Devi Geethai 4.15-4.18

 श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:

________

ईडयाकर्षयेद्वायुं, बाह्यं षोडश-मात्रया
धारयेत्पूरितं योगी, चतुःषष्ट्या तु मात्रया ॥ १५॥

ஈட³யாகர்ஷயேத்³-வாயும்ʼ, பா³ஹ்யம்ʼ ஷோட³ஶ-மாத்ரயா
தா⁴ரயேத்-பூரிதம்ʼ யோகீ³, சது꞉ஷஷ்ட்யா து மாத்ரயா .. 15..

வெளியிலிருந்து வாயுவை, இடகலை வழியாக, பதினாறு மாத்திரையளவு மூச்சில் உள்ளிழுக்க வேண்டும்.
உள்ளிழுத்த மூச்சை அறுபத்தி நான்கு மாத்திரையளவு ஸுஷும்னா நாடி மத்தியில் (சுழுமுனை) பூரகத்தில் நன்றாக நிறுத்த வேண்டும்.

______

सुषुम्ना-मध्यगं सम्य, द्वात्रिंशन्मात्रया शनैः ॥ १६॥
नाड्या पिङ्गलया चैव, रेचयेद्योग-वित्तमः ।

ஸுஷும்நாமத்⁴யக³ம்ʼ ஸம்ய, த்³வா-த்ரிம்ʼஶன்-மாத்ரயா ஶனை꞉ .. 16..
நாட்³யா பிங்க³லயா சைவ, ரேசயேத்³-யோக³-வித்தம꞉ .

உள்ளிருத்திய மூச்சை, முப்பத்து இரண்டு மாத்திரையளவு
மெதுவாக பிங்கள நாடி வழியாக வெளிவிட்டு, ரேசகத்தில்
மூச்சையடக்குவர் யோகவித்தகர்கள்.
______

प्राणायाममिमं प्राहुः, योग-शास्त्र-विशारदाः ॥ १७॥

ப்ராணாயாமமிமம்ʼ ப்ராஹு:, யோக³-ஶாஸ்த்ர-விஶாரதா³꞉ .. 17..

இதுவே ப்ராணாயாமம், என்று யோகசாஸ்த்திர விஶாரதர்களால் கூறப்பட்டது.

______
 
भूयो भूयः क्रमात्तस्य, बाह्यमेवं समाचरेत् ।
मात्रावृद्धिः क्रमेणैव, सम्यग्द्वादश षोडश ॥ १८॥

பூ⁴யோ பூ⁴ய꞉ க்ரமாத்தஸ்ய பா³ஹ்யமேவம்ʼ ஸமாசரேத் .
மாத்ராவ்ருʼத்³தி⁴꞉ க்ரமேணைவ ஸம்யக்³த்³வாத³ஶ ஷோட³ஶ .. 18..

மூச்சை வெளியே விட்டபின், ரேசகத்தில் மூச்சையடக்க,
மீண்டும், மீண்டும் அப்யாஸம் செய்ய வேண்டும்.
ரேசகத்தில் மூச்சையடக்கும் மாத்திரை அளவை படிப்படியாக 12, 16 என
அதிகப்படுத்திக் கொள்ளணும்.

______
 
 
________

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36