Devi Geethai 2.1-2.6
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
॥ अथ द्वितीयोऽध्यायः ॥
அத² த்³விதீயோ-(அ)த்⁴யாய꞉
இனி இரண்டாம் அத்தியாயம்.
தேவி விஸ்வரூப தரிசனம்.
______________________________
देव्युवाच -
मन्-माया-शक्ति-संक्लृप्तं, जगत्-सर्वं चराचरम् ।
सापि मत्तः पृथङ् माया, नास्त्येव परमार्थतः ॥ १॥
தே³வ்யுவாச -
மன்-மாயா-ஶக்தி-ஸங்க்ல்ருʼப்தஞ்,
ஜக³த்ஸர்வம்ʼ சராசரம் .
ஸாபி மத்த꞉ ப்ருʼத²ங் மாயா,
நாஸ்த்யேவ பரமார்த²த꞉ .. 1..
என்னுடைய மாயா சக்தியினால் அசையும் மற்றும் அசையாததாய் உள்ள அனைத்தும் உண்டாக்கப்பட்டன.
அந்த மாயையும் கூட, உண்மையில் என்னைவிட்டு வேறாக இல்லவே இல்லை.
_________
व्यवहार-दृशा सेयं, मायाऽविद्येति विश्रुता ।
तत्त्व-दृष्ट्या तु नास्त्येव, तत्त्वम्-एवास्ति केवलम् ॥ २॥
வ்யவஹார-த்³ருʼஶா ஸேயம்ʼ,
மாயா(அ)வித்³யேதி விஶ்ருதா .
தத்த்வ-த்³ருʼஷ்ட்யா து நாஸ்த்யேவ,
தத்த்வம்-ஏவாஸ்தி கேவலம் .. 2..
அந்த மாயா ஶக்தி , விவகாரமாய் பார்க்கும்போது, அவித்யை என்று சொல்லப்படும். அதையே தத்வமாய் பார்க்கும்போது, அது தனித்து தெரிவதில்லை. வெறும் தத்துவம் மட்டுமே உள்ளது என்பது புரியும்.
__________
साहं सर्वं जगत्-सृष्ट्वा, तदन्तः प्रविशाम्यहम् ।
माया कर्मादि-सहिता, गिरे प्राण-पुरःसरा ॥ ३॥
ஸாஹம்ʼ ஸர்வம்ʼ ஜக³த்-ஸ்ருʼஷ்ட்வா,
தத³ந்த꞉ ப்ரவிஶாம்யஹம் .
மாயா கர்மாதி³-ஸஹிதா,
கி³ரே ப்ராண-புர꞉ஸரா .. 3..
அப்படி மாயா வித்யையாக இருக்கும்
நான், ஜகத்தை ஸ்ருஷ்டித்து, அதனுள்
அந்தர்யாமியாக இருக்கிறேன்.
ஆத்மாக்களின் நலனை முன்னிட்டு, மாயை, கர்மாதி ஸஹிதமாய் ஜகத்தில்
இருக்கிறது.
__________
लोकान्तर-गतिर्नो चेत्, कथं स्याद्-इति हेतुना ।
यथा यथा भवन्त्येव, मायाभेदास्-तथा तथा ॥ ४॥
லோகாந்தர-க³திர்னோ சேத்,
கத²ம்ʼ ஸ்யாத்³-இதி ஹேதுனா .
யதா² யதா² ப⁴வந்த்யேவ
மாயாபே⁴தா³ஸ்-ததா² ததா² .. 4..
நான் லோகத்துள் அந்தர்யாமியாக இல்லாவிட்டால், மாயா பேதங்கள் எவ்வாறு பலவிதமாய் உள்ளனவோ, அவ்வாறு ஜீவன்கள் பலவிதமாய் எங்ஙனம் இருக்க முடியும்?
அதற்காகவே நான் லோகத்தில் அந்தர்யாமியாக இருக்கிறேன்.
__________
उपाधि-भेदाद्-भिन्नाऽहं, घटाकाशादयो यथा ।
उच्च-नीचादि वस्तूनि, भासयन्-भास्करः सदा ॥ ५ ॥
உபாதி⁴-பே⁴தா³த்³-பி⁴ன்னா(அ)ஹம்ʼ,
க⁴டாகாஶாத³யோ யதா² .
உச்ச-நீசாதி³ வஸ்தூனி,
பா⁴ஸயன்-பா⁴ஸ்கர꞉ ஸதா³ .. 5 ..
குடத்துள்ளிருக்கும் ஆகாசமும், வெளியே உள்ள ஆகாசமும் வேறுவேறு அல்ல. ஜீவன்கள் வெவ்வேறு தன்மைகள் கொண்டிருந்தாலும், அவற்றுள் இருக்கும் எனக்கு அந்த பேதங்கள் இல்லை. உயர்ந்த-தாழ்ந்த வஸ்து அனைத்தையும் ஸூர்யன் எப்போதும் ஒரே மாதிரி ப்ரகாசப் படுத்துகிறது.
__________
न दुष्यति तथैवाहं, दोषैर्-लिप्ता कदापि न ।
मयि बुद्ध्यादि-कर्तृत्वं, मध्यस्यैवापरे जनाः ॥ ६॥
ந து³ஷ்யதி ததை²வாஹம்ʼ,
தோ³ஷைர்-லிப்தா கதா³பி ந .
மயி பு³த்³த்⁴யாதி³-கர்த்ருʼத்வ,
மத்⁴யஸ்யைவாபரே ஜனா꞉ .. 6
உயர்ந்த தாழ்ந்த வஸ்து என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லாவற்றையும் ஒரே மாதிரி ப்ரகாசப்
படுத்தும் சூர்யன், அந்த வஸ்துக்களுடைய குண-தோஷங்களை அடைவதில்லை. அதுபோன்றே, ஜீவன்களுடைய தோஷங்கள் என்னை ஒருபோதும் அண்டுவதில்லை.
__________
Comments
Post a Comment