Devi Geethai 2.45-2.52
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
नमस्ते भुवनेशानि, नमस्ते प्रणवात्मके ।
सर्व वेदान्त-संसिद्धे, नमो ह्रीङ्कार-मूर्तये ॥ ४५॥
நமஸ்தே பு⁴வனேஶானி,
நமஸ்தே ப்ரணவாத்மகே .
ஸர்வ வேதா³ந்த-ஸம்ʼஸித்³தே⁴,
நமோ ஹ்ரீங்கார-மூர்தயே .. 45.
புவனேஸியான உனக்கு நமஸ்காரம். பிரணவஸ்ரூபிணியே நமஸ்காரம். சர்வ வேதாந்த சித்தாந்த சொரூபிணியே, ஹ்ரீங்கார ஸ்வரூபிணியே உனக்கு நமஸ்காரம்.
__________
यस्माद्-अग्निः समुत्पन्नो, यस्मात्-सूर्यश्च चन्द्रमाः ।
यस्माद्-ओषधयः सर्वाः, तस्मै सर्वात्मने नमः ॥ ४६॥
யஸ்மாத்³-அக்³னி꞉ ஸமுத்பன்னோ,
யஸ்மாத்-ஸூர்யஶ்ச சந்த்³ரமா꞉ .
யஸ்மாத்³-ஓஷத⁴ய꞉ ஸர்வா:,
தஸ்மை ஸர்வாத்மனே நம꞉ .. 46
யாரிடமிருந்து அக்னி உண்டாயிற்றோ, யாரிடமிருந்து சந்திர சூரியர்கள் உண்டானரோ, யாரிடமிருந்த மருந்துகள் எல்லாம் உண்டாகினவோ, அந்த ஸர்வாத்மாவுக்கு நமஸ்காரம்.
__________
यस्माच्च देवाः संभूताः, साध्याः पक्षिण एव च ।
पशवश्च मनुष्याश्च, तस्मै सर्वात्मने नमः ॥ ४७॥
யஸ்மாச்ச தே³வா꞉ ஸம்பூ⁴தா꞉,
ஸாத்⁴யா꞉ பக்ஷிண ஏவ ச .
பஶவஶ்ச மனுஷ்யாஶ்ச,
தஸ்மை ஸர்வாத்மனே நம꞉ .. 47
யாரிடமிருந்து ஸாத்யர்களாகிய தேவர்கள், பட்சிகள், விலங்குகள் மற்றும் மனுஷர்கள் தோன்றினரோ அந்த ஸர்வாத்மாவுக்கு நமஸ்காரம்.
___________
प्राणापानौ व्रीहियवौ, तपः श्रद्धा ऋतं तथा ।
ब्रह्मचर्यं विधिश्चैव, यस्मात्-तस्मै नमो नमः ॥ ४८॥
ப்ராணாபானௌ வ்ரீஹியவௌ,
தப꞉ ஶ்ரத்³தா⁴ ருʼதம்ʼ ததா² .
ப்³ரஹ்மசர்யம்ʼ விதி⁴ஶ்சைவ,
யஸ்மாத்-தஸ்மை நமோ நம꞉ .. 48..
யாரிடமிருந்து பிராண அபான வாயுக்கள், தானியங்கள் ,தபஸ், ஸ்ரத்தா , ஸத்யம், பிரம்மச்சரியம் ஆகிய பலவிதிகளும் தோன்றினவோ, அவளுக்கு நமஸ்காரம்.
___________
सप्त प्राणार्चिषो यस्मात्, समिधः सप्त एव च ।
होमाः सप्त तथा लोका:, तस्मै सर्वात्मने नमः ॥ ४९॥
ஸப்த ப்ராணார்சிஷோ யஸ்மாத்,
ஸமித⁴꞉ ஸப்த ஏவ ச .
ஹோமா꞉ ஸப்த ததா² லோகா:,
தஸ்மை ஸர்வாத்மனே நம꞉ .. 49..
ஏழு பிராணங்கள், ஏழு ஸமித்துக்கள், ஏழு ஹோமங்கள், ஏழு லோகங்கள் யாரிடமிருந்து உண்டாயிற்றோ, அந்த ஸர்வ சொரூபமாய் இருக்கின்ற உனக்கு நமஸ்காரம்.
___________
यस्मात्-समुद्रा गिरयः,
सिन्धवः प्रचरन्ति च ।
यस्माद्-ओषधयः सर्वा,
रसास्-तस्मै नमो नमः ॥ ५०॥
யஸ்மாத்-ஸமுத்³ரா கி³ரய꞉,
ஸிந்த⁴வ꞉ ப்ரசரந்தி ச .
யஸ்மாத்³-ஓஷத⁴ய꞉ ஸர்வா,
ரஸாஸ்-தஸ்மை நமோ நம꞉ .. 50..
யாரிடமிருந்து சமுத்திரங்கள் , மலைகள் ,நதிகள், உற்பத்தி ஆகினவோ, ஸர்வ ஔஷத ரசங்களும் உற்பத்தியாகினவோ, அவளுக்கு நமஸ்காரம்.
_________
यस्माद्-यज्ञः समुद्-भूतो, दीक्षा-यूपश्च दक्षिणाः ।
ऋचो यजूंषि सामानि, तस्मै सर्वात्मने नमः ॥ ५१॥
யஸ்மாத்³-யஜ்ஞ꞉ ஸமுத்³பூ⁴தோ,
தீ³க்ஷா-யூபஶ்ச த³க்ஷிணா꞉ .
ருʼசோ யஜூம்ʼஷி ஸாமானி,
தஸ்மை ஸர்வாத்மனே நம꞉ .. 51..
யாரிடமிருந்து யாகங்களும், தீக்ஷைகளும், ஜயஸ்தம்பங்களும், தட்சிணைகளும், ருக்-யஜுர்-ஸாம வேதங்களும் உண்டாயினவோ, அந்த ஸர்வாத்மாவாகிய தேவிக்கு நமஸ்காரம்.
__________
नमः पुरस्तात्-पृष्ठे च, नमस्ते पार्श्वयोर्-द्वयोः ।
अध ऊर्ध्वं चतुर्-दिक्षु, मातर्-भूयो नमो नमः ॥ ५२॥
நம꞉ புரஸ்தாத்-ப்ருʼஷ்டே² ச,
நமஸ்தே பார்ஶ்வயோர்-த்³வயோ꞉ .
அத⁴ ஊர்த்⁴வம்ʼ சதுர்-தி³க்ஷு,
மாதர்-பூ⁴யோ நமோ நம꞉ .. 52..
உனக்கு முன்புறமும், பின்புறமும் எங்கள் நமஸ்காரம். உன் இரு பக்கங்களிலும் எங்கள் நமஸ்காரம்.
மாதாவாகிய உன் கீழ்புறமும், மேற்புறமும், நான்கு திக்குகளிலும் மீண்டும் மீண்டும் நாங்கள் நமஸ்கரிக்கிறோம்.
__________
Comments
Post a Comment