Devi Geethai 2.41-2.44

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

अथ ते धैर्यम्-आलम्ब्य, लब्ध्वा च श्रुतिम्-उत्तमाम् ।
प्रेमाश्रु-पूर्ण-नयना, रुद्ध-कण्ठास्तु निर्जराः ॥ ४१॥

அத² தே தை⁴ர்யம்-ஆலம்ப்³ய, 
லப்³த்⁴வா ச ஶ்ருதிம்-உத்தமாம் .
ப்ரேமாஶ்ரு-பூர்ண-நயனா, 
ருத்³த⁴-கண்டா²ஸ்து நிர்ஜரா꞉ .. 41.

மூர்ச்சையிலிருந்து எழுந்த மூப்பற்ற தேவர்கள், உத்தமமான வேதங்களால் நல்லறிவு பெற்று, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் பெருகும் கண்களோடு, தொண்டை விம்மியவாறு இருந்தனர்.

__________

बाष्प-गद्-गद-दया वाचा, स्तोतुं समुप-चक्रिरे ।
देवा ऊचुः -
अपराधं क्षमस्वाम्ब, पाहि दीनांस्त्वद्-उद्भवान् ॥ ४२॥

பா³ஷ்ப-க³த்³-க³த³-த³யா வாசா, 
ஸ்தோதும்ʼ ஸமுப-சக்ரிரே .
தே³வா ஊசு꞉ -
அபராத⁴ம்ʼ க்ஷமஸ்வாம்ப³, 
பாஹி தீ³னாம்ʼஸ்த்வத்³-உத்³ப⁴வான் .. 42..

பெருகிய கண்ணீரால் தழுதழுக்கும் குரலில், தேவியை துதிக்கத் தொடங்கினர். 
தேவர்கள் கூறினர்: 
ஹே அம்பா! எங்களுடைய அபராதங்களை பொறுத்தருள்வாய். உன்னிடமிருந்து உற்பத்தியான தீனர்களான எங்களை இரட்சிப்பாய்!

_________

कोपं संहर देवेशि, सभया रूप-दर्शनात् ।
का ते स्तुतिः प्रकर्तव्या, पामरैर्-निजरैर्-इह ॥ ४३॥

கோபம்ʼ ஸம்ʼஹர தே³வேஶி, 
ஸப⁴யா ரூப-த³ர்ஶனாத் .
கா தே ஸ்துதி꞉ ப்ரகர்தவ்யா, 
பாமரைர்-நிஜரைர்-இஹ .. 43

ஹே தேவேசி! உன்னுடைய கோபத்தை நீக்கிக் கொள்வாயாக. உன்னுடைய விராட் ரூப தரிசனத்தால் பயத்துடன் கூடிய பாமர தேவர்களான எங்களால், உன்னுடைய பராக்ரமத்தையும் சொரூபத்தையும் எவ்வாறு நன்றாக துதி செய்ய முடியும்?

_________

स्वस्यापि-अज्ञेय एवासौ, यावान्-यश्च स्व-विक्रमः ।
तदर्वाग्-जायमानानां, कथं स विषयो भवेत् ॥ ४४॥

ஸ்வஸ்யாபி-அஜ்ஞேய ஏவாஸௌ, 
யாவான்-யஶ்ச ஸ்வ-விக்ரம꞉ .
தத³ர்வாக்³-ஜாயமானானாம்ʼ, 
கத²ம்ʼ ஸ விஷயோ ப⁴வேத் .. 44..

உன்னுடைய பராக்கிரமத்தின் முழு தன்மையை நீயும் அறிந்தவள் அல்ல. அப்படி இருக்கையில், பின்னர் உண்டான நாங்கள், உன் பராக்கிரமத்தை நாங்கள் எப்படி துதிக்க வல்லோம்?

_________


Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36