Devi Geethai 4.19-4.25

  श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:

______

जपध्यानादिभिः सार्थं, सगर्भं तं विदुर्बुधाः ।
तदपेतं विगर्भं च, प्राणायामं परे विदुः ॥ १९॥

ஜபத்⁴யாநாதி³பி⁴꞉ ஸார்த²ம்ʼ ,
ஸக³ர்ப⁴ம்ʼ தம்ʼ விது³ர்-பு³தா⁴꞉ .
தத³பேதம்ʼ விக³ர்ப⁴ம்ʼ ச, ப்ராணாயாமம்ʼ பரே விது³꞉ .. 19..

உள்ளிழுத்த மூச்சை ஜபத்-தியானதிகளுடன் பூரகத்தில் நிறுத்துவது ஸகர்ப்பம் எனப்படும்.
ஜபத்-தியானாதிகள் இன்றி செய்யும்
ப்ராணாயாமம் விகர்ப்பம் எனப்படும்.
______

क्रमादभ्यस्यतः पुंसो, देहे स्वेदोद्गमोऽधमः ।
मध्यमः कंप-संयुक्तो, भूमि-त्यागः परो मतः ॥ २०॥

उत्तमस्य गुणावाप्तिः, यावच्छीलनमिष्यते । 

க்ரமாத³ப்⁴யஸ்யத꞉ பும்ʼஸோ, 
தே³ஹே ஸ்வேதோ³த்³க³மோ-(அ)த⁴ம꞉ .
மத்⁴யம꞉ கம்ப-ஸம்ʼயுக்தோ, 
பூ⁴மி-த்யாக³꞉ பரோ மத꞉ .. 20..

உத்தமஸ்ய கு³ணாவாப்தி:, 
யாவச்-சீ²லனமிஷ்யதே ।

முறையாக ப்ராணாயாம அப்யாஸம் செய்யும் போது, உடல் வியர்த்தால் அதம அதிகாரி என்றும்,

உடல் நடுங்குமானால் மத்யமாதிகாரி என்றும், 

உயர்நிலையில் உடல் பூமியிலிருந்து
மேலெழும்புமானால், உத்தமாதிகாரி
என்றும் கூறப்படுவர்.

இவ்வாறு ப்ராணாயாமத்தை உயர்நிலை அடையும் வரையில் முறையாக  அப்யாஸம் செய்ய வேண்டும்.
______

इन्द्रियाणां विचरतां, विषयेषु निरर्गलम् ॥ २१॥

बलादाहरणं तेभ्यः, प्रत्याहारोऽभिधीयते ।

இந்த்³ரியாணாம்ʼ விசரதாம்ʼ, 
விஷயேஷு நிரர்க³லம் .. 21..

ப³லாதா³ஹரணம்ʼ தேப்⁴ய꞉,
ப்ரத்யாஹாரோ-(அ)பி⁴தீ⁴யதே .

இந்திரியங்கள் தடையின்றி விஷய 
சுகங்களை நோக்கி செல்லும். அவைகளை முயற்சி செய்து வலுவாக உள்முகமாக திருப்புவதே ப்ரத்யாஹாரமாகும்.

______

अङ्गुष्ठ-गुल्फ-जानूरु, मूलाधार-लिङ्ग-नाभिषु ॥ २२॥

हृद्ग्रीवा-कण्ठ-देशेषु, लंबिकायां ततो नसि ।
भ्रू-मध्ये मस्तके मूर्ध्नि, द्वादशान्ते यथा-विधि ॥ २३॥

धारणं प्राण-मरुतो, धारणेति निगद्यते ।

அங்கு³ஷ்ட²-கு³ல்ப²-ஜானூரு, மூலாதா⁴ர-லிங்க³-நாபி⁴ஷு .. 22..

ஹ்ருʼத்³-க்³ரீவா-கண்ட²-தே³ஶேஷு, 
லம்பி³காயாம்ʼ ததோ நஸி .
ப்⁴ரூ-மத்⁴யே மஸ்தகே மூர்த்⁴னி, 
த்³வாத³ஶாந்தே யதா²-விதி⁴ .. 23..

தா⁴ரணம்ʼ ப்ராண-மருதோ, 
தா⁴ரணேதி நிக³த்³யதே .

கால் விரல்கள், கணுக்கால்கள், முழங்கால்கள், தொடைகள், 
மூலாதாரமும், லிங்கமும், நாபி, ஹ்ருதயம், கழுத்து, மூக்கு ,(உள்நாக்கு பகுதி) புருவ-மத்தி, வகிடு (நெற்றி), 
உச்சந்தலை - த்வாதஸாந்தம் ஆகிய இடங்களில் ப்ராணவாயுவை விதிமுறையாக நிறுத்துவதே தாரணையாகும்.
______
समाहितेन मनसा, चैतन्यान्तर-वर्तिना ॥ २४॥

आत्मनि-अभीष्ट-देवानां, ध्यानं ध्यानम्-इहोच्यते ।

ஸமாஹிதேன மனஸா, சைதன்யாந்தர-வர்தினா .. 24..

ஆத்மன்-யபீ⁴ஷ்ட-தே³வானாம்ʼ, த்⁴யானம்ʼ த்⁴யானம்-இஹோச்யதே.

ஒருமுகப்பட்ட மனதுடன், உள்ளிருக்கும் சைதன்யத்தில் மனதை நிறுத்தி, ஜீவாத்மாவிற்குள் இருக்கும் இஷ்ட தெய்வத்திடம் மனதை லயிக்கச்
செய்வதே த்யானம் என்று சொல்லப் படுகிறது.

______

समत्व-भावना नित्यं, जीवात्म-परमात्मनोः ॥ २५॥

समाधिर्माहुर्मुनयः, प्रोक्तम्-अष्टाङ्ग-लक्षणम् ।

ஸமத்வ-பா⁴வனா நித்யம்ʼ, 
ஜீவாத்ம-பரமாத்மனோ꞉ .. 25..

ஸமாதி⁴ர்மாஹுர்-முனய꞉, 
ப்ரோக்தம்-அஷ்டாங்க³-லக்ஷணம் .

ஸமாதி:
ஜீவாத்மாவாகிய தான், பரமாத்மாவினின்று வேறாகாது, சமத்துவ பாவனையில் எப்போதும்
இருந்து கொண்டு இருத்தல் சமாதி ஆகும்.
இதுவரை கூறியவையே அஷ்டாங்க
யோக லக்ஷணம் என்று
யோக விசாரம் உடையவர் கூறுவர்.
_______
 
 
________

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36