Devi Geethai 3.30-3.34

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

उपाधि-विलये जाते, केवलात्मा-अवशिष्यते ।
देह-त्रये पञ्च-कोशाः, अन्तस्थाः सन्ति सर्वदा ॥ ३०॥

உபாதி⁴-விலயே ஜாதே, 
கேவலாத்மா-(அ)வஶிஷ்யதே .
தே³ஹத்ரயே பஞ்சகோஶா:, 
அந்தஸ்தா²꞉ ஸந்தி ஸர்வதா³ .. 30..

உபாதிகள் நீங்கும்போது, ஆத்மா
மாத்திரமே மீதமிருக்கிறது. பஞ்சகோஶங்கள் ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேஹங்களுக்குள்ளேயே
எப்போதும் இருக்கின்றன. 

_________

पञ्च-कोश-परित्यागे, ब्रह्म-पुच्छं हि लभ्यते ।
नेति नेतीत्यादि-वाक्यै:, मम रूपं यदुच्यते ॥ ३१॥

பஞ்ச-கோஶ-பரித்யாகே³, 
ப்³ரஹ்ம-புச்ச²ம்ʼ ஹி லப்⁴யதே .
நேதி நேதீத்யாதி³-வாக்யை:, 
மம ரூபம்ʼ யது³ச்யதே .. 31..

பஞ்சகோஶங்களை நீக்கினால், ப்ரம்மனுடைய நுனியை
அடையலாம். 'நேதி நேதி' என்ற 'இதுவல்ல இதுவல்ல' போன்ற வாக்கியங்களால்
விளக்கப்படுவது, என்னுடைய ப்ரம்ம சித்ரூபமே.

_________

न जायते म्रियते वा कदाचित्,
     नायं भूत्वा न बभूव कश्चित् ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणः,
     न हन्यते हन्यमाने शरीरे ॥ ३२॥

ந ஜாயதே ம்ரியதே வா கதா³சித்,
நாயம்ʼ பூ⁴த்வா ந ப³பூ⁴வ கஶ்சித் .
அஜோ நித்ய꞉ ஶாஶ்வதோ(அ)யம்ʼ புராண:,
ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே .. 32..

இந்த ப்ரம்மமாகிய ஆத்மா எப்போழுதும்
பிறப்பதில்லை, இறப்பதில்லை, முன்
இல்லாத நிலைக்குப்பின் தோன்றியதில்லை," ஜனிப்பதில்லை, நித்யவஸ்து, ஸாஸ்வதமாய் இருப்பது, 
புராதனமானது. சரீரம் கொல்லப்படும் போது இது கொல்லப்படுவதும் இல்லை.

_________

हन्ता चेन्-मन्यते हन्तुं, हतश्चेन्-मन्यते हतम् ।
उभौ तौ न विजानीतः, नायं हन्ति न हन्यते ॥ ३३॥

ஹந்தா சேன்-மன்யதே ஹந்தும்ʼ, ஹதஶ்சேன்-மன்யதே ஹதம் .
உபௌ⁴ தௌ ந விஜானீத:, 
நாயம்ʼ ஹந்தி ந ஹன்யதே .. 33..

கொல்பவன், 'நான் கொல்கிறேன்' என்றும்,
கொல்லப்படுபவன், 'நான் கொல்லப்பட்டேன்' என்றும், நினைப்பாராயின், இருவருமே உண்மையை அறிந்தவரல்லர். இவன் கொல்வதும் இல்லை, அவன் கொல்லப்படுவதும் இல்லை. ஏனென்றால் ஆன்மாவை கொல்ல முடியாது.

__________

अणोरणीयान्-महतो महीयान्,
      आत्माऽस्य जन्तोर्निहितो गुहायाम् ।
तमक्रतुः पश्यति वीतशोको,
      धातु-प्रसादान्-महिमानमस्य ॥ ३४॥

அணோரணீயான்-மஹதோ மஹீயான்,
ஆத்மா(அ)ஸ்ய ஜந்தோர்-நிஹிதோ கு³ஹாயாம் .
தமக்ரது꞉ பஶ்யதி வீதஶோகோ,
 தா⁴து-ப்ரஸாதா³ன்-மஹிமாநமஸ்ய .. 34

அணுவுக்கு அணுவாகவும், மஹத்துக்கு மஹத்தாகவும் இருக்கின்ற இந்த பரமாத்மா, சகல ப்ராணிகளுடைய இருதய குகையில் இருக்கிறது. ஆசையற்றவனும்,
துக்கமற்றவனுமான ஜீவாத்மா, அந்த பரப்பிரம்மத்தின் ப்ரஸாதத்தால், இப்படிப்பட்ட பரமாத்மாவின் மகிமைகளை, தானும் உடையவனாகிறான்.

________


Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36