Devi Geethai - 4.1-4.5
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
॥ अथ चतुर्तोऽध्यायः ॥
योग-मन्त्र-सिद्धि-सादनम् ।
.. அத² சதுர்த்தோ(அ)த்⁴யாய꞉ ..
யோக மந்த்ர ஸித்தி ஸாதனம்.
தேவி கீதை நான்காவது அத்தியாயம்.
யோக மந்த்ர ஸித்திக்கான வழி.
______
हिमालय उवाच -
योगं वद महेशानि, साङ्ग संवित्-प्रदायकम् ।
कृतेन येन योग्योऽहं- भवेयं तत्त्व-दर्शने ॥ १॥
ஹிமாலய உவாச -
யோக³ம்ʼ வத³ மஹேஶானி,
ஸாங்க³ ஸம்ʼவித்-ப்ரதா³யகம் .
க்ருʼதேன யேன யோக்³யோ(அ)ஹம்ʼ, ப⁴வேயம்ʼ தத்த்வ-த³ர்ஶனே .. 1..
பர்வதராஜன் கூறுகிறான்--
ஹே மஹேஶானி!
எதைச்செய்வதால், நான், ஞானப்பிரதமாக இருக்கிற தத்வ தரிசனத்திற்கு யோக்யனாவேனோ,
அப்படிப்பட்ட யோகத்தை, அதற்குரிய அங்கங்களோடு எனக்கு அனுக்கிரகம் செய்வாயாக!
_______
श्रीदेवी-उवाच -
न योगो नभसः पृष्ठे, न भूमौ न रसातले ।
ऐक्यं जीवात्मनोराहु:, योगं योग-विशारदाः ॥ २॥
ஶ்ரீதே³வீ-உவாச -
ந யோகோ³ நப⁴ஸ꞉ ப்ருʼஷ்டே²,
ந பூ⁴மௌ ந ரஸாதலே .
ஐக்யம்ʼ ஜீவாத்மனோராஹு:,
யோக³ம்ʼ யோக³-விஶாரதா³꞉ ..
தேவி கூறுகிறாள்:
நீ கேட்கின்ற இந்த ஞானப்பிரதமான யோகமானது, ஆகாஸத்தைத் தாண்டியோ, பூமியிலோ, பாதாளத்திற்கு கீழேயோ எங்கும் இல்லை.
ஜீவாத்ம-பரமாத்ம-ஐக்கியமே யோகம் என்று ஸ்ரேஷ்டர்களால்
கூறப்படுகிறது.
_______
तत्-प्रत्यूहाः षडाख्याता, योग-विघ्नकरा-नघ ।
काम-क्रोधौ लोभ-मोहौ, मद-मात्सर्य-संज्ञकौ ॥ ३॥
தத்-ப்ரத்யூஹா꞉ ஷடா³க்²யாதா,
யோக³-விக்⁴னகரா-நக⁴ .
காம-க்ரோதௌ⁴ லோப⁴-மோஹௌ,
மத³-மாத்ஸர்ய-ஸஞ்ஜ்ஞகௌ .. 3..
ஜீவாத்ம-பரமாத்ம-ஐக்கியமாகிய
யோகத்திற்கு, ஆறு தடைகள் உள்ளன. அவை காமம், கோபம், பேராசை, மோஹம், அஹங்காரம், பொறாமை ஆகியவை.
இவ்விக்னங்களை தம்மிடம் வரவிடாமல் தடுக்கத் தக்கவர்களே,
ஜீவான்ம-பரமான்ம-ஐக்கிய யோகத்தை அடைவார்கள்.
_______
योगाङ्गैर्-एव भित्त्वा, तान्-योगिनो योगम्-आप्नुयुः ।
यमं नियमम्-आसन,प्राणायामौ ततःपरम् ॥ ४॥
யோகா³ங்கை³ர்-ஏவ பி⁴த்த்வா,
தான்-யோகி³னோ யோக³ம்-ஆப்னுயு꞉ .
யமம்ʼ நியமம்-ஆஸன,
ப்ராணாயாமௌ தத꞉பரம் .. 4..
(இந்த யோகத்துக்கு அங்கங்கள் எட்டு.) யோக
அங்கங்களை உபயோகித்து,
தடைகளை துளைத்து,
யோகிகள், ஜீவ-பரமாத்ம-ஐக்கிய
யோகத்தை அடைகின்றனர். (அந்த எட்டு யோக அங்கங்கள் யாவை எனின்,) யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம்,
தாரணை, த்யானம், சமாதி என்பன. (இவைகளே யோகத்திற்கு சாதனமாக கூறப்படும்.)
______
प्रत्याहारं धारणाख्यं, ध्यानं सार्धं समाधिना ।
अष्टाङ्गानि-आहुर्-एतानि, योगिनां योग-साधने ॥ ५॥
ப்ரத்யாஹாரம்ʼ தா⁴ரணாக்²யம்ʼ,
த்⁴யானம்ʼ ஸார்த⁴ம்ʼ ஸமாதி⁴னா .
அஷ்டாங்கா³னி-ஆஹுர்-ஏதானி,
யோகி³னாம்ʼ யோக³-ஸாத⁴னே .. 5..
இவை எட்டும் யோக ஸாதனத்தின் எட்டு அங்கங்கள் என யோகிகளால் சொல்லப்படுகிறது.
______
________
Comments
Post a Comment