Devi Geethai 4.31-4.38
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
_______
सर्व-तेजोमयी सा तु, सुषुम्ना वह्नि-रूपिणी ।
तस्या मध्ये विचित्राख्ये, इच्छा-ज्ञान-क्रियात्मकम् ॥ ३१॥
ஸர்வ-தேஜோமயீ ஸா து,
ஸுஷும்னா வஹ்நி-ரூபிணீ .
தஸ்யா மத்⁴யே விசித்ராக்²யே,
இச்சா²-ஜ்ஞான-க்ரியாத்மகம் .. 31..
சுஷும்னா நாடி, சகல தேஜஸும் கூடி, அக்னி சொரூபமாய் ப்ரகாசிக்கிறது.
சுஷும்னா நாடியின் மத்தியில், விசித்திரமான பெயர்களால் அழைக்கப்படும், இச்சா-ஞான-க்ரியா ஸ்வரூப சக்தி உள்ளது.
_______
मध्ये स्वयंभू-लिङ्गं तु, कोटि-सूर्य-समप्रभम् ।
तदूर्ध्वं माया-बीजं तु, हरात्मा-बिन्दु-नादकम् ॥ ३२॥
மத்⁴யே ஸ்வயம்பூ⁴-லிங்க³ம்ʼ து,
கோடி-ஸூர்ய-ஸமப்ரப⁴ம் .
ததூ³ர்த்⁴வம்ʼ மாயா-பீ³ஜம்ʼ து,
ஹராத்மா-பி³ந்து³நாத³கம் .. 32..
சாஷாத் பூலிங்கம், சுஷும்னா மத்தியில், கோடி சூர்ய-பிரகாசத்துடன் உள்ளது. பூ⁴-லிங்கத்தின் மேல் மாயாபீஜம் ( ஹ்ரீம்), ஹராத்மாவாய் - சிவாத்மகமாயுள்ள பிந்து நாத சொரூபமாய் ப்ரகாசிக்கிறது.
_______
तदूर्ध्वं तु शिखाकारा, कुण्डली रक्त-विग्रहा ।
देव्यात्मिका तु सा प्रोक्ता, मदभिन्ना नगाधिप ॥ ३३॥
ததூ³ர்த்⁴வம்ʼ து ஶிகா²காரா,
குண்ட³லீ ரக்த-விக்³ரஹா .
தே³வ்யாத்மிகா து ஸா ப்ரோக்தா,
மத்-அபி⁴ன்னா நகா³தி⁴ப .. 33..
பிந்துவின் மேல், அனல் சிகையைப் போல ( fire spark)
ரக்த விக்ரஹமாய் (சிவப்பாய்) தேவிரூபமாய் குண்டலினியானவள்,
என்னிலிருந்து வேறின்றி ப்ரகாசிக்கிறாள், ராஜனே!
_______
तद्बाह्ये हेम-रूपाभं, वादिसान्त-चतुर्दलम् ।
द्रुत-हेम-सम-प्रख्यं, पद्मं तत्र विचिन्तयेत् ॥ ३४॥
தத்³-பா³ஹ்யே ஹேம-ரூபாப⁴ம்ʼ,
வாதி³-ஸாந்த-சதுர்-த³லம் .
த்³ருத-ஹேம-ஸம-ப்ரக்²யம்ʼ பத்³மம்ʼ,
தத்ர விசிந்தயேத் .. 34..
குண்டலினிக்கு வெளியில், பொன்னிறமான, 'வ, ய ஷ, ஸ' என்ற நான்கு அஷரங்களோடு கூடிய சதுர்தள தங்கநிற பத்மமாய் அங்கு
(மூலாதாரத்தில்) நன்கு த்யானிக்க வேண்டும்.
