Devi Geethai 4.39 - 4.44

 श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:

_______

विष्णुनाऽधिष्ठितं पत्रं, विष्ण्वालोकन-कारणम् ।
तदूर्ध्वेऽनाहतं पद्मम्,उद्यदादित्य-सन्निभम् ॥ ३९॥

விஷ்ணுனா-(அ)தி⁴ஷ்டி²தம்ʼ பத்ரம்ʼ, 
விஷ்ண்வாலோகன-காரணம் .
ததூ³ர்த்⁴வே-(அ)னாஹதம்ʼ பத்³மம்,
உத்³யதா³தி³த்ய-ஸன்னிப⁴ம் .. 39..

மணிப்பூரகத்தை விஷ்ணுமூர்த்தி அதிர்ஷ்டானமாகக் கொண்டிருக்கிறார். அதனால் விஷ்ணுவைக் காண்பதற்கு மணிபூரகத்தில் தியானிக்க வேண்டும். மணிபூரகத்திற்கு மேல், உதிக்கின்ற சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அனாஹதம் என்ற கமலம் இருக்கிறது.
________

कादिठान्तदलैरर्कपत्रैश्च समधिष्ठितम् ।
तन्मध्ये बाणलिङ्गं तु सूर्यायुतसमप्रभम् ॥ ४०॥

காதி³டா²ந்தத³லைரர்கபத்ரைஶ்ச ஸமதி⁴ஷ்டி²தம் .
தன்மத்⁴யே பா³ணலிங்க³ம்ʼ து ஸூர்யாயுதஸமப்ரப⁴ம் .. 40..

'க' முதல் 'ட²' வரை உள்ள 12 அக்ஷரங்களால் ஆன அர்க பத்ரங்களால்/ எருக்க இலைகள் போன்ற தளத்தில் நன்கு அமைந்திருக்கிறது, அனாஹதம்.
அனாஹதத்தின் 
மத்தியில், பாணலிங்கமானது, பத்தாயிரம்(அயுத) சூரியன்களைப் போல் பிரகாசிக்கிறது.
_______

शब्द-ब्रह्म-मयं शब्द-अनाहतं तत्र दृश्यते ।
अनाहताख्यं तत्पद्मं, मुनिभिः परि-कीर्तितम् ॥ ४१॥

ஶப்³த³-ப்³ரஹ்ம-மயம்ʼ ஶப்³த³-
அனாஹதம்ʼ தத்ர த்³ருʼஶ்யதே .
அனாஹதாக்²யம்ʼ தத்-பத்³மம்ʼ, 
முனிபி⁴꞉ பரிகீர்திதம் .. 41..

(அக்ஷர உருவங்கள் இன்றி) சப்த ப்ரம்ம மயமாய் அனாஹத சப்தம் இங்கு தெரிகிறது. 
(அனாஹத சப்தம் - இரு பொருட்கள் உரசுவதால் ஏற்படும் ஶப்தம் அல்ல. ஒன்றுமே இல்லாத நிலையில், உள்ள மூல சப்தம்.)

இவ்விடத்தில் அனாஹத சப்தம் கேட்பதால், இந்த பத்மம்
அனாஹதம் என்ற பெயரால் முனிவர்களால் கூறப்படுகிறது.
_________

आनन्द-सदनं तत्तु, पुरुषाधिष्ठितं परम् ।
तदूर्ध्वं तु विशुद्धाख्यं, दल-षोडश-पङ्कजम् ॥ ४२॥

ஆனந்த³-ஸத³னம்ʼ தத்-து,
புருஷாதி⁴ஷ்டி²தம்ʼ பரம் .
ததூ³ர்த்⁴வம்ʼ து விஶுத்³தா⁴க்²யம்ʼ, 
த³ல-ஷோட³ஶ-பங்கஜம் .. 42..

அனாஹதம் ஆனந்தத்திற்கு இடமாய் இருக்கிறது. இதுவே பரம புருஷன் ருத்ர மூர்த்தியின் அதிர்ஷ்டானம். அனாஹதத்தின் மேல் உள்ள 
16 தள பத்மம் விசுத்தி என்று அழைக்கப்படுகிறது.
_________

स्वरैः षोडशभिर्युक्तं, धूम्र-वर्णं महा-प्रभम् ।
विशुद्धं तनुते यस्मात्, जीवस्य हंस-लोकनात् ॥ ४३॥

ஸ்வரை꞉ ஷோட³ஶபி⁴ர்-யுக்தம்ʼ, 
தூ⁴ம்ர-வர்ணம்ʼ மஹா-ப்ரப⁴ம் .
விஶுத்³த⁴ம்ʼ தனுதே யஸ்மாத்,
ஜீவஸ்ய ஹம்ʼஸ-லோகனாத் .. 43..

