Devi Geethai 3.1-3.6
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
॥ अथ तृतीयोऽध्यायः ॥
मोक्षंप्रति ज्ञानस्य आवश्यकता ।
.. அத² த்ருʼதீயோ(அ)த்⁴யாய:
மோக்ஷம்ப்ரதி ஞானஸ்ய ஆவஸ்யகதா
..
இனி மூன்றாவது அத்தியாயம்.
மோக்ஷத்திற்கு ஞானத்தின் அவசியம்.
_________
श्रीदेव्युवाच -
क्व यूयं मन्द-भाग्या वै, क्वेदं रूपं महाद्भुतम् ।
तथापि भक्त-वात्सल्याद्, ईदृशं दर्शितं मया ॥ १॥
ஶ்ரீதே³வ்யுவாச -
க்வ யூயம்ʼ மந்த³-பா⁴க்³யா வை,
க்வேத³ம்ʼ ரூபம்ʼ மஹாத்³பு⁴தம் .
ததா²பி ப⁴க்த-வாத்ஸல்யாத், ஈத்³ருʼஶம்ʼ த³ர்ஶிதம்ʼ மயா .. 1..
தேவி கூறினாள்:
மந்த புத்தி உடையவர்களாக நீங்கள் உள்ள போதிலும், மகா அற்புதமான என்னுடைய ரூபம், பக்தர்களிடம் எனக்குள்ள கிருபையால் இவ்வாறு என்னால் உங்களுக்கு காண்பிக்கப்பட்டது.
__________
न वेदाध्ययनैर्-र्योगैर्, न दानैस्-तपसेज्यया ।
रूपं द्रष्टुमिदं शक्यं, केवलं मत्कृपां विना ॥ २॥
ந வேதா³த்⁴யயனைர்-யோகை³ர்,
ந தா³னைஸ்-தபஸேஜ்யயா .
ரூபம்ʼ த்³ரஷ்டுமித³ம்ʼ ஶக்யம்ʼ,
கேவலம்ʼ மத்க்ருʼபாம்ʼ வினா .. 2..
என்னுடைய கிருபையின்றி வெறும் வேத அத்யயானம், யோகம் ,தானம் ,தபஸ் முதலியவைகளால் மட்டும் இந்த மகா அற்புதமான ரூபத்தை தரிசிக்க இயலாது.
_________
प्रकृतं शृणु राजेन्द्र, परमात्मात्र जीवताम् ।
उपाधि-योगात्-सम्प्राप्तः, कर्तृत्वादिकम्-अप्युत ॥ ३॥
ப்ரக்ருʼதம்ʼ ஶ்ருʼணு ராஜேந்த்³ர,
பரமாத்மாத்ர ஜீவதாம் .
உபாதி⁴-யோகா³த்-ஸம்ப்ராப்த꞉
கர்த்ருʼத்வாதி³கம்-அப்யுத .. 3..
ஹே ராஜேந்திரா!
உண்மையைக் கூறுகிறேன், கேள். பரமாத்மா, இந்த சிருஷ்டியில் ( இந்திரியங்கள், மனசு முதலிய ) லக்ஷணங்களை அடைந்து, அதனால் மேலும் செயல்படும் தன்மையை அடைந்து ஜீவாத்மாவாகிறது.
_________
क्रियाः करोति विविधा, धर्माधर्मैक-हेतवः ।
नाना-योनीस्-ततः प्राप्य, सुख-दुःखैश्च युज्यते ॥ ४॥
க்ரியா꞉ கரோதி விவிதா⁴,
த⁴ர்மாத⁴ர்மைக-ஹேதவ꞉ .
நானா-யோனீஸ்-தத꞉ ப்ராப்ய,
ஸுக²-து³꞉கை²ஶ்ச யுஜ்யதே .. 4.
ஜீவாத்மா பல்வேறு தர்ம-அதர்ம காரியங்கள் செய்கிறான்.
அதன்படி பல்வேறு பிறவிகள் பெற்று, முன்னர் செய்த காரியங்களுக்கேற்ற சுக-துக்கங்களை அடைகின்றான்.
_________
पुनस्-तत्-संस्कृति-वशात्, नाना-कर्मरतः सदा ।
नाना-देहान्-समाप्नोति, सुख-दुःखैश्च युज्यते ॥ ५॥
புனஸ்-தத்-ஸம்ʼஸ்க்ருʼதி-வஶாத்,
நாநா-கர்மரத꞉ ஸதா³ .
நாநா-தே³ஹான்-ஸமாப்னோதி,
ஸுக²-து³꞉கை²ஶ்ச யுஜ்யதே .. 5..
மேலும் தன் கலாசாரத்தின் தன்மையாலும் பலவித கர்மங்களை செய்து பல்வேறு தேகங்களை அடைந்து சுக-துக்கங்களை அடைகின்றான்.
_________
घटी-यन्त्रवद्-एतस्य, न विरामः कदापि हि ।
अज्ञानमेव मूलं स्यात्, ततः कामः क्रियास्-ततः ॥ ६॥
க⁴டீ-யந்த்ரவத்³-ஏதஸ்ய,
ந விராம꞉ கதா³பி ஹி .
அஜ்ஞானமேவ மூலம்ʼ ஸ்யாத்,
தத꞉ காம꞉ க்ரியாஸ்-தத꞉ .. 6..
காலசக்கரத்தைப் போல், இந்த பிறவிச்சுழல் நிற்காமல் நடந்து கொண்டே இருக்கும். இதற்கு மூலகாரணம் அஞ்ஞானம். அதன்பின் ஆசையை ஒட்டி செய்யும் செயல்கள் காரணமாகின்றன.
________
Comments
Post a Comment