Devi Geethai 3.7-3.11

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

तस्माद्-अज्ञान-नाशाय, यतेत नियतं नरः ।
एतद्धि जन्म-साफल्यं, यदज्ञानस्य नाशनम् ॥ ७॥

தஸ்மாத்³-அஜ்ஞானநாஶாய, 
யதேத நியதம்ʼ நர꞉ .
ஏதத்³தி⁴ ஜன்ம-ஸாப²ல்யம்ʼ, 
யத³ஜ்ஞானஸ்ய நாஶனம் .. 7..

ஆகையால், மானிடனாய் பிறந்தவன், (ஜனன மரணத்திற்கு மூல காரணமாகிய) அஞ்ஞானத்தை நாசம் செய்யும் விஷயத்தில் நியமம் உள்ளவனாய் முயற்சி செய்ய வேண்டும்.  அஞ்ஞான நாசமே ஜன்ம சாபல்யம் ஆகும்.

__________

पुरुषार्थ-समाप्तिश्च, जीवन्-मुक्ति-दशाऽपि च ।
अज्ञान-नाशने शक्ता, विद्यैव तु पटीयसी ॥ ८॥

புருஷார்த²-ஸமாப்திஶ்ச, 
ஜீவன்-முக்தி-த³ஶா(அ)பி ச .
அஜ்ஞான-நாஶனே ஶக்தா, 
வித்³யைவ து படீயஸீ .. 8.

அஞ்ஞானம் அழிந்தால், புருஷார்த்தங்கள் முடிவடையும்.
அஃது உண்டாயின் ஜீவன் முக்தன் ஆக முடியும். அவனே ஜென்ம சாபல்யம் அடைவான். அஞ்ஞானத்தை அழிக்கும் வல்லமை ஞானத்திற்கு மட்டுமே உள்ளது.

நியமத்துடன் முயற்சி 
                  ↓
அஞ்ஞான நாசம்
                  ↓
 புருஷார்த்த முடிவு
                  ↓
 ஜீவன் முக்தி 
                  ↓
ஜன்ம சாபல்யம்.

_________

न कर्म तज्जं नोपास्तिः, विरोधाभावतो गिरे ।
प्रत्युताशा-ऽज्ञान-नाशे, कर्मणा नैव भाव्यताम् ॥ ९॥

ந கர்ம தஜ்ஜம்ʼ நோபாஸ்தி:,
விரோதா⁴பா⁴வதோ கி³ரே .
ப்ரத்யுதாஶா-(அ)ஜ்ஞான-நாஶே, 
கர்மணா நைவ பா⁴வ்யதாம் ..9

அக்ஞானத்திலிருந்து விளைந்த கர்மாவால் அதே அஞ்ஞானத்தை அழிக்க முடியாது, ஏனெனில், அஞ்ஞானத்திற்கும் கர்மாவுக்கும் விரோத பாவம் இல்லை,
ஓ கிரிராஜனே! மேலும், அஞ்ஞானத்தை கர்மாவால் அழிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உபயோகமற்றது.

________

अनर्थदानि कर्माणि, पुनः पुनरुशन्ति हि ।
ततो रागस्-ततो दोषस्, ततोऽनर्थो महान्-भवेत् ॥ १०॥

அனர்த²தா³னி கர்மாணி, 
புன꞉ புனருஶந்தி ஹி .
ததோ ராக³ஸ்-ததோ தோ³ஷஸ்,
ததோ(அ)னர்தோ² மஹான்-ப⁴வேத் .. 10..

அனர்த்தமான கர்மாக்கள், விஷய
போகத்தில் இச்சையையும், அவ்விச்சையின் வழியே துவேஷத்தையும் மாறி மாறி விளைவித்து, மகத்தான அனர்த்தத்தை செய்து வருவதால், அவைகளால் அஞ்ஞானம் அழியாது.

_________

तस्मात्-सर्व-प्रयत्नेन, ज्ञानं सम्पादयेन्नरः ।
कुर्वन्नेवेह कर्माणि, इत्यतः कर्माप्यवश्यकम् ॥ ११॥

தஸ்மாத்-ஸர்வ-ப்ரயத்னேன, 
ஜ்ஞானம்ʼ ஸம்பாத³யேன்னர꞉ .
குர்வன்னேவேஹ கர்மாணி,
இத்யத꞉ கர்மாப்யவஶ்யகம் .. 11..

அதனால் அனைத்து வித முயற்சிகளை மேற்கொண்டு, மனிதர்கள் ஞானத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்கு ஆசையோ வெறுப்போ இல்லாத கர்மங்களை செய்வது அவசியம்.

__________

Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36