Devi Geethai 3.12-3.17
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
ज्ञानादेव हि कैवल्यम्, अतः स्यात्-तत्-समुच्चयः ।
सहायतां व्रजेत्-कर्म, ज्ञानस्य हितकारि च ॥ १२॥
ஜ்ஞாநாதே³வ ஹி கைவல்யம்,
அத꞉ ஸ்யாத்-தத்-ஸமுச்சய꞉ .
ஸஹாயதாம்ʼ வ்ரஜேத்-கர்ம,
ஜ்ஞானஸ்ய ஹிதகாரி ச .. 12..
ஞானத்தால் தான் கைவல்யம் ஸித்திஆகும். அதனால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. கர்மம் ஞானத்திற்கு நன்மை செய்வதாய் இருக்கிறது. வேதம் கூறும் படி செய்யப்படும் கர்மம், ஞானத்திற்கு ஸஹாயமாக உடன் செல்கிறது.
_________
इति केचिद्-वदन्त्यत्र, तद्-विरोधान्न संभवेत् ।
ज्ञानाधृद्-ग्रन्थि-भेदः स्यात्, हृद्-ग्रन्थौ कर्म-संभवः ॥ १३॥
இதி கேசித்³-வத³ந்த்யத்ர, தத்³-விரோதா⁴ன்ன ஸம்ப⁴வேத் .
ஜ்ஞானாத்⁴ருʼத்³-க்³ரந்தி²-பே⁴த³꞉ ஸ்யாத்,
ஹ்ருʼத்³-க்³ரந்தௌ² கர்ம-ஸம்ப⁴வ꞉ .. 13..
ஞானமும் கர்மமும் ஒன்றுக்கொன்று முரண்படுவதால், கர்மா ஞானத்திற்கு
ஸஹாயமாகாது என்று சிலர் கூறுகின்றனர். ஞானத்தால் ஹ்ருதய க்ரந்தி தளர்வடையும். ஹ்ருதய க்ரந்தி அஞ்ஞான ராக-த்வேஷத்தால் இறுகியுள்ளபோது கர்மம் சம்பவிக்கிறது.
_________
यौगपद्यं न संभाव्यं,
विरोधात्तु ततस्-तयोः ।
तमःप्रकाशयोर्-यद्वत्,
यौगपद्यं न संभवि ॥ १४॥
யௌக³பத்³யம்ʼ ந ஸம்பா⁴வ்யம்ʼ,
விரோதா⁴த்து ததஸ்-தயோ꞉ .
தம꞉ப்ரகாஶயோர்-யத்³வத்³,
யௌக³பத்³யம்ʼ ந ஸம்ப⁴வி .. 14..
ஆனால் கர்மமும் ஞானமும் எதிரெதிராக இருப்பதால், அவை இரண்டும் ஒன்றாய் ஸம்பவிக்கமுடியாது. இருளும் ஒளியும் ஒன்றாய் ஓரிடத்தில் ஸம்பவிக்க முடியாதது போல.
_________
तस्मात्-सर्वाणि कर्माणि, वैदिकानि महामते ।
चित्त-शुद्ध्यन्तमेव स्युः, तानि कुर्यात्-प्रयत्नतः ॥ १५॥
தஸ்மாத்-ஸர்வாணி கர்மாணி,
வைதி³கானி மஹாமதே .
சித்த-ஶுத்³த்⁴யந்தமேவ ஸ்யு:,
தானி குர்யாத்-ப்ரயத்னத꞉ .. 15..
அறிவில் சிறந்தவனே! அதனால் சித்தஶுத்தி அடையும் வரை, அனைத்து வைதீக கடமைகளையும் முழு முயற்சியுடன் செய்ய வேண்டும்.
_________
शमो दमस्-तितिक्षा च, वैराग्यं सत्त्व-संभवः ।
तावत्-पर्यन्तमेव स्युः, कर्माणि न ततः परम् ॥ १६॥
ஶமோ த³மஸ்-திதிக்ஷா ச,
வைராக்³யம்ʼ ஸத்த்வ-ஸம்ப⁴வ꞉ .
தாவத்-பர்யந்தமேவ ஸ்யு꞉,
கர்மாணி ந தத꞉ பரம் .. 16..
மனவடக்கம், புலனடக்கம், இன்ப-துன்பங்களை சமமாய் ஏற்றுக் கொள்ளுதல், எதன்மீதும் பற்றின்றி வைராக்கியத்துடன் இருத்தல், ஸாத்வீக குணம் ஆகியவை நமக்கு ஸம்பவிக்கும் வரை கர்மாக்களை கடைபிடிக்க வேண்டும். இந்த குணங்களை அடைந்த பிறகு கர்மாக்களை விட்டுவிட வேண்டும்.
_________
तदन्ते चैव संन्यस्य, सश्रयेद्-गुरुम्-आत्मवान् ।
श्रोत्रियं ब्रह्म-निष्ठं च, भक्त्या निर्व्याजया पुनः ॥ १७॥
தத³ந்தே சைவ ஸம்ʼந்யஸ்ய,
ஸஶ்ரயேத்³-கு³ரும்-ஆத்மவான் .
ஶ்ரோத்ரியம்ʼ ப்³ரஹ்ம-நிஷ்ட²ம்ʼ ச,
ப⁴க்த்யா நிர்வ்யாஜயா புன꞉ .. 17..
அதன் பின்னர் ( கர்மத்தை விட்டபின்),
பந்தங்களை துறந்து, பின்னர்
வேதவித்தான, ப்ரம்ம-நிஷ்டரான ஸத்-ஆத்மவானான குருவை பக்தியுடன்
அணுக வேண்டும்.
_________
Comments
Post a Comment