_______
तदूर्ध्वं त्वनलप्रख्यं, षड्दलं हीरक-प्रभम् ।
बादि-लान्त-षड्वर्णेन, स्वाधिष्ठानमनुत्तमम् ॥ ३५॥
ததூ³ர்த்⁴வம்ʼ த்வனல-ப்ரக்²யம்ʼ,
ஷட்³த³லம்ʼ ஹீரக-ப்ரப⁴ம் .
பா³தி³-லாந்த-ஷட்³-வர்ணேன
ஸ்வாதி⁴ஷ்டா²னம்-அனுத்தமம் .. 35..
சதுர்தள பத்மத்தின் மேல், அனல் போன்ற செந்நிறமுடையதாய்,
ஆறு தளத்தோடு, வஜ்ரகாந்தியைப் போன்ற பிரகாசத்துடன் 'ப³,ப⁴,ம,ய,ர,ல' என்ற அக்ஷர ரூபங்களோடு கூடிய உத்தமமான சுவாதிஷ்டானத்தை தியானிக்க வேண்டும்.
_______
मूलाधार षट्कोणं, मूलाधारं ततो विदुः ।
स्व-शब्देन परं लिङ्गं, स्वाधिष्ठानं ततो विदुः ॥ ३६॥
மூலாதா⁴ர ஷட்கோணம்ʼ,
மூலாதா⁴ரம்ʼ ததோ விது³꞉ .
ஸ்வ-ஶப்³தே³ன பரம்ʼ லிங்க³ம்ʼ, ஸ்வாதி⁴ஷ்டா²னம்ʼ ததோ விது³꞉ .. 36..
ஷட்கோணத்திற்கு மூல ஆதாரமாய் விளங்குவதால், சதுர்-தள பத்மம் மூலாதாரம் என்று அறிஞர்களால் கூறப்படுகிறது.
'ஸ்வ' சப்தத்தால் பிரமாண லிங்கம் என்னும் பொருளை தருவதாலும், "தான் அதிர்ஷ்டிப்பதற்கு" இடமாதலாலும் சுவாதிஷ்டானம் என பெயர் பெறும்.
_______
तदूर्ध्वं नाभि-देशे तु, मणिपूरं महा-प्रभम् ।
मेघाभं विद्युदाभं च, बहु-तेजो-मयं ततः ॥ ३७॥
ததூ³ர்த்⁴வம்ʼ நாபி⁴-தே³ஶே து, மணிபூரம்ʼ மஹா-ப்ரப⁴ம் |
மேகா⁴ப⁴ம்ʼ வித்³யுதா³ப⁴ம்ʼ ச,
ப³ஹு-தேஜோ-மயம்ʼ தத꞉ .. 37..
ஸ்வாதிஷ்டானத்திற்கு மேல், நாபி-ஸ்தானத்தில் மேகத்தில் தோன்றும் மின்னலை போன்ற, மிகுந்த ஒளியுடைய மணிப்பூரகம் பிரகாசிக்கிறது.
_________
मणिवद्भिन्नं तत्पद्मं, मणिपद्मं तथोच्यते ।
दशभिश्च दलैर्युक्तं, डादि-फान्ताक्षरान्वितम् ॥ ३८॥
மணிவத்³-பி⁴ன்னம்ʼ தத்பத்³மம்ʼ,
மணி-பத்³மம்ʼ ததோ²ச்யதே .
த³ஶபி⁴ஶ்ச த³லைர்-யுக்தம்ʼ,
டா³தி³-பா²ந்தாக்ஷரான்விதம் .. 38..
பிளவுபட்ட ரத்தினம் போல் ஒளி வீசுவதால் இந்த பத்மம் மணி பத்மம் (மணிபூரகம்) என பெயர் பெற்றது.
ட³,ட⁴,ண,த,த²,த³,த⁴,ந,ப,ப²
என்ற 10 அக்ஷரங்கள் கூடிய பத்து தள பத்மமாக மணிபூரகத்தை தியானிக்க வேண்டும்.
__________
________
Comments
Post a Comment