श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
पावकस्य-उष्णता-इवेयम्, उष्णांशोरिव दीधितिः ।
चन्द्रस्य चन्द्रिका-इवेयं, ममेयं सहजा ध्रुवा ॥ ५॥
பாவகஸ்ய-உஷ்ணதா-இவேயம்,
உஷ்ணாம்ஶோரிவ தீ³தி⁴தி꞉ .
சந்த்³ரஸ்ய சந்த்³ரிகேவேயம்,
மமேயம் ஸஹஜா த்⁴ருவா .. 5..
அக்னியிடமுள்ள சூடும், சூரியனிடத்திலுள்ள ஒளியும், சந்திரனுடைய நிலவொளியும் எப்படி வேறின்றி இருக்கின்றனவோ, அவ்வாறு ப்ரம்மத்தினின்று வேறின்றி நானிருக்கிறேன்.
_________
तस्यां कर्माणि जीवानां, जीवाः कालाश्च सञ्चरे ।
अभेदेन विलीनाः स्युः, सुषुप्तौ व्यवहारवत् ॥ ६॥
தஸ்யாம் கர்மாணி ஜீவானாம்,
ஜீவா꞉ காலாஶ்ச ஸஞ்சரே .
அபே⁴தே³ன விலீனா꞉ ஸ்யு꞉,
ஸுஷுப்தௌ வ்யவஹாரவத் .. 6..
சுஷுப்தி அவஸ்தையில் விவகாரங்களெல்லாம் அடங்கியிருப்பது போல, அந்த மாயா சக்தியில், எல்லா ஜீவன்களும், ஜீவன்களுடைய கர்மங்களும், காலங்களும் வேற்றுமையின்றி அடங்கியிருக்கின்றன.
________
स्वशक्तेश्च समायोगात्, अहं बीजात्मतां गता ।
स्वधारावरणात्-तस्या , दोषत्वं च समागतम् ॥ ७॥
ஸ்வஶக்தேஶ்ச ஸமாயோகா³த்,
அஹம் பீ³ஜாத்மதாம் க³தா .
ஸ்வதா⁴ராவரணாத்-தஸ்யா,
தோ³ஷத்வம் ச ஸமாக³தம் .. 7..
இந்த மாயையில் என்னுடைய சக்தியின் சம்பந்தத்தால், இந்த மாயைக்கு நானே பீஜாத்மாவாக இருக்கிறேன். ஆனாலும், இந்த மாயைக்கு ஆவரணமாகிய மறைக்கும் சக்தி என்ற தோஷமும் கூட சேர்ந்து இருக்கின்றது.
_________
चैतन्यस्य समायोगात्, निमित्तत्वं च कथ्यते ।
प्रपञ्च-परिणामात्-च समवायित्वम्-उच्यते ॥ ८॥
சைதன்யஸ்ய ஸமாயோகா³த்,
நிமித்தத்வம் ச கத்²யதே .
ப்ரபஞ்ச-பரிணாமாத்-ச,
ஸமவாயித்வம்-உச்யதே .. 8..
(இந்த மாயையில் என் சம்பந்தம் இருப்பதால், என் சைதன்யமும் இந்த மாயையில் சம்பந்தப்பட்டிருக்கிறது). சைதன்ய சம்பந்தத்தால், மாயையே ப்ரபஞ்சத்திற்கு நிமித்த காரணமாக உள்ளது. மேலும், மாயை, ப்ரபஞ்சமாக பரிணாமப்படுவதால், மாயைக்கு ப்ரபஞ்சத்துடன் ஆழ்ந்த சம்பந்தம் உள்ளது என்று கூறப்படுகிறது.
_______
केचित्-तां तप इत्याहु:, तमः केचित्-जडं परे ।
ज्ञानं माया प्रधानं च, प्रकृतिं शक्तिम्-अपि-अजाम् ॥ ९॥
கேசித்-தாம் தப இத்யாஹுः,
தம꞉ கேசித்-ஜட³ம் பரே .
ஜ்ஞானம் மாயா ப்ரதா⁴னம் ச,
ப்ரக்ருதிம் ஶக்திம்-அபி-அஜாம் .. 9..
ஒரு சிலர் இந்த மாயையை 'தமஸ்' என்றும், சிலர் தபஸ் என்றும், சிலர் ஜடம் என்றும் கூறுவர். சிலர் மாயையே ஞானம் என்றும் , பிரதானமென்றும், ப்ரக்ருதி என்றும், சக்தியென்றும், பிறப்பற்றவள் என்றும் கூறுவர்.
________
विमर्श इति तां प्राहुः, शैव-शास्त्र-विशारदाः ।
अविद्याम्-इतरे प्राहुः, वेद-तत्त्वार्थ-चिन्तकाः ॥ १०॥
விமர்ஶ இதி தாம்ʼ ப்ராஹு꞉,
ஶைவ-ஶாஸ்த்ர-விஶாரதா³꞉ .
அவித்³யாம்-இதரே ப்ராஹுः,
வேத³-தத்த்வார்த²-சிந்தகா꞉ .. 10..
சைவ சாஸ்த்ர வல்லுநர்கள், இந்த மாயையை பரந்து விரிந்த ப்ரபஞ்சம் என்கிறார்கள். வேத-தத்வார்த்த சிந்தனையாளர்கள், இந்த மாயையை அவித்யா என்கிறார்கள்.
________
Next
|
DeviGeethai Beginning
|
Previous
Comments
Post a Comment