Devi Geethai 2.27-2.31

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

नासत्यदस्रौ नासे स्तौ, गन्धो घ्राणं स्मृतो बुधैः ।
मुखम्-अग्निः समाख्यातो, दिवा-रात्री च पक्ष्मणी ॥ २७॥

நாஸத்யத³ஸ்ரௌ நாஸே ஸ்தௌ, 
க³ந்தோ⁴ க்⁴ராணம்ʼ ஸ்ம்ருʼதோ பு³தை⁴꞉ .
முக²ம்-அக்³னி꞉ ஸமாக்²யாதோ, 
தி³வா-ராத்ரீ ச பக்ஷ்மணீ .. 27..

அஸ்வினி குமாரர்கள் நாசிகளாயும், வாசனையே நுகரும் சக்தியாகவும், அக்னி வாயாகவும், இரவுபகல் இரு கண் இமைகளாகவும் காட்சியளித்தன.

__________

ब्रह्म-स्थानं भ्रू-विजृंभोऽपि, आपस्-तालुः प्रकीर्तिताः ।
रसो जिह्वा समाख्याता, यमो दंष्ट्राः प्रकीर्तिताः ॥ २८॥

ப்³ரஹ்மஸ்தா²னம்ʼ ப்⁴ரூ-விஜ்ருʼம்போ⁴-(அ)பி,
ஆபஸ்-தாலு꞉ ப்ரகீர்திதா꞉ .
ரஸோ ஜிஹ்வா ஸமாக்²யாதா, 
யமோ த³ம்ʼஷ்ட்ரா꞉ ப்ரகீர்திதா꞉ .. 28..

பிரம்மஸ்தானம் புருவ வளைவாகவும், தண்ணீர் மேலண்ணமாகவும், ருசி நாக்காகவும், எமன் கோரப் பற்களாகவும் காட்சியளித்தன.

_________

दन्ताः स्नेहकला यस्य, हासो माया प्रकीर्तिता ।
सर्गस्त्वपाङ्ग-मोक्षः स्याद्, व्रीडोर्ध्वोष्ठो महेशितुः ॥ २९॥

த³ந்தா꞉ ஸ்னேஹகலா யஸ்ய, 
ஹாஸோ மாயா ப்ரகீர்திதா .
ஸர்க³ஸ்த்வபாங்க³-மோக்ஷ꞉ ஸ்யாத்³,
வ்ரீடோ³ர்த்⁴வோஷ்டோ² மஹேஶிது꞉ .. 29..

ஸ்நேஹம் பற்களாகவுயம், புன்னகை மாயையாகவும், மோட்சம் கடைக்கண் பார்வையாகவும், வெட்கம் மேல் உதடு ஆகவும் அந்த மகேஶியிடம் காட்சியளித்தது.

_________

लोभः स्याद्-अधरोष्ठोऽस्या, धर्म-मार्गस्तु पृष्ठभूः ।
प्रजापतिश्च मेढ्रं स्याद्, यः स्रष्टा जगतीतले ॥ ३०॥

லோப⁴꞉ ஸ்யாத்³-அத⁴ரோஷ்டோ² (அ)ஸ்யா, 
த⁴ர்ம-மார்க³ஸ்து ப்ருʼஷ்ட²பூ⁴꞉ .
ப்ரஜாபதிஶ்ச மேட்⁴ரம்ʼ ஸ்யாத்³,
ய꞉ ஸ்ரஷ்டா ஜக³தீதலே .. 30.

ஆசை கீழ் உதடாகவும், தர்மமார்க்கம் பின்பாகமாயும், உலகைப் படைக்கும் பிரஜாபதி ஆண்குறியாகவும், காட்சியளித்தன.

__________

कुक्षिः समुद्रा गिरयो, अस्थीनि देव्या महेशितुः ।
नद्यो नाड्यः समाख्याता, वृक्षाः केशाः प्रकीर्तिताः ॥ ३१॥

குக்ஷி꞉ ஸமுத்³ரா கி³ரயோ,
(அ)ஸ்தீ²னி தே³வ்யா மஹேஶிது꞉ .
நத்³யோ நாட்³ய꞉ ஸமாக்²யாதா, 
வ்ருʼக்ஷா꞉ கேஶா꞉ ப்ரகீர்திதா꞉ .. 31..

சமுத்திரம் வயிறாகவும், மலைகள் எலும்புகளாகவும், நதிகள் நாடிகள் ஆகவும், மரங்கள் ரோமங்களாகவும், மகேஷிதுவாகிய தேவியின் விராட ரூபத்தில் காட்சி அளித்தன.

_________


Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36