Devi Geethai 3.35-3.40

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

आत्मानं रथिनं विद्धि, शरीरं रथमेव तु ।
बुद्धिं तु सारथिं विद्धि, मनः प्रग्रहमेव च ॥ ३५॥

ஆத்மானம்ʼ ரதி²னம்ʼ வித்³தி⁴, 
ஶரீரம்ʼ ரத²மேவ து .
பு³த்³தி⁴ம்ʼ து ஸாரதி²ம்ʼ வித்³தி⁴,
மன꞉ ப்ரக்³ரஹமேவ ச .. 35..

ஆத்மா ரதத்தில் பயணிப்பவனாகவும்,
சரீரம் ரதமாகவும், புத்தி ஸாரதியாகவும்
மனசு கடிவாளமாகவும் உள்ளதை அறிவாயாக.

_________

इन्द्रियाणि हयानाहुः, विषयांस्-तेषु गोचरान् ।
आत्मेन्द्रिय-मनोयुक्तं, भोक्तेत्याहुर्-मनीषिणः ॥ ३६॥

இந்த்³ரியாணி ஹயானாஹு:,
விஷயாம்ʼஸ்தேஷு கோ³சரான் .
ஆத்மேந்த்³ரிய-மனோயுக்தம்ʼ, போ⁴க்தேத்யாஹுர்-மனீஷிண꞉ .. 36..

இந்திரியங்கள் குதிரைகளாக, புலனின்ப விஷயங்களில் மனதை இழுத்துச் செல்ல, இந்திரியங்களுடனும் மனத்துடனும் கூடிய ஆத்மா அந்த புலனின்ப விஷயங்களை அனுபவிக்கிறது என்று‌ சொல்லப்படுகிறது.

_________

यस्तु-अविद्वान्-भवति, च-अमनस्कः सदा-अशुचिः ।
न तत्-पदम्-अवाप्नोति, संसारं च-अधिगच्छति ॥ ३७॥

யஸ்து-அவித்³வான்-ப⁴வதி, 
ச-அமனஸ்க꞉ ஸதா³-அஶுசி꞉ .
ந தத்-பத³ம்-அவாப்னோதி, 
ஸம்ʼஸாரம்ʼ ச-அதி⁴-க³ச்ச²தி .. 37..

எவன் இவ்விஷயத்தை அறியாதவனாகவும், நல்ல மனதில்லாதவனாகவும், சுசி இல்லாதவனாகவும் இருக்கிறானோ, அவன் 'தத் பதத்தை' அடையமாட்டான். ஸம்ஸாரத்தையே சென்றடைவான்.

_________

यस्तु विज्ञानवान्-भवति, समनस्कः सदा शुचिः ।
स तु तत्पदम्-आप्नोति, यस्मात्-भूयो न जायते ॥ ३८॥

யஸ்து விஜ்ஞானவான்-ப⁴வதி,  
ஸமனஸ்க꞉ ஸதா³ ஶுசி꞉ .
ஸ து தத்பத³ம்-ஆப்னோதி, 
யஸ்மாத்³-பூ⁴யோ ந ஜாயதே .. 38..

எவன் இவ்விஷயத்தை அறிந்து , எப்போதும் நல்லமனத்துடனும்,
சுசியுடனும் (தூய்மையுடனும்)
இருக்கிறானோ, அவன் தத்பதத்தை அடைகிறான். மீண்டும் பிறப்பதில்லை.

_________

विज्ञान-सारथिर्-यस्तु, मनः प्रग्रहवान्-नरः ।
सोऽध्वनः पारम्-आप्नोति, मदीयं यत्परं पदम् ॥ ३९॥

விஜ்ஞான-ஸாரதி²ர்-யஸ்து, 
மன꞉ ப்ரக்³ரஹவான்-னர꞉ .
ஸோ(அ)த்⁴வன꞉ பாரம்-ஆப்னோதி, 
மதீ³யம்ʼ யத்பரம்ʼ பத³ம் .. 39..

எவன் புத்தியை ஸாரதியாகவும், மனதைக் கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ, அவன் இந்த ஜனன-மரண பயணத்தின் முடிவை அடைகிறான். அதுவே என்னுடைய பரமபதமாகும்.
_________

इत्थं श्रुत्या च मत्या च, निश्चित्य-आत्मानम्-आत्मना ।
भावयेन्-माम्-आत्म-रूपां, निदिध्यासनतोऽपि च ॥ ४०॥

இத்த²ம்ʼ ஶ்ருத்யா ச மத்யா ச, 
நிஶ்சித்ய-ஆத்மானம்-ஆத்மனா .
பா⁴வயேன்-மாம்-ஆத்மரூபாம்ʼ, 
நிதி³த்⁴யாஸனதோ(அ)பி ச .. 40

இவ்வாறு கேட்டறிந்தும், ஆத்ம ரூபத்தை சுயமாக ஆராய்ந்து, மனதால் நிச்சயித்தும், பிறகு , தன் ஆத்மாவிடத்தில், என்னுடைய பரமாத்ம ரூபத்தை வைத்து பாவித்து, எவன் நிதித்யாஸனம் செய்கிறானோ, அவன் என்னுடைய பரமபதத்தை அடைகிறான்.
_________

Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36