Devi Geethai - 3.41-3.45

 श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

योग-वृत्तेः पुरा स्वामिन्,भावयेद्-अक्षर-त्रयम् ।
देवी-प्रणव-संज्ञस्य, ध्यानार्थं मन्त्र-वाच्ययोः ॥ ४१॥

யோக³வ்ருʼத்தே꞉ புரா ஸ்வாமின்,
பா⁴வயேத்³-அக்ஷர-த்ரயம் .
தே³வீ-ப்ரணவ-ஸஞ்ஜ்ஞஸ்ய, 
த்⁴யானார்த²ம்ʼ மந்த்ர-வாச்யயோ꞉ .. 41..

முதலில் தன்னுள்ளத்தில் யோக வ்ருத்தியால் தேவியை தியானித்து, பின் தேவி ப்ரணவத்தின் நாமமாக 
இருக்கின்ற மூன்று அக்ஷர ஹ்ரீம் மந்திரத்தை த்யானிப்பதற்காக, சொல்லர்த்தம், உட்பொருளர்த்தம் என்னும்
இரண்டு விதமாகவும் உணர வேண்டும்.
________

हकारः स्थूल-देहः स्याद्, रकारः सूक्ष्म-देहकः ।
ईकारः काराणात्मा-असौ, ह्रीङ्कारोऽहं तुरीयकम् ॥ ४२॥

ஹகார꞉ ஸ்தூ²ல-தே³ஹ꞉ ஸ்யாத்³,
ரகார꞉ ஸூக்ஷ்ம-தே³ஹக꞉ .
ஈகார꞉ காராணாத்மா-(அ)ஸௌ, 
ஹ்ரீங்காரோ(அ)ஹம்ʼ துரீயகம் .. 42..

மூன்று அக்ஷர மந்திரத்தின்
ஹகாரம் ஸ்தூல தேஹமாகவும்,
ரகாரம் ஸுக்ஷ்ம தேஹமாகவும்,
ஈகாரம் காரண தேஹமாகவும்
இருந்து, இம்மூன்றெழுத்தும் கூடிய  ஹ்ரீங்காரமாக நான் துரீய நிலையாக உள்ளேன்.
________

एवं समष्टि-देहेऽपि, ज्ञात्वा बीज-त्रयं क्रमात् ।
समष्टि-व्यष्ट्योर्-एकत्वं भावयेन्-मतिमान्-नरः ॥ ४३॥

ஏவம்ʼ ஸமஷ்டி-தே³ஹே(அ)பி, 
ஜ்ஞாத்வா பீ³ஜ-த்ரயம்ʼ க்ரமாத் .
ஸமஷ்டி-வ்யஷ்ட்யோர்-ஏகத்வம்ʼ பா⁴வயேன்-மதிமான்-நர꞉ .. 43..

அவ்வாறே ஸமஷ்டி தேஹத்திலும், அக்ஷர த்ரயமான பீஜ மந்திரம், ஸமஷ்டி-ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண சரீரங்களாக உள்ளது என்பதை அறிந்து, ஸமஷ்டிக்கும் வ்யஷ்டிக்கும் இடையே 
பேதமற்ற ஒருமித்த நிலையை புத்திமான் மனிதன் உணர வேண்டும்.

________

समाधि-कालात्-पूर्वं तु, भावयित्वा-एवमादृतः ।
ततो ध्यायेन्-निलीनाक्षो, देवीं मां जगदीश्वरीम् ॥ ४४॥

ஸமாதி⁴காலாத்பூர்வம்ʼ து, 
பா⁴வயித்வைவமாத்³ருʼத꞉ .
ததோ த்⁴யாயேன்னிலீனாக்ஷோ, 
தே³வீம்ʼ மாம்ʼ ஜக³தீ³ஶ்வரீம் .. 44..

சமாதியில் செல்லும் முன், முன் கூறியுள்ளபடி ஆதரவுடன் அம்பாளை பாவிக்கவேண்டும். அதன் பின்னர் கண்ணை மூடியவாறு, தேவியை, ஜகதீஸ்வரியான என்னை த்யானிக்க வேண்டும்.

________

प्राणापानौ समौ कृत्वा, नासाभ्यन्तर-चारिणौ ।
निवृत्त-विषयाकाङ्क्षो, वीत-दोषो विमत्सरः ॥ ४५॥

ப்ராணாபானௌ ஸமௌ க்ருʼத்வா, 
நாஸாப்⁴யந்தர-சாரிணௌ .
நிவ்ருʼத்த-விஷயாகாங்க்ஷோ, 
வீத-தோ³ஷோ விமத்ஸர꞉ .. 45.

கண்ணை மூடியவாறு, உள்மூச்சையும் வெளிமூச்சையும் நாசியின் மத்தியில் சமமாக நிறுத்தி, இந்திரிய விஷயங்களை அகற்றி காமம் , குரோதம், லோபம் மோஹம், மத மாத்ஸர்யம் ஆகிய தோஷங்களை விடுத்து, தேவியை த்யானிக்க வேண்டும்.

________

Next | DeviGeethai Beginning | Previous


Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36