Devi Geethai 1.1-1.4
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
देवी उवाच -
शृण्वन्तु निर्जराः सर्वे, व्याहरन्त्या वचो मम ।
यस्य श्रवणमात्रेण, मद्रूपत्वं प्रपद्यते ॥ १॥
தேவி உவாச -
ஶ்ருʼண்வந்து நிர்ஜரா꞉ ஸர்வே,
வ்யாஹரந்த்யா வசோ மம .
யஸ்ய ஶ்ரவணமாத்ரேண,
மத்³ரூபத்வம்ʼ ப்ரபத்³யதே .. 1..
மூப்பற்ற தேவர்கள் அனைவரும் இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். அதைக்கேட்ட மாத்திரத்தில் நீங்கள் அனைவரும் என் சொரூபத்தை அடைவீர்கள் என்றாள் தேவி.
______
अहमेवास पूर्वं मे, नान्यत्-किञ्चित्-नगाधिप ।
तदात्मरूपं चित्संवित्, परब्रह्मैक-नामकम् ॥ २॥
அஹமேவாஸ பூர்வம்ʼ மே,
நான்யத்கிஞ்சின்னகா³தி⁴ப .
ததா³த்மரூபம்ʼ சித்ஸம்ʼவித்,
பரப்³ரஹ்மைக-நாமகம் .. 2..
ஸ்ருஷ்டிக்கு முன் என்னைத்தவிர வேறொன்று இன்றி, ஆத்மரூபமாகவும், சித்ஸம்வித் ரூபமாகவும், பரப்ரஹ்மா என்ற ஏகநாமத்துடன் நான் மாத்திரம் இருந்தேன்.
_______
अप्रतर्क्यम्-अनिर्देश्यम्, अनौपम्यम्-अनामयम् ।
तस्य काचित्-स्वतःसिद्धा, शक्तिर्मायेति विश्रुता ॥ ३॥
அப்ரதர்க்யம்-அநிர்தே³ஶ்யம்,
அனௌபம்யம்-அநாமயம் .
தஸ்ய காசித்-ஸ்வத꞉ஸித்³தா⁴,
ஶக்திர்மாயேதி விஶ்ருதா .. 3..
அந்த பரப்ரம்மம், இப்படிப்பட்டது என்று அளவுபடுத்தற்கு அரியது. உபமானமற்றது. அப்படிப்பட்ட பரப்ரம்மமாகிய என்னிடம், நீக்கமற்று இருப்பதான ஒரு சக்தி உள்ளது. அது மாயாசக்தி எனப்படுகிறது.
________
न सती सा नासती सा, नोभयात्मा विरोधतः ।
एतद्-विलक्षणा काचित्, वस्तुभूताऽस्ति सर्वदा ॥ ४॥
ந ஸதீ ஸா நாஸதீ ஸா,
நோப⁴யாத்மா விரோத⁴த꞉ .
ஏதத்³விலக்ஷணா காசித்³,
வஸ்துபூ⁴தா(அ)ஸ்தி ஸர்வதா³ .. 4..
அந்த மாயா சக்தி, 'சத்' என்றோ, 'அசத்' என்றோ, 'சத்அசத்' கூடிய ஒன்று என்றோ சொல்லத்தக்கதல்ல. இப்படிப்பட்ட லஷணங்களுடைய ஏதோ ஒரு வஸ்து எப்போழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.
_________
Comments
Post a Comment