Devi Geethai 1.31-1.34
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
सर्वात्मकं तत्-सम्प्रोक्तं, सूक्ष्म-देहोऽयम्-आत्मनः ।
अव्यक्तं कारणो देहः, स चोक्तः पूर्वमेव हि ॥ ३१॥
ஸர்வாத்மகம்ʼ தத்-ஸம்ப்ரோக்தம்ʼ,
ஸூக்ஷ்ம-தே³ஹோ(அ)யம்-ஆத்மன꞉ .
அவ்யக்தம்ʼ காரணோ தே³ஹ꞉,
ஸ சோக்த꞉ பூர்வமேவ ஹி .. 31..
தன்னுள் ஸர்வ- ப்ராணன்களை உள்ளடக்கிய இந்த ஸூத்ர ஆத்மாவான லிங்கதேகம் பரமாத்வாவின் ஸூக்ஷ்ம தேஹம் ஆகும். முன் சொல்லப்பட்ட அவ்யக்தமானதும் புலப்படாததுமே காரண தேஹம் ஆகும்.
________
यस्मिन्-जगद्-बीजरूपं, स्थितं लिङ्गोद्भवो यतः ।
ततः स्थूलानि भूतानि पञ्चीकरण-मार्गतः ॥ ३२॥
யஸ்மின்-ஜக³த்³-பீ³ஜரூபம்ʼ,
ஸ்தி²தம்ʼ லிங்கோ³த்³ப⁴வோ யத꞉ .
தத꞉ ஸ்தூ²லானி பூ⁴தானி,
பஞ்சீகரண-மார்க³த꞉ .. 32..
இந்த காரண ஶரீரத்தினுள் ஜகத்தின்
பீஜ ரூபம் இருக்கின்றது. அதிலிருந்தே லிங்கஶரீரம் உண்டாகியது. அதன்பின் பஞ்சீகரண முறையில் உருவாவதே ஸ்தூல பூதங்கள்.
पञ्च सङ्ख्यानि जायन्ते, तत्-प्रकारस्त्वथोच्यते ।
पूर्वोक्तानि च भूतानि, प्रत्येकं विभजेद्-द्विधा ॥ ३३॥
பஞ்ச ஸங்க்²யானி ஜாயந்தே,
தத்-ப்ரகாரஸ்த்வதோ²ச்யதே .
பூர்வோக்தானி ச பூ⁴தானி,
ப்ரத்யேகம்ʼ விப⁴ஜேத்³-த்³விதா⁴ .. 33..
பஞ்சீகரண முறையில் பஞ்ச பூதங்கள் உருவாகும் முறை இனி கூறப்படுகிறது. முன் கூறப்பட்ட ஸூக்ஷ்ம பூதங்கள் ஒவ்வொன்றும், இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகின்றன.
__________
एकैकं भागमेकस्य, चतुर्धा विभजेद्-गिरे ।
स्वस्वेतर-द्वितीयांशे, योजनात्-पञ्च पञ्च ते॥ ३४॥
ஏகைகம்ʼ பா⁴க³மேகஸ்ய,
சதுர்தா⁴ விப⁴ஜேத்³கி³ரே .
ஸ்வஸ்வேதர-த்³விதீயாம்ʼஶே, யோஜனாத்-பஞ்ச பஞ்ச தே.. 34..
இரண்டாக பிரிக்கப்பட்ட ஒவ்வொரு
ஸூக்ஷ்ம பூதத்தின் முதல் பாதியை நான்காக பிரித்துக்கொள்ளணும். (1/2÷4=1/8). அந்த ஸூக்ஷ்ம பூதத்தின்
மற்ற பாதியுடன், வேறு நான்கு ஸூக்ஷ்ம பூதங்களின் 1/8
பாகங்களை சேர்க்க,
(1/2+1/8+1/8+1/8+1/8),
ஐந்து ஸ்தூல பஞ்சபூதங்கள் உருவாகின்றன.
ஸ்தூல ஆகாஸம் =
ஸூக்ஷ்ம ஆகாசம் 1/2
+ ஸூக்ஷ்ம வாயு 1/8
+ ஸுக்ஷ்ம அக்னி 1/8
+ ஸூக்ஷ்ம ஜலம் 1/8
+ ஸூக்ஷ்ம பூமி 1/8.
__________
Comments
Post a Comment