Devi Geethai 1.35-1.40

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

तत्कार्यं च विराड् देहः, स्थूल-देहोऽयम्-आत्मनः ।
पञ्चभूतस्थ-सत्त्वांशैः, श्रोत्रादीनां समुद्भवः ॥ ३५॥

தத்கார்யம்ʼ ச விராட்³ தே³ஹ꞉, 
ஸ்தூ²ல-தே³ஹோ(அ)யம்-ஆத்மன꞉ .
பஞ்சபூ⁴தஸ்த²-ஸத்த்வாம்ʼஶை꞉, 
ஶ்ரோத்ராதீ³னாம்ʼ ஸமுத்³ப⁴வ꞉ .. 35..

பஞ்சீகரணப்பட்ட பஞ்சபூதங்களின் காரியமே ஆத்மாக்களுடைய ஸ்தூல ஶரீரம். ஶரீர சமூகமாகிய சமஷ்டியே விராட் சொரூபமாம். 
பஞ்சபூதங்களின் ஸத்வ அம்சத்திலிருந்து கேட்கும்-சக்தி முதலிய பஞ்ச ஞானேந்த்ரியங்கள் உண்டாகின்றன.

_________

ज्ञानेन्द्रियाणां राजेन्द्र, प्रत्येकं मीलितैस्तु तैः ।
अन्तःकरणम्-एकं स्याद्, वृत्तिभेदात्-चतुर्विधम् ॥ ३६॥

ஜ்ஞானேந்த்³ரியாணாம்ʼ ராஜேந்த்³ர, 
ப்ரத்யேகம்ʼ மீலிதைஸ்து தை꞉ .
அந்த꞉கரணம்-ஏகம்ʼ ஸ்யாத்³,
வ்ருʼத்திபே⁴தா³த்-சதுர்வித⁴ம் .. 36..

ஹே ராஜேந்திரா! பஞ்ச பூதங்களின்
சேர்க்கையால் ஞானேந்த்ரியங்கள்
உண்டாகின. அப்போது உண்டாகிய அந்த:கரணம் ஒன்றே எனினும்,
அது விருத்தி அடைந்து மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என நான்காயிற்று.

_________

यदा तु सङ्कल्प-विकल्प-कृत्यं,
     तदा भवेत्-तन्मन इत्यभिख्यम् ।
स्याद्-बुद्धि-संज्ञं च यदा प्रवेत्ति,
     सुनिश्चितं संशय-हीन-रूपम् ॥ ३७॥

யதா³ து ஸங்கல்ப-விகல்ப-க்ருʼத்யம்ʼ,
ததா³ ப⁴வேத்-தன்மன இத்யபி⁴க்²யம் .
ஸ்யாத்³-பு³த்³தி⁴-ஸஞ்ஜ்ஞம்ʼ ச யதா³                                                      ‌‌ ப்ரவேத்தி,
ஸுநிஶ்சிதம்ʼ ஸம்ʼஶய-ஹீன-ரூபம் .. 37..

அந்தகரணம் எவ்வாறு விருத்தியடைகிறது என்றால், ஒரு விஷயத்தில் சங்கல்ப- விகல்பம் 
உண்டாகிறபோது அது 'மனம்' எனப்படுகிறது. அவ்விஷயத்தில் சந்தேகமற்ற நிச்சயத்தை அடைகிறபோது 'புத்தி' எனப்படுகிறது.

_________

अनुसन्धान-रूपं तत्, चित्तं च परिकीर्तितम् ।
अहङ्कृत्याऽऽत्म-वृत्या तु, तद्-अहङ्कारतां गतम् ॥ ३८॥

அனுஸந்தா⁴ன-ரூபம்ʼ தத்,
சித்தம்ʼ ச பரிகீர்திதம்.
அஹங்க்ருʼத்யா(ஆ)த்ம-வ்ருʼத்யா து, 
தத்³-அஹங்காரதாம்ʼ க³தம் .. 38..

நிச்சயமான விஷயத்தை அடிக்கடி
எண்ணும்போது சித்தம் எனப்படுகிறது. சிந்திப்பவன் நான் என்று சொல்லும் போது அது அஹங்காரம் எனும் பெயர் பெற்றது.

________

तेषां रजोंऽशैर्-जातानि, क्रमात्-कर्मेन्द्रियाणि च ।
प्रत्येकं मीलितैस्-तैस्तु, प्राणो भवति पञ्चधा ॥ ३९॥

தேஷாம்ʼ ரஜோம்ʼ(அ)ஶைர்-ஜாதானி, 
க்ரமாத்-கர்மேந்த்³ரியாணி ச .
ப்ரத்யேகம்ʼ மீலிதைஸ்-தைஸ்து, 
ப்ராணோ ப⁴வதி பஞ்சதா⁴ .. 39..

அந்த பஞ்சபூதங்களுடைய
ராஜஸ அம்சத்திலிருந்து கர்மேந்திரியங்கள் ஆகிய வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய் ஆகியவையும், ப்ராணன், அபானன், உதானன், வியானன் எனும் பஞ்ச வாயுக்களும் உண்டாகின.

________

हृदि प्राणो गुदेऽपानो, नाभिस्थस्तु समानकः ।
कण्ठ-देशेप्युदानः स्याद्, व्यानः सर्व-शरीरगः ॥ ४०॥

ஹ்ருʼதி³ ப்ராணோ கு³தே³(அ)பானோ, 
நாபி⁴ஸ்த²ஸ்து ஸமானக꞉ .
கண்ட²-தே³ஶேப்யுதா³ன꞉ ஸ்யாத்³,
வ்யான꞉ ஸர்வ-ஶரீரக³꞉ .. 40..

இருதயத்தில் ப்ராணவாயு, குதத்தில் அபானவாயு, நாபியில் சமானவாயு, கண்டத்தில் உதானவாயு, சரீரம் முழுவதும் வ்யான வாயு - என பஞ்சவாயுக்கள் சரீரத்தில் உள்ளன.

_________

Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36