Devi Geethai 2.7-2.12
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
वदन्ति चात्मा कर्तेति, विमूढा न सुबुद्धयः ।
अज्ञान-भेदतस्-तद्वन्, मायाया भेदतस्-तथा ॥ ७॥
வத³ந்தி சாத்மா கர்தேதி,
விமூடா⁴ ந ஸுபு³த்³த⁴ய꞉ .
அஜ்ஞான-பே⁴த³தஸ்-தத்³வன்,
மாயாயா பே⁴த³தஸ்-ததா² .. 7..
ஆன்மாவை கர்த்தா என்று மூடர்கள்
கூறுவார்கள், அறிஞர்கள் கூறார்.
புத்தி தான் செயல்காரகன், ஆன்மாவுக்கு இருப்பு மட்டுமே உள்ளது, செயல் இல்லை.
__________
जीवेश्वर-विभागश्च, कल्पितो माययैव तु ।
घटाकाश-महाकाश, विभागः कल्पितो यथा ॥ ८॥
ஜீவேஶ்வர-விபா⁴க³ஶ்ச,
கல்பிதோ மாயயைவ து .
க⁴டாகாஶ-மஹாகாஶ,
விபா⁴க³꞉ கல்பிதோ யதா² .. 8..
அஞ்ஞான பேதத்தாலும், மாயையின் பேதத்தாலும், ஜீவன்-ஈஸ்வரன் என்று
பிரிக்கப்படுகிறது. ஆகாசமானது எவ்வாறு, குடத்துள் இருக்கும் ஆகாசம், குடத்துக்கு வெளியே இருக்கும் ஆகாசம் என பேதப்படுகிறதோ,
அவ்வாறே, மாயையாலேயே ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பேதம் ஏற்படுகிறது. உண்மையில் ஆகாசம் ஒன்றே. அது போல, ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உண்மையில் பேதமில்லை.
_________
तथैव कल्पितो भेदो, जीवात्म-परमात्मनोः ।
यथा जीव-बहुत्वं च, माययैव न च स्वतः ॥ ९॥
ததை²வ கல்பிதோ பே⁴தோ³,
ஜீவாத்ம-பரமாத்மனோ꞉ .
யதா² ஜீவ-ப³ஹுத்வம்ʼ ச,
மாயயைவ ந ச ஸ்வத꞉ .. 9..
கடாகாஸ-மஹாகாஸ பேதம் போலவே, ஜீவாத்மா-பரமாத்மாவுக்குள் பேதம் கற்பிக்கப்பட்டது. மாயையாலேயே ஜீவன்கள் பலவாக உள்ளனவேயன்றி,
ஆத்மாவின் ஸ்வபாவம் அது அல்ல.
_________
तथेश्वर-बहुत्वं च, मायया न स्वभावतः ।
देहेन्द्रियादि-सङ्घात, वासनाभेद-भेदिता ॥ १०॥
ததே²ஶ்வர-ப³ஹுத்வம்ʼ ச,
மாயயா ந ஸ்வபா⁴வத꞉ .
தே³ஹேந்த்³ரியாதி³ஸங்கா⁴த,
வாஸநாபே⁴த³-பே⁴தி³தா .. 10..
அதே போல் ஈஸ்வரனுடைய பலரூபங்களும் கூட மாயையாலேயே அன்றி ஈஸ்வரனின் ஸ்வபாவத்தால் அல்ல. உடல் மற்றும் ஞான-கர்மேந்திரிய சேர்க்கையாலும்,
முன்ஜன்ம-குண-வாஸனையாலும், ஜீவன்களுக்குள் பேதம் ஏற்படுகிறதே அன்றி, உண்மையில் ஜீவன்களிடையே பேதம் இல்லை.
_________
अविद्या जीवभेदस्य, हेतुर्नान्यः प्रकीर्तितः ।
गुणानां वासनाभेद, भेदिता या धराधर ॥ ११॥
அவித்³யா ஜீவபே⁴த³ஸ்ய,
ஹேதுர்நான்ய꞉ ப்ரகீர்தித꞉ .
கு³ணானாம்ʼ வாஸநாபே⁴த³,
பே⁴தி³தா யா த⁴ராத⁴ர .. 11
ஹே தரணீதரனே ! ஜீவன்களுக்குள் உள்ள பேதத்திற்கு அவித்யையே காரணம். அதைத்தவிர வேறு ஒரு காரணமும் ஏற்புடையதல்ல. குணங்களின் வாசனையால் பேதங்கள் ஏற்பபட்டன.
__________
माया सा परभेदस्य, हेतुर्नान्यः कदाचन ।
मयि सर्वमिदं प्रोत-मोतं च धरणीधर ॥ १२॥
மாயா ஸா பரபே⁴த³ஸ்ய,
ஹேதுர்னான்ய꞉ கதா³சன .
மயி ஸர்வமித³ம்ʼ ப்ரோத-
மோதம்ʼ ச த⁴ரணீத⁴ர .. 12..
ஹே தரணீதரனே! ஈஶ்வரனின் ரூபங்களுக்கும் மாயையே காரணம்.
வேறெதுவுமல்ல. மேலும் இந்த ப்ரபஞ்சம் முழுவதும் என்னில் பின்னிப் பிணைந்துள்ளது.
_________
Comments
Post a Comment