Posts

Showing posts from September, 2023

Devi Geethai - 4.1-4.5

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ ॥ अथ चतुर्तोऽध्यायः ॥ योग-मन्त्र-सिद्धि-सादनम् । .. அத² சதுர்த்தோ(அ)த்⁴யாய꞉ .. யோக மந்த்ர ஸித்தி ஸாதனம். தேவி கீதை நான்காவது அத்தியாயம். யோக மந்த்ர ஸித்திக்கான வழி. ______ हिमालय उवाच - योगं वद महेशानि, साङ्ग संवित्-प्रदायकम् । कृतेन येन योग्योऽहं- भवेयं तत्त्व-दर्शने ॥ १॥ ஹிமாலய உவாச - யோக³ம்ʼ வத³ மஹேஶானி,  ஸாங்க³ ஸம்ʼவித்-ப்ரதா³யகம் . க்ருʼதேன யேன யோக்³யோ(அ)ஹம்ʼ, ப⁴வேயம்ʼ தத்த்வ-த³ர்ஶனே .. 1.. பர்வதராஜன் கூறுகிறான்-- ஹே மஹேஶானி! எதைச்செய்வதால், நான், ஞானப்பிரதமாக இருக்கிற தத்வ தரிசனத்திற்கு யோக்யனாவேனோ, அப்படிப்பட்ட யோகத்தை, அதற்குரிய அங்கங்களோடு எனக்கு அனுக்கிரகம் செய்வாயாக! _______ श्रीदेवी-उवाच - न योगो नभसः पृष्ठे, न भूमौ न रसातले । ऐक्यं जीवात्मनोराहु:, योगं योग-विशारदाः ॥ २॥ ஶ்ரீதே³வீ-உவாச - ந யோகோ³ நப⁴ஸ꞉ ப்ருʼஷ்டே²,  ந பூ⁴மௌ ந ரஸாதலே . ஐக்யம்ʼ ஜீவாத்மனோராஹு:, யோக³ம்ʼ யோக³-விஶாரதா³꞉ ..  தேவி கூறுகிறாள்: நீ கேட்கின்ற இந்த ஞானப்பிரதமான யோகமானது, ஆகாஸத்தைத் தாண்டியோ, பூமியிலோ, பாதாளத்திற்கு கீழேயோ எங்கும் இல்லை. ஜீவாத்ம-பரமாத...