Devi Geethai 4.26-4.30
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
______
इदानीं कथये तेऽहं, मन्त्र-योगम्-अनुत्तमम् ॥ २६॥
विश्वं शरीरमित्युक्तं, पञ्च-भूतात्मकं नग ।
चन्द्र-सूर्याग्नि-तेजोभि:, जीव-ब्रह्मैक्य-रूपकम् ॥ २७॥
இதா³னீம்ʼ கத²யே தே(அ)ஹம்ʼ,
மந்த்ரயோக³ம்-அனுத்தமம் .. 26..
விஶ்வம்ʼ ஶரீரமித்யுக்தம்ʼ,
பஞ்ச-பூ⁴தாத்மகம்ʼ நக³ .
சந்த்³ர-ஸூர்யாக்³னி-தேஜோபி⁴ர், ஜீவ-ப்³ரஹ்மைக்ய-ரூபகம் ..27..
______
ஹே பர்வதராஜனே!
இப்போது நான் உனக்கு உத்தமமான மந்திரயோகத்தை விளக்குகிறேன்.
'விஸ்வம்' எனப்படுகின்ற இந்த ப்ரபஞ்சத்தின் ஸமஷ்டி சரீரம்,
பஞ்ச பூதாத்மகமானது.
சந்திர-சூர்ய-அக்னியின் தேஜஸுடன் கூடி, ஜீவ-ப்ரம்ம-ஐக்ய ரூபமாக திகழ்கிறது.
______
तिस्रः कोट्यस्तदर्धेन, शरीरे नाडयो मताः ।
तासु मुख्या दश प्रोक्ता:, ताभ्यस्तिस्रो व्यवस्थिताः ॥ २८॥
திஸ்ர꞉ கோட்யஸ்-தத³ர்தே⁴ன,
ஶரீரே நாட³யோ மதா꞉ .
தாஸு முக்²யா த³ஶ ப்ரோக்தா:, தாப்⁴யஸ்-திஸ்ரோ வ்யவஸ்தி²தா꞉ .. 28.
இச்சரீரத்தில் மூன்றரை கோடி நாடிகள் உள்ளன. இவற்றுள் முக்கியமானவை பத்து நாடிகள். அவற்றுள்ளும் மூன்று நாடிகள் மிக முக்கியமானவை.
______
प्रधाना मेरु-दण्डेऽत्र, चन्द्र-सूर्याग्नि-रूपिणी ।
ப்ரதா⁴னா மேருத³ண்டே³(அ)த்ர,
சந்த்³ர-ஸூர்யாக்³நி-ரூபிணீ .
ப்ரதானமான ஸுஷும்னா நாடி, சந்த்ர-ஸூர்ய-அக்னி ரூபமானது.
மேரு-தண்டத்தின் ஊடே (மூலாதாரத்திலிருந்து தலைமேல் ப்ரம்மராந்திரம் வரை) ப்ரகாஸிக்கிறது.
______
इडा वामे स्थिता नाडी, शुभ्रा तु चन्द्र-रूपिणी ॥ २९॥
शक्ति-रूपा तु सा नाडी, साक्षाद्-अमृत-विग्रहा ।
இடா³ வாமே ஸ்தி²தா நாடீ³,
ஶுப்⁴ரா து சந்த்³ர-ரூபிணீ .. 29..
ஶக்தி-ரூபா து ஸா நாடீ³,
ஸாக்ஷாத்³-அம்ருʼத-விக்³ரஹா .
இடகலைநாடி, மேருதண்டத்தின் வாமபாகத்தில், சந்திரப் பிரகாசத்துடன், சக்தி ரூபமாக, ஸாக்ஷாத் அம்ருத விக்ரஹமாக ப்ரகாஸிக்கிறது.
_______
दक्षिणे या पिङ्गलाख्या, पुं-रूपा सूर्य-विग्रहा ॥ ३०॥
த³க்ஷிணே யா பிங்க³லாக்²யா,
பும்ʼ-ரூபா ஸூர்ய-விக்³ரஹா .. 30..
மேருதண்டத்தின் தஷிண பாகத்தில் ( வலது பக்கத்தில்) புருஷ ரூபமாக, ஸுர்ய ரூபமாக ப்ரகாசிக்கும் நாடி, பிங்களநாடி எனப்படும்.
_______
________
Comments
Post a Comment