Devi Geethai 4.26-4.30
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ______ इदानीं कथये तेऽहं, मन्त्र-योगम्-अनुत्तमम् ॥ २६॥ विश्वं शरीरमित्युक्तं, पञ्च-भूतात्मकं नग । चन्द्र-सूर्याग्नि-तेजोभि:, जीव-ब्रह्मैक्य-रूपकम् ॥ २७॥ இதா³னீம்ʼ கத²யே தே(அ)ஹம்ʼ, மந்த்ரயோக³ம்-அனுத்தமம் .. 26.. விஶ்வம்ʼ ஶரீரமித்யுக்தம்ʼ, பஞ்ச-பூ⁴தாத்மகம்ʼ நக³ . சந்த்³ர-ஸூர்யாக்³னி-தேஜோபி⁴ர், ஜீவ-ப்³ரஹ்மைக்ய-ரூபகம் ..27.. ______ ஹே பர்வதராஜனே! இப்போது நான் உனக்கு உத்தமமான மந்திரயோகத்தை விளக்குகிறேன். 'விஸ்வம்' எனப்படுகின்ற இந்த ப்ரபஞ்சத்தின் ஸமஷ்டி சரீரம், பஞ்ச பூதாத்மகமானது. சந்திர-சூர்ய-அக்னியின் தேஜஸுடன் கூடி, ஜீவ-ப்ரம்ம-ஐக்ய ரூபமாக திகழ்கிறது. ______ तिस्रः कोट्यस्तदर्धेन, शरीरे नाडयो मताः । तासु मुख्या दश प्रोक्ता:, ताभ्यस्तिस्रो व्यवस्थिताः ॥ २८॥ திஸ்ர꞉ கோட்யஸ்-தத³ர்தே⁴ன, ஶரீரே நாட³யோ மதா꞉ . தாஸு முக்²யா த³ஶ ப்ரோக்தா:, தாப்⁴யஸ்-திஸ்ரோ வ்யவஸ்தி²தா꞉ .. 28. இச்சரீரத்தில் மூன்றரை கோடி நாடிகள் உள்ளன. இவற்றுள் முக்கியமானவை பத்து நாடிகள். அவற்றுள்ளும் மூன்று நாடிகள் மிக முக்கியமானவை. ______ प्रधाना मेरु-दण्डेऽत्र, चन्...