Devi Geethai 2.13-2.19

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

ईश्वरोऽहं च सूत्रात्मा, विराडात्मा-अहमस्मि च ।
ब्रह्माऽहं विष्णुरुद्रौ च, गौरी ब्राह्मी च वैष्णवी ॥ १३

ஈஶ்வரோ(அ)ஹம்ʼ ச ஸூத்ராத்மா, 
விராடா³த்மா-அஹமஸ்மி ச .
ப்³ரஹ்மா(அ)ஹம்ʼ விஷ்ணு-ருத்³ரௌ ச, 
கௌ³ரீ ப்³ராஹ்மீ ச வைஷ்ணவீ .. 13..

இந்த ப்ரபஞ்சமெல்லாமும் நானே. அனைத்தையும் ஆட்டுவிக்கும் 
ஸுத்ராத்மாவாக இருக்கின்ற ஈஸ்வரனும் நானே. ஸ்தூல ஶரீர ஸமஷ்டியான விராட் சொரூபமும் நானே. ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரரும் நானே. ப்ராஹ்மீ, வைஷ்ணவீ, கௌரீயும் நானே.

________

सूर्योऽहं तारकाश्चाहं, तारकेशस्-तथास्म्यहम् ।
पशुपक्षि-स्वरूपाऽहं, चाण्डालोऽहं च तस्करः ॥ १४॥

ஸூர்யோ(அ)ஹம்ʼ தாரகாஶ்சாஹம்ʼ, 
தாரகேஶஸ்-ததா²ஸ்ம்யஹம் .
பஶுபக்ஷி-ஸ்வரூபா(அ)ஹம்ʼ, 
சாண்டா³லோ(அ)ஹம்ʼ ச தஸ்கர꞉ .. 14..

சூர்யனும் நானே, நட்சத்திரங்களும் நானே. மிருக-பறவை ஸ்வரூபங்களும் நானே. சண்டாளனும் நானே. திருடனும் நானே.

__________

व्याधोऽहं क्रूर-कर्माऽहं, सत्कर्मोऽहं महाजनः ।
स्त्री-पुं-नपुंसकाकारोऽपि,अहमेव न संशयः ॥ १५॥

வ்யாதோ⁴(அ)ஹம்ʼ க்ரூரகர்மா(அ)ஹம்ʼ, 
ஸத்கர்மோ(அ)ஹம்ʼ மஹாஜன꞉ .
ஸ்த்ரீ-புந்-நபும்ʼஸகாகாரோ(அ)பி,
அஹமேவ ந ஸம்ʼஶய꞉ .. 15

கொடுஞ் செயல் செய்பவனும் நானே, கொடுஞ்செயலும் நானே. சத்கர்மாவும் நானே. சத்கர்மாவை செய்யும் மஹாத்மாவும் நானே. ஸ்திரீயாகவும், ஆணாகவும், லிங்க பேதமற்றும் கூட
நானே இருக்கிறேன். சந்தேகமே வேண்டாம்.

________

यच्च किञ्चित्-क्वचिद्-वस्तु, दृश्यते श्रूयतेऽपि वा ।
अन्तर्बहिश्च तत्सर्वं, व्याप्याहं सर्वदा स्थिता ॥ १६॥

யச்ச கிஞ்சித்-க்வசித்³-வஸ்து, 
த்³ருʼஶ்யதே ஶ்ரூயதே(அ)பி வா .
அந்தர்-ப³ஹிஶ்ச தத்ஸர்வம்ʼ, 
வ்யாப்யாஹம்ʼ ஸர்வதா³ ஸ்தி²தா .. 16..

இவ்வுலகில் அணு அளவாயினும், பொருட்கள் எவை காணப் படுகின்றனவோ, கேட்கப் படுகின்றனவோ, அவை அனைத்தின் உள்ளேயும் வெளியேயும், நான் எப்போதும் வியாபித்து இருக்கிறேன்.

_________

न तदस्ति मया त्यक्तं, वस्तु किञ्चिच्-चराचरम् ।
यदि-अस्ति चेत्-तच्छून्यं स्याद्, वन्ध्या-पुत्रोपमं हि तत् ॥ १७॥

ந தத³ஸ்தி மயா த்யக்தம்ʼ, 
வஸ்து கிஞ்சிச்-சராசரம் .
யத்³யஸ்தி சேத்-தச்சூ²ன்யம்ʼ ஸ்யாத்³,
வந்த்⁴யா-புத்ரோபமம்ʼ ஹி தத் .. 17..

சராசரத்தில் என்னை விடுத்து, சிறிதளவும் வேறு ஏதும் இல்லை. ஒரு வேளை இருக்கும் எனின், அது சூன்யம் தான். அது குழந்தை இல்லாதவருடைய மகன் என்பது போன்றதே ஆகும்.

_________

रज्जुर्यथा सर्पमाला, भेदैरेका विभाति हि ।
तथैवेशादि-रूपेण, भाम्यहं नात्र संशयः ॥ १८॥

ரஜ்ஜுர்யதா² ஸர்பமாலா,
பே⁴தை³ரேகா விபா⁴தி ஹி .
ததை²வேஶாதி³ -ரூபேண, 
பா⁴ம்யஹம்ʼ நாத்ர ஸம்ʼஶய꞉ .. 18..

ஒரே கயிறு, நமக்கு பாம்பாகவோ, 
மாலையாகவோ தெரிவது போல, ஈஶன் முதலிய அனைத்து ரூபங்களிலும் நானே ஒளிர்கிறேன். அதில் சந்தேகமில்லை.

__________

अधिष्ठानातिरेकेण, कल्पितं तन्न भासते ।
तस्मान्-मत्सत्-तयैवैतत्, सत्-तावन्-नान्यथा भवेत् ॥ १९॥

அதி⁴ஷ்டா²னாதிரேகேண, 
கல்பிதம்ʼ தன்ன பா⁴ஸதே .
தஸ்மான்-மத்-ஸத்-தயைவைதத்,
ஸத்-தாவன்-னான்யதா² ப⁴வேத் .. 19..

வஸ்துக்கள் தானாகவே ஒளிர்வதில்லை. அவற்றுள் இருக்கும் என்னால் ப்ரகாகிக்கின்றன. அதனால் அறியப்படுவது என்ன என்றால், எனக்கு 'ஸத்' உள்ளது. என்னுடைய
'ஸத்'யினாலேயே வஸ்துக்களுக்கும் 'ஸத்' உண்டாகிறது. வேறொன்றால் அல்ல.

___________



Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36