Devi Geethai 3.18-3.23
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
वेदान्त-श्रवणं कुर्यात्, नित्यमेवम्-अतन्द्रितः ।
तत्त्वमसि-आदि-वाक्यस्य, नित्यमर्थं विचारयेत् ॥ १८॥
வேதா³ந்த-ஶ்ரவணம்ʼ குர்யாத்,
நித்யமேவம்-அதந்த்³ரித꞉ .
தத்த்வமஸி-ஆதி³-வாக்யஸ்ய,
நித்யமர்த²ம்ʼ விசாரயேத் .. 18..
வேதாந்தத்தை தினமும்
கவனமாக ஸ்ரவணம்
செய்ய வேண்டும்.
'தத்வமஸி' என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை தினமும்
விசாரம் செய்ய வேண்டும்.
_________
तत्त्वमस्यादि-वाक्यं तु, जीव-ब्रह्मैक्य-बोधकम् ।
ऐक्ये ज्ञाते निर्भयस्तु, मद्रूपो हि प्रजायते ॥ १९॥
தத்த்வமஸ்யாதி³-வாக்யம்ʼ து,
ஜீவ-ப்³ரஹ்மைக்யபோ³த⁴கம் .
ஐக்யே ஜ்ஞாதே நிர்ப⁴யஸ்து,
மத்³ரூபோ ஹி ப்ரஜாயதே .. 19.
தத்வமஸி என்ற மஹா வாக்யம், ஜீவ-ப்ரஹ்ம ஐக்கியத்தை போதிக்கிறது. இந்த ஐக்கியத்தை உணர்ந்தவன், ஜனன-மரண பயமற்று, எனது
சொரூப ஸித்தியை அடைகிறான்.
_________
पदार्थावगतिः पूर्वं, वाक्यार्थावगतिस्-ततः ।
तत्-पदस्य च वाच्यार्थो, गिरेऽहं परिकीर्तितः ॥ २०॥
பதா³ர்தா²வக³தி꞉ பூர்வம்ʼ வாக்யார்தா²வக³திஸ்தத꞉ .
தத்பத³ஸ்ய ச வாச்யார்தோ² கி³ரே(அ)ஹம்ʼ பரிகீர்தித꞉ .. 20..
ஹிமவானே! முதலில் 'தத்வமஸி'
என்ற மகா-வாக்யத்தில் உள்ள சொற்களின் அர்த்த ஞானம் உண்டாக வேண்டும். அதன் பின்னர், அந்த சொற்களாலான வாக்கிய அர்த்த ஞானமும் உண்டாக வேண்டும்.
தத் பதத்தின் வாக்யார்த்தம், என்னை (தேவியை) குறிக்கிறது.
_________
त्वं-पदस्य च वाच्यार्थो, जीव एव न संशयः ।
उभयोर्-ऐक्यम्-असिना, पदेन प्रोच्यते बुधैः ॥ २१॥
த்வம்-பத³ஸ்ய ச வாச்யார்தோ²,
ஜீவ ஏவ ந ஸம்ʼஶய꞉ .
உப⁴யோர்-ஐக்யம்-அஸினா,
பதே³ன ப்ரோச்யதே பு³தை⁴꞉ .. 21..
'த்வம்' பதத்தின் வாக்யார்த்தம்,
ஜீவனையே குறிக்கிறது. இதில் ஸந்தேகமில்லை. ப்ரம்மம், ஜீவன் ஆகிய இரண்டின் ஐக்யம், 'அஸி' என்ற பதத்தால் குறிக்கப்படுகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
_________
वाच्यार्थयोर्-विरुद्धत्वात्, ऐक्यं नैव घटेत ह ।
लक्षणाऽतः प्रकर्तव्या, तत्त्वमोः श्रुति-संस्थयोः ॥ २२॥
வாச்யார்த²யோர்-விருத்³த⁴த்வாத்,
ஐக்யம்ʼ நைவ க⁴டேத ஹ .
லக்ஷணா(அ)த꞉ ப்ரகர்தவ்யா,
தத்த்வமோ꞉ ஶ்ருதிஸம்ʼஸ்த²யோ꞉ .. 22..
தத் , த்வம் பதங்களின் வாச்சிய அர்த்தங்கள் வெவ்வேறாக இருப்பதால், இவ்விரண்டின்
ஐக்கியம் புலப்படுவதில்லை.
ஆனால், வேதத்தில் கூறப்பட்ட தத், த்வம் பதங்களின் லக்ஷ்யார்தத்தைக் கொண்டு , இவ்விரண்டின் ஐக்கியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
_________
चिन्मात्रं तु तयोर्-लक्ष्यं, तयोरैक्यस्य संभवः ।
तयोरैक्यं तथा ज्ञात्वा, स्वाभेदेनाद्वयो भवेत् ॥ २३॥
சின்மாத்ரம்ʼ து தயோர்-லக்ஷ்யம்ʼ,
தயோரைக்யஸ்ய ஸம்ப⁴வ꞉ .
தயோரைக்யம்ʼ ததா² ஜ்ஞாத்வா,
ஸ்வாபே⁴தே³நாத்³வயோ ப⁴வேத் .. 23
தத், த்வம் பதங்கள் இரண்டிற்கும் லக்ஷ்யார்த்தம் சின்-மாத்திரமே. ஆதலால், இரண்டின் ஐக்கியம் ஸம்பவிக்கிறது. தத், த்வம் பதங்களின் சித்ரூப லக்ஷணத்தால், பேதமற்ற அத்வைத நிலையை அறிந்து கொண்டவனுக்கு, இரண்டின் ஐக்கியம்
கைகூடுகிறது.
_________
Comments
Post a Comment