேஷ்வர! 
அனாதியாகவும், அநிர்வாச்யமாகவும்,
அஞ்ஞானமாயும் உள்ள
மூன்றாவது தேகம்,
காரணதேகமாய்
ப்ரகாஸிக்கிறது.

Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36