Devi Geethai 4.6-4.14

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

अहिंसा सत्यम्-अस्तेयं, ब्रह्मचर्यं दयाऽऽर्जवम् ।
क्षमा धृतिर्-मिताहारः, शौचं चेति यमा दश ॥ ६॥

அஹிம்ʼஸா ஸத்யம்-அஸ்தேயம்ʼ, 
ப்³ரஹ்மசர்யம்ʼ த³யா(ஆ)ர்ஜவம் .
க்ஷமா த்⁴ருʼதிர்-மிதாஹார꞉, 
ஶௌசம்ʼ சேதி யமா த³ஶ .. 6..

அஹிம்சை, ஸத்யம், களவில்லாம்மை,
ப்ரஹ்மசர்யம், தயை, சன்மார்க்கம் , பொறுமை, தைரியம், மிதமான ஆஹாரம், சுத்தம் ஆகிய
பத்தும் யமம்.
______

तपः सन्तोष आस्तिक्यं, दानं देवस्य पूजनम् ।
सिद्धान्त-श्रवणं चैव, ह्रीर्मतिश्च जपो हुतम् ॥ ७॥

தப꞉ ஸந்தோஷ ஆஸ்திக்யம்ʼ, 
தா³னம்ʼ தே³வஸ்ய பூஜனம் .
ஸித்³தா⁴ந்தஶ்ரவணம்ʼ சைவ, 
ஹ்ரீர்மதிஶ்ச ஜபோ ஹுதம் .. 7..

தவம், ஸந்தோஷம்,
வேதவாக்கில் பற்று, 
தானம், தேவ பூஜை,
ஸித்தாந்த ஸ்ரவணம்,
நாணம், நல்புத்தி, ஜபம்,
ஹோமம் ஆகிய பத்தும் நியமம்.
______

दशैते नियमाः प्रोक्ता, मया पर्वत-नायक ।

த³ஶைதே நியமா꞉ ப்ரோக்தா, மயா பர்வத-நாயக .

பர்வதநாயக! இவை பத்தும் நியமங்கள் என்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது.
______

पद्मासनं स्वस्तिकं च, भद्रं वज्रासनं तथा ॥ ८॥

वीरासनम्-इति प्रोक्तं, क्रमाद्-आसन-पञ्चकम् ।

பத்³மாஸனம்ʼ ஸ்வஸ்திகம்ʼ ச, 
ப⁴த்³ரம்ʼ வஜ்ராஸனம்ʼ ததா² .. 8..

வீராஸனம்-இதி ப்ரோக்தம்,
க்ரமாத்-ஆஸன-பஞ்சகம்.

பத்மாஸனம், ஸ்வஸ்திகாசனம், பத்ராஸனம், வஜ்ராஸனம், வீராஸனம் என்பவை வரிசையாக ஆசன-பஞ்சகம்.

______

ऊर्वोरुपरि विन्यस्य, सम्यक्-पादतले शुभे ॥ ९॥

अङ्गिष्ठौ च निबध्नीयाद्धस्ताभ्यां व्युत्क्रमात्ततः ।

ஊர்வோருபரி வின்யஸ்ய, ஸம்யக்-பாத³தலே ஶுபே⁴ .. 9..

அங்கி³ஷ்டௌ² ச நிப³த்⁴னீயாத்³, ஹஸ்தாப்⁴யாம்ʼ வ்யுத்-க்ரமாத்-தத꞉ .


பத்மாஸனம்:
பாதங்களை தொடைகளின் மேல் வைத்து, இரண்டு கைகளால் பெரிய விரல்களை முறையாக (கட்டைவிரலால்) பிடித்துக்கொண்டு நிமிர்ந்திருத்தல், பத்மாஸனம் என்று இதயபூர்வமாக உணர்ந்து யோகிகளால் சொல்லப்படுகிறது.

______

जानूर्वोरन्तरे सम्यक्-कृत्वा पादतले शुभे ।
ऋजुकायो विशेद्योगी, स्वस्तिकं तत्-प्रचक्षते ॥ ११॥

ஜானூர்வோரந்தரே ஸம்யக், க்ருʼத்வா பாத³தலே ஶுபே⁴ .
ருʼஜுகாயோ விஶேத்³-யோகீ³, ஸ்வஸ்திகம்ʼ தத்-ப்ரசக்ஷதே .. 11..

ஸ்வஸ்திகாசனம்:
இரண்டு பாதங்களையும் தொடைகளுக்கும் முழங்கால்களுக்கும் இடையிலுள்ள சந்தியில் வைத்து, உடம்பை நேராக இருத்தி, அமர்ந்த யோகி, ஸ்வஸ்திகத்தில் ப்ரகாசித்து இருப்பார்.

______

सीवन्याः पार्श्वयोर्न्यस्य, गुल्फ-युग्मं सुनिश्चितम् ।
वृषणाधः पादपार्ष्णी, पाणिभ्यां परिबन्धयेत् ॥ १२॥

भद्रासनमिति प्रोक्तं, योगिभिः परिपूजितम् ।

ஸீவன்யா꞉ பார்ஶ்வயோர்-ன்யஸ்ய, கு³ல்ப²-யுக்³மம்ʼ ஸுநிஶ்சிதம் .
வ்ருʼஷணாத⁴꞉ பாத³பார்ஷ்ணீ, பாணிப்⁴யாம்ʼ பரிப³ந்த⁴யேத் .. 12.

ப⁴த்³ராஸனமிதி ப்ரோக்தம்ʼ, யோகி³பி⁴꞉ பரிபூஜிதம்

புறங்கால்களை ப்ருஷ்ட பாகத்தின் பக்கத்தில் இருத்தி, மூலதாரத்தின்
அடிவழியாக குதிகால்கால்களை கைகளால் பிடித்திருத்தலே
பத்ராஸனம் என்று யோகிகளால் ஊர்ஜிதமாக கூறப்பட்டது.

______

ऊर्वोः पादौ क्रमान्न्यस्य, जान्वोः-प्रत्यङ्मुखाङ्गुली ॥ १३॥
करौ विदध्यादाख्यातं, वज्रासनमनुत्तमम् |

ஊர்வோ꞉ பாதௌ³ க்ரமான்-ன்யஸ்ய, ஜான்வோ꞉-ப்ரத்யங்-முகா²ங்கு³லீ .. 13..
கரௌ வித³த்⁴யாதா³க்²யாதம்ʼ, வஜ்ராஸனமனுத்தமம்.

தொடைகளை பாதங்களின் மேல் க்ரமமாக (சரியாக) வைத்து, முழங்கால்களில் கைவிரல்களை உள்முகமாக வைத்து,
நிமிர்ந்திருத்தல் - வஜ்ராஸனம்.
______

एकं पादमधः कृत्वा, विन्यस्योरुं तथोत्तरे ॥ १४॥

ऋजुकायो विशेद्योगी, वीरासनमितीरितम् ।

ஏகம்ʼ பாத³மத⁴꞉ க்ருʼத்வா, வின்யஸ்யோரும்ʼ ததோ²த்தரே .. 14..

ருʼஜுகாயோ விஶேத்³-யோகீ³, வீராஸனமிதீரிதம்

ஒரு பாதத்தை  பூமியிலும், மற்றொரு பாதத்தை தொடையின்
மேலும் வைத்து , சரீரத்தை நேராக நிமிர்ந்து வைத்து அமர்தலே 'வீராசனம்'என்று யோகிகளால் கூறப்பட்டது.

______



______

________

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36