Devi Geethai 4.39 - 4.44
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: _______ विष्णुनाऽधिष्ठितं पत्रं, विष्ण्वालोकन-कारणम् । तदूर्ध्वेऽनाहतं पद्मम्,उद्यदादित्य-सन्निभम् ॥ ३९॥ விஷ்ணுனா-(அ)தி⁴ஷ்டி²தம்ʼ பத்ரம்ʼ, விஷ்ண்வாலோகன-காரணம் . ததூ³ர்த்⁴வே-(அ)னாஹதம்ʼ பத்³மம், உத்³யதா³தி³த்ய-ஸன்னிப⁴ம் .. 39.. மணிப்பூரகத்தை விஷ்ணுமூர்த்தி அதிர்ஷ்டானமாகக் கொண்டிருக்கிறார். அதனால் விஷ்ணுவைக் காண்பதற்கு மணிபூரகத்தில் தியானிக்க வேண்டும். மணிபூரகத்திற்கு மேல், உதிக்கின்ற சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அனாஹதம் என்ற கமலம் இருக்கிறது. ________ कादिठान्तदलैरर्कपत्रैश्च समधिष्ठितम् । तन्मध्ये बाणलिङ्गं तु सूर्यायुतसमप्रभम् ॥ ४०॥ காதி³டா²ந்தத³லைரர்கபத்ரைஶ்ச ஸமதி⁴ஷ்டி²தம் . தன்மத்⁴யே பா³ணலிங்க³ம்ʼ து ஸூர்யாயுதஸமப்ரப⁴ம் .. 40.. 'க' முதல் 'ட²' வரை உள்ள 12 அக்ஷரங்களால் ஆன அர்க பத்ரங்களால்/ எருக்க இலைகள் போன்ற தளத்தில் நன்கு அமைந்திருக்கிறது, அனாஹதம். அனாஹதத்தின் மத்தியில், பாணலிங்கமானது, பத்தாயிரம்(அயுத) சூரியன்களைப் போல் பிரகாசிக்கிறது. _______ शब्द-ब्रह्म-मयं शब्द-अनाहतं तत्र दृश्यते । अनाहताख्यं तत्पद्मं, मुनिभिः परि-कीर्तितम...