Devi Geethai 1.41-1.44
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
ज्ञानेन्द्रियाणि पञ्चैव, पञ्च कर्मेन्द्रियाणि च ।
प्राणादि पञ्चकं चैव, धिया च सहितं मनः ॥ ४१॥
ஜ்ஞானேந்த்³ரியாணி பஞ்சைவ,
பஞ்ச கர்மேந்த்³ரியாணி ச .
ப்ராணாதி³ பஞ்சகம்ʼ சைவ,
தி⁴யா ச ஸஹிதம்ʼ மன꞉ .. 41..
இவ்வாறு, ஞானேந்த்ரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, ப்ராணாதி வாயுக்கள் ஐந்து, இவற்றுடன் மனம், புத்தி சேர்ந்து, இந்த பதினேழும் கூடியதே ஜீவனின் சூக்ஷ்ம சரீரம்.
_________
एतत्-सूक्ष्म-शरीरं स्यात्, मम लिङ्गं यदुच्यते ।
तत्र या प्रकृतिः प्रोक्ता, सा राजन्-विविधा स्मृता ॥ ४२॥
ஏதத்-ஸூக்ஷ்ம-ஶரீரம்ʼ ஸ்யாத்,
மம லிங்க³ம்ʼ யது³ச்யதே .
தத்ர யா ப்ரக்ருʼதி꞉ ப்ரோக்தா,
ஸா ராஜன்-விவிதா⁴ ஸ்ம்ருʼதா .. 42..
இச்சூக்ஷ்ம ஶரீர சமஷ்டியே எனது
சூக்ஷ்ம சரீரமென்று சொல்லப்படும்.
முக்குணங்களும் பூதங்களோடு
கலக்காமல் இருக்கும் நிலையே ப்ரக்ருதி எனப்படும். ராஜனே! இந்த ப்ரக்ருதி பலவிதமாய் அறியப்படுகிறது.
_________
सत्त्वात्मिका तु माया स्याद्, अविद्या गुण-मिश्रिता ।
स्वाश्रयं या तु संरक्षेत्, सा मायेति निगद्यते ॥ ४३॥
ஸத்த்வாத்மிகா து மாயா ஸ்யாத்³,
அவித்³யா கு³ண-மிஶ்ரிதா .
ஸ்வாஶ்ரயம்ʼ யா து ஸம்ʼரக்ஷேத்,
ஸா மாயேதி நிக³த்³யதே .. 43..
மாயை ஸத்வாத்மிகமாக இருக்கும். அவித்தையில் குணங்களின் கலப்பு
இருக்கும். எந்த ப்ரக்ருதி தனது
ஆஸ்ரயமான இடத்தை ரக்ஷித்துக் கொள்கிறதோ, அது மாயா என்று சொல்லப்படுகிறது.
_________
तस्यां यत्-प्रतिबिम्बं स्याद्, बिम्बभूतस्य चेशितुः ।
स ईश्वरः समाख्यातः, स्वाश्रय-ज्ञानवान् परः ॥ ४४॥
தஸ்யாம்ʼ யத்-ப்ரதிபி³ம்ப³ம்ʼ ஸ்யாத்³,
பி³ம்ப³பூ⁴தஸ்ய சேஶிது꞉ .
ஸ ஈஶ்வர꞉ ஸமாக்²யாத꞉, ஸ்வாஶ்ரய-ஜ்ஞானவான் பர꞉ .. 44..
மாயையில் எது ப்ரதிபலிக்கிறதோ,
அது ஈஸ்வரனின் ப்ரகாஸம்.
ஸத்வ சம்பந்தமான அந்த வித்யையை
அனுஷ்டித்து, ப்ரபஞ்ச விகாரத்தில் உள்முகப்படுகிற பரமான்மாவுக்கு இயற்கை ஞான சொரூபியாகிய
ஈஸ்வரனென்று பெயர்.
_________
Comments
Post a Comment