Devi Geethai 1.21-1.24
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
तस्मादात्मा ज्ञानरूपः, सुखरूपश्च सर्वदा ।
सत्यः पूर्णोऽपि-असङ्गश्च, द्वैत-जाल-विवर्जितः ॥ २१॥
தஸ்மாதா³த்மா ஜ்ஞானரூப꞉,
ஸுக²ரூபஶ்ச ஸர்வதா³ .
ஸத்ய꞉ பூர்ணோ(அ)பி-அஸங்க³ஶ்ச, த்³வைத-ஜால-விவர்ஜித꞉ .. 21..
அதனால் ஸம்வித் ஸ்வரூபமான என்னுடைய ஞான ஸ்வரூபம், எப்போதும், சுகரூபமாகவும், ஸத்யமாகவும், பூரணமாகவும், அஸங்கமாகவும், த்வைதலஷணம் அற்றதாகவும் உள்ளது.
__________
स पुनः कामकर्मादि, युक्तया स्वीय-मायया ।
पूर्वानुभूत-संस्कारात्, कालकर्म-विपाकतः ॥ २२॥
ஸ புன꞉ காமகர்மாதி³,
யுக்தயா ஸ்வீயமாயயா .
பூர்வானுபூ⁴த-ஸம்ʼஸ்காராத்,
காலகர்ம-விபாகத꞉ .. 22..
ஞானத்திற்கு ஆனந்தம் நித்யமாயிருப்பது போல், ஜனனத்திற்கு ஹேதுவான மாயா கர்மம், ஆன்மாவுக்கு பூர்வமாகவே உள்ளது. அதனால் ஆன்மா, காலகர்மங்களால் பிரிக்கப்பட்டு, பரிசுத்தத்தை அடைகிறது.
_________
अविवेकाच्च तत्त्वस्य, सिसृक्षावात्-प्रजायते ।
अबुद्धिपूर्वः सर्गोऽयं, कथितस्ते नगाधिप ॥ २३॥
அவிவேகாச்ச தத்த்வஸ்ய,
ஸிஸ்ருʼக்ஷாவாத் ப்ரஜாயதே .
அபு³த்³தி⁴பூர்வ꞉ ஸர்கோ³(அ)யம்ʼ,
கதி²தஸ்தே நகா³தி⁴ப .. 23..
மாயா கர்ம ஸம்பந்தத்தால், அவிவேகியாய் பல பிறவிகள் அடைதலால், அப்பிறவிகள் தோறும்
கர்மங்கள் கழிவுற்று வரும். இதை ஆன்மா அறியமாட்டான் பர்வதா! என்னால் உனக்கு சொல்லப்பட்ட ஆன்ம லஷணத்தை நன்கு அறிவாயாக!
__________
एतद्धि यन्मया प्रोक्तं, मम रूपम्-अलौकिकम् ।
अव्याकृतं तदव्यक्तं, माया-शबलम्-इत्यपि ॥ २४॥
ஏதத்³தி⁴ யன்மயா ப்ரோக்தம்ʼ,
மம ரூபம்-அலௌகிகம் .
அவ்யாக்ருʼதம்ʼ தத³வ்யக்தம்ʼ,
மாயா-ஶப³லம்-இத்யபி .. 24..
என்னுடைய ஸ்வரூபமோ, மாயா-சம்பந்தம் இருந்தும் கூட, லௌகீகம்
அற்றதாயும், மாற்றங்கள் அற்றதாயும், ஸூக்ஷ்மமாயும் உள்ளது.
__________
Comments
Post a Comment