Posts

Showing posts from June, 2023

Devi Geethai - 3.46-3.50

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ भक्त्या निर्व्याजया युक्तो, गुहायां निःस्वने स्थले । हकारं विश्वमात्मानं, रकारे प्रविलापयेत् ॥ ४६॥ ப⁴க்த்யா நிர்வ்யாஜயா யுக்தோ,  கு³ஹாயாம்ʼ நி꞉ஸ்வனே ஸ்த²லே . ஹகாரம்ʼ விஶ்வமாத்மானம்ʼ,  ரகாரே ப்ரவிலாபயேத் .. 46 அதன்பின்னர், நிஷ்காம பக்தியுடன், சப்த கோஷமில்லாத குகையாகிய ஹ்ருதயாகஶத்தில் (ஹ்ருதய மத்தியில்) ஸ்தூல ஶரீரபிமானியான (விஸ்வம்) விஸ்வாத்மாவான 'ஹ'-கார அக்ஷரத்தை , 'ர'-கார அக்ஷரத்துடன் இரண்டறக் கலந்து த்யானிக்க வேண்டும். ________ रकारं तैजसं देवम्, ईकारे प्रविलापयेत् । ईकारं प्राज्ञयात्मानं, ह्रीङ्कारे प्रविलापयेत् ॥ ४७॥ ரகாரம்ʼ தைஜஸம்ʼ தே³வம்,  ஈகாரே ப்ரவிலாபயேத் . ஈகாரம்ʼ ப்ராஜ்ஞயாத்மானம்ʼ,  ஹ்ரீங்காரே ப்ரவிலாபயேத் .. 47.. ஸுக்ஷ்ம ஶரீராபிமானியான 'தைஜஸம் ' ஆகிய 'ர'-கார அக்ஷரத்தை,‌‌ 'ஈ'-காரத்தோடு இரண்டறக் கலந்து, காரண ஶரீராபிமானியான, 'ப்ராஜ்யன்' ஆகிய 'ஈ'-கார அக்ஷரத்தை, 'ஹ்ரீம்'-காரத்தில் இரண்டறக் கலந்து தேவியை த்யானித்தல் வேண்டும். ________ वाच्य-वाचकता-हीनं, द्वैत-भाव-विवर्जितम् ।...

Devi Geethai - 3.41-3.45

 श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ योग-वृत्तेः पुरा स्वामिन्,भावयेद्-अक्षर-त्रयम् । देवी-प्रणव-संज्ञस्य, ध्यानार्थं मन्त्र-वाच्ययोः ॥ ४१॥ யோக³வ்ருʼத்தே꞉ புரா ஸ்வாமின், பா⁴வயேத்³-அக்ஷர-த்ரயம் . தே³வீ-ப்ரணவ-ஸஞ்ஜ்ஞஸ்ய,  த்⁴யானார்த²ம்ʼ மந்த்ர-வாச்யயோ꞉ .. 41.. முதலில் தன்னுள்ளத்தில் யோக வ்ருத்தியால் தேவியை தியானித்து, பின் தேவி ப்ரணவத்தின் நாமமாக  இருக்கின்ற மூன்று அக்ஷர ஹ்ரீம் மந்திரத்தை த்யானிப்பதற்காக, சொல்லர்த்தம், உட்பொருளர்த்தம் என்னும் இரண்டு விதமாகவும் உணர வேண்டும். ________ हकारः स्थूल-देहः स्याद्, रकारः सूक्ष्म-देहकः । ईकारः काराणात्मा-असौ, ह्रीङ्कारोऽहं तुरीयकम् ॥ ४२॥ ஹகார꞉ ஸ்தூ²ல-தே³ஹ꞉ ஸ்யாத்³, ரகார꞉ ஸூக்ஷ்ம-தே³ஹக꞉ . ஈகார꞉ காராணாத்மா-(அ)ஸௌ,  ஹ்ரீங்காரோ(அ)ஹம்ʼ துரீயகம் .. 42.. மூன்று அக்ஷர மந்திரத்தின் ஹகாரம் ஸ்தூல தேஹமாகவும், ரகாரம் ஸுக்ஷ்ம தேஹமாகவும், ஈகாரம் காரண தேஹமாகவும் இருந்து, இம்மூன்றெழுத்தும் கூடிய  ஹ்ரீங்காரமாக நான் துரீய நிலையாக உள்ளேன். ________ एवं समष्टि-देहेऽपि, ज्ञात्वा बीज-त्रयं क्रमात् । समष्टि-व्यष्ट्योर्-एकत्वं भावयेन्-मतिमान्-...

Devi Geethai 3.35-3.40

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ आत्मानं रथिनं विद्धि, शरीरं रथमेव तु । बुद्धिं तु सारथिं विद्धि, मनः प्रग्रहमेव च ॥ ३५॥ ஆத்மானம்ʼ ரதி²னம்ʼ வித்³தி⁴,  ஶரீரம்ʼ ரத²மேவ து . பு³த்³தி⁴ம்ʼ து ஸாரதி²ம்ʼ வித்³தி⁴, மன꞉ ப்ரக்³ரஹமேவ ச .. 35.. ஆத்மா ரதத்தில் பயணிப்பவனாகவும், சரீரம் ரதமாகவும், புத்தி ஸாரதியாகவும் மனசு கடிவாளமாகவும் உள்ளதை அறிவாயாக. _________ इन्द्रियाणि हयानाहुः, विषयांस्-तेषु गोचरान् । आत्मेन्द्रिय-मनोयुक्तं, भोक्तेत्याहुर्-मनीषिणः ॥ ३६॥ இந்த்³ரியாணி ஹயானாஹு:, விஷயாம்ʼஸ்தேஷு கோ³சரான் . ஆத்மேந்த்³ரிய-மனோயுக்தம்ʼ, போ⁴க்தேத்யாஹுர்-மனீஷிண꞉ .. 36.. இந்திரியங்கள் குதிரைகளாக, புலனின்ப விஷயங்களில் மனதை இழுத்துச் செல்ல, இந்திரியங்களுடனும் மனத்துடனும் கூடிய ஆத்மா அந்த புலனின்ப விஷயங்களை அனுபவிக்கிறது என்று‌ சொல்லப்படுகிறது. _________ यस्तु-अविद्वान्-भवति, च-अमनस्कः सदा-अशुचिः । न तत्-पदम्-अवाप्नोति, संसारं च-अधिगच्छति ॥ ३७॥ யஸ்து-அவித்³வான்-ப⁴வதி,  ச-அமனஸ்க꞉ ஸதா³-அஶுசி꞉ . ந தத்-பத³ம்-அவாப்னோதி,  ஸம்ʼஸாரம்ʼ ச-அதி⁴-க³ச்ச²தி .. 37.. எவன் இவ்விஷயத்தை அறியாதவனாகவும், ...