Devi Geethai 2.53-2.56
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
उपसंहर देवेशि, रूपमेतद्-अलौकिकम् ।
तदेव दर्शयास्माकं, रूपं सुन्दर-सुन्दरम् ॥ ५३॥
உபஸம்ʼஹர தே³வேஶி,
ரூபமேதத்³-அலௌகிகம் .
ததே³வ த³ர்ஶயாஸ்மாகம்ʼ,
ரூபம்ʼ ஸுந்த³ர-ஸுந்த³ரம் .. 53..
தேவேஶி! இந்த பயங்கரமான ரூபத்தை விடுத்து, அழகினும் அழகியதான உன் சுந்தர ரூபத்தை எங்களுக்கு காண்பிப்பாயாக.
__________
व्यास उवाच -
इति भीतान्-सुरान्-दृष्ट्वा, जगदम्बा कृपार्णवा ।
संहृत्य रूपं घोरं, तद्-दर्शयामास सुन्दरम् ॥ ५४॥
வ்யாஸ உவாச -
இதி பீ⁴தான்-ஸுராந்-த்³ருʼஷ்ட்வா,
ஜக³த³ம்பா³ க்ருʼபார்ணவா .
ஸம்ʼஹ்ருʼத்ய ரூபம்ʼ கோ⁴ரம்ʼ,
தத்³-த³ர்ஶயாமாஸ ஸுந்த³ரம் .. 54..
வியாசர் கூறினார்:
இவ்வாறு பயந்த தேவர்களைக் கண்ட ஜகதம்பா, கருணை உள்ளம் கொண்டு, அந்த பயங்கர ரூபத்தை மாற்றி, தன்னுடைய சுந்தர ரூபத்தைக் காண்பித்தாள்.
___________
पाशाङ्कुश-वराभीतिधरं, सर्वाङ्ग-कोमलम् ।
करुणा-पूर्ण-नयनं, मन्दस्मित-मुखाम्बुजम् ॥ ५५॥
பாஶாங்குஶ-வராபீ⁴தித⁴ரம்ʼ,
ஸர்வாங்க³-கோமலம் .
கருணா-பூர்ண-நயனம்ʼ,
மந்த³ஸ்மித-முகா²ம்பு³ஜம் .. 55
பாசாங்குசமும் வரத-அபயமும் கைகளில் தரித்து, மிருதுவான திருமேனியுடன், கருணை நிறைந்த கண்களுடன், புன்னகை கொண்ட கமலத் திருமுகத்துடன் தேவி காட்சியளித்தாள்.
_________
दृष्ट्वा तत्-सुन्दरं रूपं, तदा भीति-विवर्जिताः ।
शान्ति-चित्ता प्रणेमुस्ते, हर्ष-गद्गद-निःस्वनाः ॥ ५६॥
த்³ருʼஷ்ட்வா தத்-ஸுந்த³ரம்ʼ ரூபம்ʼ, ததா³ பீ⁴தி-விவர்ஜிதா꞉ .
ஶாந்தி-சித்தா ப்ரணேமுஸ்தே,
ஹர்ஷ-க³த்³க³த³-நி꞉ஸ்வனா꞉ .. 56..
தேவியின் சுந்தர ரூபத்தை தரிசித்த தேவர்கள் பயம் நீங்கி, மனச்சாந்தியுடன், பரவசமடைந்து தேவியை நமஸ்கரித்தனர்.
_________
॥ इति श्रीदेवी-भागवते देवी-गीतायां द्वितीयोऽध्यायः
.. இதி ஶ்ரீதே³வீ-பா⁴க³வதே தே³வீ-கீ³தாயாம்ʼ த்³விதீயோ(அ)த்⁴யாய꞉ ..
இத்துடன் ஸ்ரீதேவி பாகவதத்தின் தேவீகீதாவின் இரண்டாவது அத்தியாயம் முடிந்தது.
___________
Comments
Post a Comment