43) பதினாறு ஸ்வரங்கள் 

அ முதல் அ: வரை உள்ள பதினாறு ஸ்வரங்களுடன் கூடிய, 
தூம்ர வர்ணத்தில் ( மேக/புகை) மஹாப்பிரகாசம் உடையதான, பதினாறு 
தளத்தோடு கூடிய விஶுத்தி என்ற பங்கஜம் உள்ளது.
இங்கு ஜீவனுக்கு ஹம்ஸ லோகனனாகிய ப்ரம்மனின் தரிசனம் கிடைக்கிறது.
________

विशुद्धं पद्ममाख्यातम्,आकाशाख्यं महाद्भुतम् ।
आज्ञा-चक्रं तदूर्ध्वे तु, आत्मनाऽधिष्ठितं परम् ॥ ४४॥

விஶுத்³த⁴ம்ʼ பத்³மம்-ஆக்²யாதம், 
ஆகாஶாக்²யம்ʼ மஹாத்³பு⁴தம் .
ஆஜ்ஞா-சக்ரம்ʼ ததூ³ர்த்⁴வே து 
ஆத்மனா-(அ)தி⁴ஷ்டி²தம்ʼ பரம் .. 44..

விஶுத்தம் - ஜீவனுக்கு ஶுத்தியளிப்பதால், விஶுத்தி எனப் பெயர்பெற்றது. விஶுத்தம் என்கிற இந்த பத்மம் மஹா அத்புதமாகிய ஆகாஸம் எனவும் கூறப்படுகிறது. விஶுத்தியின் மேலே பரமாத்மாவின் அதிஷ்டானமாக ஆஜ்ஞா சக்ரம் உள்ளது.
__________

आज्ञा-सङ्क्रमणं तत्र, तेन-आज्ञेति प्रकीर्तितम् ।
द्वि-दलं हक्ष-संयुक्तं पद्मं तत्-सुमनोहरम् ॥ ४५॥

ஆஜ்ஞா-ஸங்க்ரமணம்ʼ தத்ர, 
தேன-ஆஜ்ஞேதி ப்ரகீர்திதம் .
த்³வி-த³லம்ʼ ஹக்ஷ-ஸம்ʼயுக்தம்ʼ பத்³மம்ʼ தத்-ஸுமனோஹரம் .. 45..

ஆக்ஞையினுடைய 
சம்பந்தத்தால் ஆக்ஞா எனப் பெயர் பெற்றது . இங்கு ' ஹ, க்ஷ' என்ற இரு 
அக்ஷரங்களோடு கூடிய இருதள பத்மம் ஸுமனோகரமாய் உள்ளது.

_______

कैलासाख्यं तदूर्ध्वं तु, रोधिनी तु तदूर्ध्वतः ।
एवं तु-आधार-चक्राणि, प्रोक्तानि तव सुव्रत ॥ ४६॥

கைலாஸாக்²யம்ʼ ததூ³ர்த்⁴வம்ʼ து, 
ரோதி⁴னீ து ததூ³ர்த்⁴வத꞉ .
ஏவம்ʼ து-ஆதா⁴ர-சக்ராணி, 
ப்ரோக்தானி தவ ஸுவ்ரத .. 46..

ஆக்ஞையின் மேல் கைலாசமும், அதன் மேல் ரோதிநீ என்றும் ஒரு சக்கரமுண்டு. இவ்வாறு உனக்கு ஆதார சக்ரங்களைப் பற்றி கூறினேன், ஸுவ்ரதனே!

________

सहस्रारयुतं बिन्दु-स्थानं, तदूर्ध्वमीरितम् ।
इत्येतत्कथितं सर्वं, योग-मार्गमनुत्तमम् ॥ ४७॥

ஸஹஸ்ராரயுதம்ʼ பி³ந்து³-ஸ்தா²னம்ʼ, 
ததூ³ர்த்⁴வமீரிதம் .
இத்யேதத்-கதி²தம்ʼ ஸர்வம்ʼ, 
யோக³-மார்க³மனுத்தமம் .. 47..

ஆதார சக்ரங்களுக்கு மேல் ஆயிரம் தளங்களோடு கூடிய பிந்து ஸ்தானம் 
உள்ளது. உத்தமமான யோக மார்க்கம் முழுவதும் உனக்கு இவ்வாறு கூறப்பட்டது.

 __________

________

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36