Devi Geethai - 3.46-3.50
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
भक्त्या निर्व्याजया युक्तो, गुहायां निःस्वने स्थले ।
हकारं विश्वमात्मानं, रकारे प्रविलापयेत् ॥ ४६॥
ப⁴க்த்யா நிர்வ்யாஜயா யுக்தோ,
கு³ஹாயாம்ʼ நி꞉ஸ்வனே ஸ்த²லே .
ஹகாரம்ʼ விஶ்வமாத்மானம்ʼ,
ரகாரே ப்ரவிலாபயேத் .. 46
அதன்பின்னர், நிஷ்காம பக்தியுடன், சப்த கோஷமில்லாத குகையாகிய ஹ்ருதயாகஶத்தில் (ஹ்ருதய மத்தியில்)
ஸ்தூல ஶரீரபிமானியான (விஸ்வம்) விஸ்வாத்மாவான 'ஹ'-கார அக்ஷரத்தை , 'ர'-கார அக்ஷரத்துடன் இரண்டறக் கலந்து த்யானிக்க வேண்டும்.
________
रकारं तैजसं देवम्, ईकारे प्रविलापयेत् ।
ईकारं प्राज्ञयात्मानं, ह्रीङ्कारे प्रविलापयेत् ॥ ४७॥
ரகாரம்ʼ தைஜஸம்ʼ தே³வம்,
ஈகாரே ப்ரவிலாபயேத் .
ஈகாரம்ʼ ப்ராஜ்ஞயாத்மானம்ʼ,
ஹ்ரீங்காரே ப்ரவிலாபயேத் .. 47..
ஸுக்ஷ்ம ஶரீராபிமானியான 'தைஜஸம் ' ஆகிய 'ர'-கார அக்ஷரத்தை, 'ஈ'-காரத்தோடு இரண்டறக் கலந்து, காரண ஶரீராபிமானியான, 'ப்ராஜ்யன்' ஆகிய 'ஈ'-கார அக்ஷரத்தை, 'ஹ்ரீம்'-காரத்தில் இரண்டறக் கலந்து தேவியை த்யானித்தல் வேண்டும்.
________
वाच्य-वाचकता-हीनं, द्वैत-भाव-विवर्जितम् ।
अखण्डं सच्चिदानन्दं, भावयेत्-तच्-शिखान्तरे ॥ ४८॥
வாச்ய-வாசகதா-ஹீனம்ʼ,
த்³வைதபா⁴வவிவர்ஜிதம் .
அக²ண்ட³ம்ʼ ஸச்சிதா³னந்த³ம்ʼ ,
பா⁴வயேத்-தச்-சி²கா²ந்தரே .. 48..
வாச்சிய வாசக பேதமின்றி , த்வைத பாவமின்றி, அத்வைத பாவத்தில், துவாதசாந்த ஸ்தானமாகிய ஶிகாந்தரத்தில் (ஸஹஸ்ரார்த்திற்கு மேல் ) அகண்ட ஸத்-சித்-ஆனந்த ஸ்வரூபமாக பாவித்து
தேவியை தியானித்தல் வேண்டும்.
________
इति ध्यानेन मां राजन्, साक्षात्-कृत्य नरोत्तमः ।
मद्रूप एव भवति द्वयोरपि-एकता यतः ॥ ४९॥
இதி த்⁴யானேன மாம்ʼ ராஜன்,
ஸாக்ஷாத்-க்ருʼத்ய நரோத்தம꞉ .
மத்³-ரூப ஏவ ப⁴வதி,
த்³வயோரபி-யேகதா யத꞉ .. 49..
இவ்ண்ணம் சாஷாத்கார த்யானத்தை , உத்தமனாகிய ஒருவன்
செய்வானாயின், அவன்
என்னுடைய ஸ்வரூபத்தோடு பேதமில்லாமல் ஒன்றாயிருத்தலாகிய தன்மையை அடைகிறான்.
________
योग-युक्त्याऽनया द्रष्टा, मामात्मानं परात्परम् ।
अज्ञानस्य सकार्यस्य, तत्क्षणे नाशको भवेत् ॥ ५०॥
யோக³யுக்த்யா(அ)னயா த்³ரஷ்டா,
மாமாத்மானம்ʼ பராத்பரம் .
அஜ்ஞானஸ்ய ஸகார்யஸ்ய,
தத்க்ஷணே நாஶகோ ப⁴வேத் .. 50..
பராத்பர பரமாத்வான என்னை , இவ்வாறு
யோக யுக்தியினால், பார்க்கப் பெறின், அக்க்ஷணமே, அஞ்ஞானத்திற்கும், அதன் கார்யங்களுக்கும் நாசம் உண்டாகிவிடும்.
________
॥ इति श्रीदेवीभागवते देवीगीतायां तृतीयोऽध्यायः ॥
॥ இதி ஸ்ரீதேவவீபாகவதே தேவீகீதாயாம் த்ருதீயோத்யாய: ॥
இத்துடன் தேவீகீதாவின் மூன்றாவது அத்யாயம் முற்றிற்று.
________
Next | DeviGeethai Beginning | Previous
Comments
Post a Comment