Devi Geethai 1.17-1.20

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

अत एव च नित्यत्वं, प्रोक्तं सच्छास्त्र-कोविदः ।
आनन्दरूपता चास्याः, पर-प्रेमास्पदत्वतः ॥ १७॥

அத ஏவ ச நித்யத்வம்ʼ, 
ப்ரோக்தம்ʼ ஸச்சா²ஸ்த்ர-கோவித³꞉ .
ஆனந்த³ரூபதா சாஸ்யா꞉, 
பர-ப்ரேமாஸ்பத³த்வத꞉ .. 17..

அதனால், நன்கு சாஸ்திரமறிந்தவர்கள், இந்த ஸம்வித் ஸ்வரூபத்தை 'நித்யத்வம்' என்றும், பக்தியுண்டாக்கும் பர-ப்ரேமைக்கு இருப்பிடமாய் இருத்தலால், இதை 'ஆனந்த ரூபம்' என்றும் கூறுவர்.

_________

मा न भूवं हि भूयासम्, इति प्रेमात्मनि स्थितम् ।
सर्वस्य-अन्यस्य मिथ्यात्वात्, असङ्गत्वं स्फुटं मम ॥ १८॥

மா ந பூ⁴வம்ʼ ஹி பூ⁴யாஸம்,
இதி ப்ரேமாத்மனி ஸ்தி²தம் .
ஸர்வஸ்யான்யஸ்ய மித்²யாத்வாத்,
அஸங்க³த்வம்ʼ ஸ்பு²டம்ʼ மம .. 18..

இந்த ஆனந்த வஸ்துவின்றி இன்னொன்று இல்லாததால், இது ஒருபோதும் உண்டானதென்று கூறக்கூடாது. இந்த சைதன்யம் எப்போதும் இருப்பது. இதற்கு மித்யையுடன் சேர்க்கையில்லை என்பது என்னுடைய தெளிவான கூற்று.

___________

अपरिच्छिन्नता-प्येवम्, अत एव मता मम ।
तच्च ज्ञानं नात्म-धर्मो, धर्मत्वे जडताऽऽत्मनः ॥ १९॥

அபரிச்சி²ன்னதா-ப்யேவம், 
அத ஏவ மதா மம .
தச்ச ஜ்ஞானம்ʼ நாத்ம-த⁴ர்மோ, 
த⁴ர்மத்வே ஜட³தா(ஆ)த்மன꞉ .. 19..

இது அளவற்றதாக இருப்பதால் தான், இது நித்யமாகிறது. ஆத்மதர்மத்திற்கு ஜடத்துவமாகிய மாயாதர்மம் இருப்பதால், ஸம்வித் ஸ்வரூபமாகிய இந்த ஞானம், ஆத்மதர்மம் ஆகாது.

_________

ज्ञानस्य जडशेषत्वं, न दृष्टं न च संभवि ।
चिद्-धर्मत्वं तथा नास्ति, चितश्चित्-न हि भिद्यते ॥ २०॥

ஜ்ஞானஸ்ய ஜட³ஶேஷத்வம்ʼ, 
ந த்³ருʼஷ்டம்ʼ ந ச ஸம்ப⁴வி .
சித்³-த⁴ர்மத்வம்ʼ ததா² நாஸ்தி, 
சிதஶ்சித்-ந ஹி பி⁴த்³யதே .. 20..

ஞானத்திற்கு ஜடத்தன்மை காணப்படுவதில்லை, ஜடத்தன்மை ஞானத்திடத்தில் சம்பவிக்காது. 'சித்' ஒருபோதும் அசித்தின் தர்மத்தை ஏற்காது. சித்திலிருந்து சித் பிரிவதில்லை. அதனால் சித் ஒன்றே. சித் 'சித்தே'.

_________

Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36