Devi Geethai 2.20-2.26
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
हिमालय उवाच -
यथा वदसि देवेशि, समष्ट्याऽऽत्म-वपुस्त्विदम् ।
तथैव द्रष्टुमिच्छामि, यदि देवि कृपा मयि ॥ २०॥
ஹிமாலய உவாச -
யதா² வத³ஸி தே³வேஶி,
ஸமஷ்ட்யா(ஆ)த்ம-வபுஸ்த்வித³ம் .
ததை²வ த்³ரஷ்டுமிச்சா²மி,
யதி³ தே³வி க்ருʼபா மயி .. 20..
"ஹே தேவேஶி!
உன்னுடைய ஸமஷ்டி ஆத்ம ரூபமாக இந்த ப்ரபஞ்சம் இருக்கிறது என்று எதை கூறுகிறாயோ, நான் அந்த உன்னுடைய ரூபத்தைப் பார்க்க விரும்புகிறேன், தேவியின் கிருபை எனக்கு கிடைக்குமானால்!" என்று விண்ணப்பித்தார் ஹிமவான்.
__________
व्यास उवाच -
इति तस्य वचः श्रुत्वा, सर्वे देवाः सविष्णवः ।
ननन्दुर्-मुदितात्मानः, पूजयन्तश्च तद्-वचः ॥ २१॥
வ்யாஸ உவாச -
இதி தஸ்ய வச꞉ ஶ்ருத்வா,
ஸர்வே தே³வா꞉ ஸவிஷ்ணவ꞉ .
நனந்து³ர்-முதி³தாத்மான꞉,
பூஜயந்தஶ்ச தத்³-வச꞉ .. 21..
வியாசர் கூறினார்-
இந்த ஹிமவானின் விண்ணப்பத்தைக் கேட்டு, விஷ்ணு முதலிய தேவர்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தவர்களாய் அவ்விண்ணப்பத்தை புகழ்ந்தனர்.
__________
अथ देवमतं ज्ञात्वा, भक्त-काम-दुघा शिवा ।
अदर्शयन्-निजं रूपं, भक्त-काम-प्रपूरिणी ॥ २२॥
அத² தே³வமதம்ʼ ஜ்ஞாத்வா,
ப⁴க்த-காம-து³கா⁴ ஶிவா .
அத³ர்ஶயந்-நிஜம்ʼ ரூபம்ʼ,
ப⁴க்த-காம-ப்ரபூரிணீ .. 22..
பக்தர்களுக்கு வேண்டியதை தரும் தேவி, இவ்வாறாக தேவர்களின் எண்ணத்தைத் தெரிந்து கொண்டு, பக்தர்களின் ஆசையைப் பூர்த்தி செய்பவளாக, தனது நிஜரூபத்தை
(பராத்பரமாகிய, விராட் சொரூபத்தை )
காண்பித்தாள்.
__________
अपश्यंस्ते महादेव्या, विराड-रूपं परात्परम् ।
द्यौर्-मस्तकं भवेद्-यस्य, चन्द्र-सूर्यौ च चक्षुषी ॥ २३॥
அபஶ்யம்ʼஸ்தே மஹாதே³வ்யா,
விராட³ரூபம்ʼ பராத்பரம் .
த்³யௌர்-மஸ்தகம்ʼ ப⁴வேத்³-யஸ்ய,
சந்த்³ர-ஸூர்யௌ ச சக்ஷுஷீ .. 23..
அவர்கள் அனைவரும் (தேவர்கள், ஹிமவான் ) மஹாதேவியின் பராத்பர ரூபமாகிய விராடரூபத்தை பார்த்தார்கள். ஆகாயம் தலையின் மேல்புறமாகவும், சந்திர-ஸுர்யன் அந்த விராட ரூபத்தின் கண்களாகவும் காட்சியளித்தன.
_________
दिशः श्रोत्रे वचो वेदाः, प्राणो वायुः प्रकीर्तितः ।
विश्वं हृदयम्-इत्याहुः, पृथिवी जघनं स्मृतम् ॥ २४॥
தி³ஶ꞉ ஶ்ரோத்ரே வசோ வேதா³꞉,
ப்ராணோ வாயு꞉ ப்ரகீர்தித꞉ .
விஶ்வம்ʼ ஹ்ருʼத³யம்-இத்யாஹு꞉,
ப்ருʼதி²வீ ஜக⁴னம்ʼ ஸ்ம்ருʼதம் .. 24..
திக்குகள் செவிகளாயும், வேதங்கள் வாக்காகவும், வாயு ப்ராணன்களாயும் காட்சியளித்தன. ப்ரபஞ்சம் இதயமாகவும், ப்ருத்வி கீழ்-இடுப்பாகவும் காட்சியளித்தன.
__________
नभस्तलं नाभिसरो, ज्योतिश्-चक्रम्-उरस्थलम् ।
महर्लोकस्तु ग्रीवा स्यात्, जनो लोको मुखं स्मृतम् ॥ २५॥
நப⁴ஸ்தலம்ʼ நாபி⁴ஸரோ,
ஜ்யோதிஶ்-சக்ரம்-உரஸ்த²லம் .
மஹர்லோகஸ்து க்³ரீவா ஸ்யாத்,
ஜனோ லோகோ முக²ம்ʼ ஸ்ம்ருʼதம் .. 25..
ஆகாயம் நாபியாகவும், ஜோதிசக்கரம் மார்பாகவும், மஹர்லோகமே கழுத்தாகவும், ஜனர்லோகமே முகமாகவும் காட்சியளித்தன.
_________
तपो लोको रराटिस्तु, सत्यलोकादधः स्थितः ।
इन्द्रादयो बाहवः स्युः, शब्दः श्रोत्रं महेशितुः ॥ २६॥
தபோ லோகோ ரராடிஸ்து,
ஸத்யலோகாத³த⁴꞉ ஸ்தி²த꞉ .
இந்த்³ராத³யோ பா³ஹவ꞉ ஸ்யு꞉,
ஶப்³த³꞉ ஶ்ரோத்ரம்ʼ மஹேஶிது꞉ .. 26..
சத்தியலோகத்திற்கு கீழே உள்ள தபோலோகம் நெற்றியாகவும், இந்திராதி தேவர்கள் கைகளாகவும், சப்தமே கேட்கும் திறனாகவும், அந்த மகா பிரகாசமான ரூபத்திற்கு இருந்தது.
__________
Comments
Post a Comment